Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போர் தொடங்கி விட்டதா?
#1
போர் தொடங்கி விட்டதா? அரசியல் தலைமையா இராணுவத் தலைமையா முடிவெடுப்பது என்ற முரண்பாட்டின் பின்னணியில் மோசமடையும் நிலைமை
இன்று அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள மிகப் பெரும் கேள்வி இதுதான். கிழக்கில் நடைபெற்று வந்த நிழல் யுத்தம் வடக்கிலும் பரவத் தொடங்கஇ அது நிஜ யுத்தமாக வெடித்து விட்டதா என்றே எல்லோரும் கேட்கின்றனர்.

கடந்த இரு வார கால நிகழ்வுகள் அவ்வாறானதொரு கேள்வியைத் தான் எழுப்ப வைக்கிறது. நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து விட்டதாகவே மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்களினால் ஏற்படப் போகும் பின் விளைவுகள் குறித்து உணர அரசும் கண்காணிப்புக் குழுவும் தவறி விட்டன. தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்கள் மீதான தாக்குதல்கள்இ கொலைகள் குறித்து கண்காணிப்புக் குழுவோ அரசோ அக்கறை காட்டவில்லை. அது அங்கு கிளேமோர் தாக்குதல்களுக்கும் கைக்குண்டு வீச்சுகளுக்கும் வழி வகுத்தது.

அப்போது கூட நிலைமையின் தீவிரம் உணரப்படவில்லை. புதிய இராணுவத் தளபதியின் நியமனமும் அதன் பின்னர் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்களும் இபிரதானமாக அப்பாவிப் பொதுமக்களையும் பல்கலைக்கழக சமூகத்தையும் மையம் வைத்ததாயிருந்தது.

புங்குடுதீவில் இளம் யுவதியொருவர் கடற்படையினரால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமாக கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகம் படையினரால் இலக்கு வைக்கப்பட்டதும் மக்களை கொதித்தெழச் செய்தது. பல்கலைக்கழக சமூகம் மீதுஇ எந்தவித ஆத்திரமூட்டலுமின்றி படையினர் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்கள் நடத்திய அமைதிப் பேரணியை படையினர் மிகக் கொடூரமாக அடக்கினர்.

அமைதிப் பேரணியில் சென்ற பல்கலைக்கழக துணைவேந்தர்இ பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்கள்இ மாணவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டும் சுட்டுத் தள்ளப்பட்டதும் பின்னர் அது குறித்து அரசும் படைத்தரப்பும் சிங்களஇ ஆங்கில ஊடகங்களும் மேற்கொண்ட மிக மோசமான பொய்ப்பிரசாரமும் தமிழர்களை சினந்தெழ வைத்தது.

எடுத்ததற்கெல்லாம் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டும் கண்காணிப்புக் குழுஇ குடாநாட்டுச் சம்பவங்களை மூடி மறைத்து விட்டது. இன்று வரை அவை பற்றி எதுவும் கூறவில்லை. படுகொலைகள்இ பாலியல் வல்லுறவுஇ பல்கலைக்கழக சமூகம் மீதான கொடூரத் தாக்குதல்களெல்லாம் பொதுமக்களுக்கெதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை. இதனைக் கூட எந்தத் தரப்புமே கண்டிக்க முன்வராத போது இந்த யுத்த நிறுத்தமும் சமாதான முயற்சியும்இ யாருக்காக மேற்கொள்ளப்படுகிறது? எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? என்ற கேள்வியை தமிழ்ச் சமூகம் எழுப்பியது.

அமைதிப் பேரணி நடத்திய தங்கள் மீதுஇ ஏன் இந்தளவு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ்இ யாழ்.மாவட்ட புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியை கேட்ட போதுஇ அவர் கூறிய பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் குடாநாட்டு சம்பவங்களின் பின்னணியில் ஹபெரும் அரசியல்' இருப்பது தெரிய வந்தது.

ஹகுடாநாட்டில் தற்போது நடப்பதெல்லாம் மேலிடத்தின் உத்தரவுகளுக்கமையவே. எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களே எல்லாவற்றையும செய்கின்றனர்.' என மேஜர் ஜெனரல் சந்திரசிறி பதிலளித்திருந்தார். இதனைப் பேராசிரியர் மோகனதாஸ் பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

இதன் மூலம் குடாநாட்டு மக்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்திற்கும் பாடம்படிப்பிக்க வேண்டுமென புதிய இராணுவத் தளபதி மேற்கொண்ட நடவடிக்கைகளே இதுவென பல்கலைக்கழக சமூகம் கடுமையாகக் குற்றஞ்சாட்டியது.

தெற்கில் ஏதாவது ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் முதலில் பொலிஸாரும் பின்னர் கலகத்தடுப்புப் பொலிஸாரும் அதன் பின்பே படையினரும் அதில் தலையிடுவர். பேரணியை தடுத்து நிறுத்த ஹபரியர்'(தடுப்பு வேலிகள்) போடுவர். பேரணி நடத்துவோரின் கருத்தைக் கேட்பர். பேரணி தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுமாஇ இல்லையாஇ எனக் கூறுவர். பேரணியை தொடர அனுமதிக்க முடியாதென்றால் அது பற்றி தெரிவிப்பர்.

