Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்ஹெய்மை ஓரங்கட்டும் இலங்கையின் முயற்சி தோல்வி
#1
இனப்பிரச்சினை விடயத்தில் அனுசரணைத் தரப்பான நோர் வேயைக் கையாள்வதில் இலங்கையின் புதிய அரசுத் தலைமை தொடர்ந்தும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றது.
முதலில், அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் இந்தியாவைக் கொண்டுவந்து சொருகுவதற்கு புதிய ஜனாதிபதியும், அவரது சார்பில் இலங்கை விடயங்களின் கொள்கை வகுப்பாளர்களும் திட்டம் தீட்டினர். ஆனால் அது பலிக்க வில்லை. நோர்வேயை அனுசரணைப் பணியில் தொடர்ந்து பேணு மாறு இந்தியாவே, இலங்கை அரசுத் தலைமைக்கு "அன்புக் கட் டளை' யிட்டதை அடுத்து வேறு வழியின்றி "பழைய குருடி கதவைத் திறவடி' என்ற கணக்கில், நோர்வேயின் கதவைப் போய்த் தட்டியது இலங்கையின் புதிய அரசு.
அத்தோடு அமையவில்லை. நோர்வேத் தரப்பில் இவ்விடயங்களை அனுசரணைப் பணிகளை முன்னின்று மேற்கொண்டு வரும் அந்த நாட்டின் தற்போதைய அமைச்சரும், இலங்கை அனுசரணைப் பணிக்கான நோர்வேயின் விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை இவ்விடயத்திலிருந்து வெட்டிவிட இலங்கைத் தரப்பில் திட்டம் தீட் டப்பட்டது.
நோர்வேத் தரப்பை "கட்' பண்ண எடுத்த முயற்சி தோற்றது போலவே, எரிக் சொல்ஹெய்மை ஒதுக்கிவிட எடுத்த இலங்கையின் முயற்சியும் தோற்றுப்போய்விட்டதாக விடயமறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சொல்ஹெய்மை ஓரங்கட்டும் செயற்பாட்டுக்குப் பொறுப்பேற்றவர் புதிய இலங்கை அரசின் புதிய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர.
தனி மனிதர்களில் தங்கியிராமல், அமைதி முயற்சிகளையும் அதற்கான அனுசரணைப் பணிகளையும் நோர்வே, இலங்கை ஆகியவற்றின் வெளிவிவகார அமைச்சுகள் மட்டத்தில் கையாளலாமே என்ற யோசனைத் திட்டத்துடன்தான் நோர்வேயை அணுகினார் அமைச்சர் மங்கள சமரவீர. ஆனால், ஆரம்பத்திலேயே அந்த முயற்சிக்கு "வெட்டு ஒன்று துண்டு இரண்டாக' பதிலளித்து, அத்திட்டத்தை முறியடித்து விட்டார் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் ஸ்ரோரர் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.
நோர்வே வெளிவிவகார அமைச்சையும், அந்த நாட்டு அரசையும் பொறுத்தவரை எரிக் சொல்ஹெய்ம் முக்கியமான அரசியல் பிரமுகர். தற்போது அங்கு புதிதாகப் பதவியேற்றிருக்கும் சிவப்பு பச்சைக் கூட்டரசின் அச்சாணியாகச் செயற்பட்டு, பல்வேறு கட்சிகளை ஒரு குடையின் கீழ் ஒன்றுபட வைத்து, கூட்டமைப்பை வெற்றிப்பாதை யில் அமையச் செய்ததில் சொல்ஹெய்முக்குக் கணிசமான பங்கு உண்டு. வெளிவிவகாரக் கொள்கைகளில் வெவ்வேறு துருவங்களில் நிற்கக் கூடிய பல்வேறு கட்சிகளை அக்கொள்கை விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கவைத்து, "முரண் பாட்டில் ஐக்கியம்' என்ற சித்தாந் தத்தில் புதிய நோர்வே அரசை ஆக்கபூர்வமான பாதையில் இட்டுச் செல்லவைத்தமைக்காக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான எரிக் சொல்ஹெய்ம் விதந்துரைக்கப்படுபவர். அத்தகைய ஒருவரை அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சு மூலமே, அவர் இதுவரை ஆற்றி வந்த முக்கியமான பணியிலிருந்து கழற்றிவிட இலங்கைத் தரப்பு முயற்சித்தால் அதற்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விட்டுக் கொடுக்குமா? இந்த அடிப்படை புரியாமல் முயற்சியில் ஈடுபட்டு மூக்குடைபட்டுப்போய்க் கிடக்கிறார் அமைச்சர் சமரவீர.
அதுமட்டுமல்ல. இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் விடயத்தில் அனுசரணைப் பணி வகித்த விவகாரம் தொடர் பாக நோர்வேயில் முன் அனுபவம் கொண்டவர்கள் மூவர்தான்.
ஒருவர் எரிக் சொல்ஹெய்ம். மற்றவர் அந்நாட்டின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிஸன். மூன்றாவது பிரமுகர் இலங்கைக்கான நோர்வேத் தூதுவராக முன்னர் பணியாற்றிய ஜோன் வெஸ்ட்பேர்க்.
இவர்களில் விடார் ஹெல்கிஸன் இடம்பெற்ற முன்னைய நோர்வே அரசு, கடந்த செப்ரெம்பர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, ஹெல்கிஸன் நோர்வேயிலிருந்து வெளியேறிவிட்டார். அவரது மனைவி சுவீடன் நாட்டவர் என்பதால் ஹெல்கிஸன் இப் போது சுவீடனில் தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராகப் பணி புரிகின்றார். அவர் இலங்கை அனுசரணைப் பணிக்கு உதவும் பதவி ஒன்றை ஏற்று சேவையாற்ற வாய்ப்புகள் இல்லை.
அதேபோல, தற்போது புதுடில்லியில் நோர்வேயின் தூதுவராக இருக்கும் ஜோன் வெஸ்ட்பேர்க்கும் இப்பொறுப்பை ஏற்கும் சாத்தியம் இல்லை.
ஆகவே, இலங்கை அனுசரணைப்பணி விடயத்தில் முன் அனு பவம் பெற்ற பொருத்தமான வேறு பிரமுகர் எவரும் இல்லை என்ப தால் எரிக் சொல்ஹெய்மை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கும் நிலைமையில் நோர்வேத் தரப்பு இல்லவே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
அது மட்டுமல்லாமல், இலங்கையில் மேற்படி அனுசரணைப்பணி என்பது ஓர் அரசுக்கும் ஓர் இயக்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் வெறும் தொடர்பாடல் என்று நோர்வே கருதவில்லை என அந்த அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதில் தனி மனிதர்கள், அவர்களுடைய ஆளுமைகள், பங்களிப்புகள், பண்புகள், தீர்மானங்கள், தலைவர்களின் செயற்பாடுகள் எனப் பல விடயங்கள் அடங்கியிருக்கின்றன என நோர்வே கருதுகின்றது.
எனவே, கையாளும் பிரமுகரின் தனித்துவத்திலும் இந்த அனு சரணைப் பணியின் உயரிய மாண்பு தங்கியிருப்பதாகக் கொள்ளும் நோர்வே அரசு, ஆகையால் அந்தப் பணியை முன்னெடுப்பதற்கு வழிகாட்டப்பொருத்தமானவர் எரிக் சொல்ஹெய்மே என்று எண்ணு கிறது.
அனுசரணைப் பணி தொடர்பான பிரமுகர்களுடனும், தலைவர் களுடனும் நெருங்கிய தொடர்பாடல்களையும் ஆத்மபூர்வமான நட்பையும் பேணிவரும் எரிக் சொல்ஹெய்மே இப்பணியில் நீடிப்பது மிகப் பொருத்தமானது சாலவும் சிறந்தது என்று நோர்வே அரசுத் தலைமை முடிவு செய்திருக்கின்றது. புதிய இலங்கை அரசின் தனி நபர்களுக்காகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள நோர்வே தயாரில்லை.
எனினும், தமது புதிய பொறுப்புகள் காரணமாக இலங்கை விவகாரத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு சொல்ஹெய்மால் முடியாவிட்டால், அவரே தமக்குக் கீழ் உதவியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் இவ்விடயத்தைக் கையாளலாம் என்ற ஆலோசனை முடிவு நோர்வே அரசுத்தலைமை மட்டத்தில் எடுக்கப்பட்டி ருக்கின்றது.
இந்தப் பின்னணிகளில் பார்க்கும் போது சொல்ஹெய்மை அனுசரணைப் பணியிலிருந்து ஓரம் கட்டும் இலங்கைத் தரப்பின் எதிர்பார்ப்பு பகற்கனவாகவே முடியும் என்பது உறுதிப்படுகின்றது.

http://www.uthayan.com/editor.html
" "
Reply
#2
அண்ணா கனோன்.. உங்கள் செய்தி நோர்வேஜியன் இணையத்தளத்திலும் வந்திருக்கின்றது.. நொஸ்க் தெரிந்தவர்களுக்காக..

http://pub.tv2.no/nettavisen/verden/article521424.ece
8
Reply
#3
ஏனண்ணா சூரியபாலா , நீங்களே மொழி பெயர்த்துப் போடலாமே அண்ணா?
Reply
#4
எரிக் சொல்ஹெய்முக்குப் பதிலாக புதிய சிறப்புத் தூதுவர்: நோர்வே வெளியுறவு அமைச்சகம்


Wednesday, 28 December 2005

--------------------------------------------------------------------------------
இலங்கைக்கான சமாதான சிறப்புத் தூதுவராக புதிதாக ஒருவரை அல்லது சமாதானத் தூதுக்குழுவை விரைவில் நியமிக்க உள்ளதாக நோர்வே வெளியுறவு அமைச்சகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

சமாதான சிறப்புத்தூவராக புதிய ஒருவர் நியமிக்கப்படவிருக்கின்ற போதும் தொடர்ந்தும் எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளுக்கான தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார் என்றும் நோர்வெ வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயில் பதவியேற்றுள்ள புதிய கூட்டணி அரசாங்கத்தில் சோசலிச இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கின்றார்.

[color=orange]இந்நிலையில் அமைச்சுப் பணிகளோடு சமாதான முன்னெடுப்பில் அனுசரணையாளராக முன்னரைப்போல் முனைப்போடு செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக நோர்வே அரசு கருதுவதாகத் தெரிகிறது.

நெருக்கடிக்குள்ளாகி முடங்கிப்போயிருக்கும் சமாதான முயற்சிகளை உடனடியாக தொடங்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலேயே நோர்வே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைத் தீவின் சமாதான முன்னெடுப்புக்களில் முனைப்போடு செயற்பட்டு வரும் எரிக் சொல்ஹெய்மை சிங்கள ஆட்சியாளர்களும் இனவாதக் கட்சிகளும் பேரினவாத ஊடகங்களும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வருகின்றன என்பதும், எரிக் சொல்ஹெய்மை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தீவிரம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam
Reply
#5
செல்கைய்ம் விசயத்திலை நோர்வே அரசு கொஞ்சம் விட்டுக் கொடுத்து இலங்கை அரசை ஒஸ்லோ வில் பேச்சுகளை ஆரம்பிக்க உடன் பட வேண்டி இக்கட்டான நி;லமைக்கு தள்ளிவிட்டார்களா?

http://www.tamillinks.net/archive/2005/new..._29122005_a.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)