இவை எல்லாவற்றையும் மீறினால்இ பேரணியைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகமும் அதுவும் பலனளிக்காவிட்டால் தண்ணீரைப் பீச்சியடிப்பர். தடியடிப் பிரயோகமும் நடைபெறும். துப்பாக்கிச் சூடு ஒருபோதும் நடத்தப்படுவதில்லை. ஆனால்இ யாழ்ப்பாணத்தில் அதுவும் பல்கலைக்கழக சமூகம் நடத்திய அமைதிப் பேரணியில் நிலைமை வேறு.

தெற்கில் மேற்கொள்ளப்படும் நடைமுறை எதனையும் வடக்கில் மேற்கொள்வதில்லை. ஹபரியர்கள்' போடப்படுவதில்லை. அமைதிப் பேரணி நடத்துவோரிடம் அது பற்றி விசாரிப்பதில்லை. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் கூடப் பயன்படுத்தப்படுவதில்லை. தடியடி பிரயோகமுமில்லை. எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.

எல்லா விடயங்களிலும் வடக்கு - கிழக்குக்கு ஒரு விதம் தெற்கிற்கு ஒரு விதம் என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன. போர்நிறுத்தக் காலத்தில் அதுவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்கள்தான் தமிழ் மக்களை பொங்கியெழச் செய்தது. புதிய இராணுவத் தளபதியின் இந்த அணுகுமுறை நிலைமையை மோசமடையச் செய்து விட்டது.

படைத் தரப்பு இன்று யாழ்.குடாநாட்டில் உளவியல் போரொன்றை நடத்துகிறது. தாங்கள் வலுவான நிலையிலிருப்பதாகக் காட்டவும் மக்களை அச்சுறுத்தி வீடுகளுக்குள் முடக்கவும் முனைகிறது. இதற்காகவேஇ தங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அவர்கள் தினமும் அப்பாவி மக்களை இலக்கு வைக்கின்றனர்.

பொங்கு தமிழ் நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் கூடிய குடாநாட்டு மக்களை இலக்கு வைத்து தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான அவர்களது உணர்வுகளை மழுங்கடித்து விடும் உளவியல் போரிலேயே படைத்தரப்பு தற்போது இறங்கியுள்ளது. இதற்கு அவர்களுக்கு தற்போதைய போர் நிறுத்தம் வாய்ப்பாகிவிட்டது.

கிழக்கில் எந்தப் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி நிழல் யுத்தம் நடைபெறுகிறதோ அதே போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி வடக்கில் மக்களை அச்சமூட்டும் உளவியல் போரை நடத்த படைத்தரப்பு முயல்கிறது.

போர்நிறுத்த காலத்திலும் புலிகள் பலமாக இருப்பதால்இ படையினர் பலவீனமாய் இருப்பதாகக் கூறப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் தாங்கள் பலமாக இருப்பதாகக் காண்பிக்கும் முயற்சியிலுமே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது குடாநாட்டில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் முற்று முழுதாகவே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பணிப்பிலேயே நடைபெறுகின்றன. இதனையே யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் எல்லாவற்றுக்கும் தூண்டுதல் களமாயிருப்பதால் யாழ். குடாநாட்டு மக்களை முற்று முழுதாகப் பயப்பீதியில் ஆழ்த்தவேண்டுமென தற்போதைய இராணுவத் தலைமை தீவிரம் காட்டுகிறது. இதற்கு எதிராகவே முதலில் யாழ்ப்பாணம் கொந்தளித்தது. அதன் தொடர்ச்சியாகவே மன்னாரில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

கிழக்கில் இதமிழர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில்இ தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளும் நிழல் யுத்தம் தோல்வியடைந்து வரும் நிலையில்இ தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இனக் கலவரங்களைத் தூண்டும் முயற்சிகள் தீவிரமடைந்தன. ஆனாலும்இ கருணா குழுவிலிருந்து வந்தவர்கள் இவற்றை அம்பலப்படுத்தவேஇ தமிழ் - முஸ்லிம் முறுகல் நிலை தணிந்து விட்டது.

இந்த நிலையில்தான் வடக்கில்இ குறிப்பாக தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஓரளவு அதிகம் வாழும் மன்னாரில் தமிழ் - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு முயல்வதாகத் தமிழ்த் தரப்புகள் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தன. ஏற்கனவேஇ வடக்கில் மன்னாரிலேயே புலிகளுக்கெதிராகவும் மக்களுக்கெதிராகவும் அடிக்கடி தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன.

கிழக்கில் கருணா குழுதான் இந்தத் தாக்குதல்களை நடத்துகின்றதென்றால் வடக்கில்இ அதுவும் மன்னாரில் எந்தக் குழு புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடத்த முடியும்? கடந்த பல மாதங்களாக இங்கு இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

வடக்கில் ஏனைய மாவட்டங்களை விட தற்போது மன்னாரிலேயே முஸ்லிம்கள் ஓரளவு அதிகமாயிருப்பதால் அங்கும் தமிழ் - முஸ்லிம்களிடையே மோதலை உருவாக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு பேசாலையில் தமிழ் - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.

மன்னாரில் தமிழர்கள் மிகவும் அதிகம். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவிலே இருப்பதாலும்இ படித்த மட்டங்களை விட தொழிலாளர்களிடையே அதுவும் அங்கு மீன்பிடியில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஈடுபடுவதால் அவர்களிடையே மோதல்களை உருவாக்குவது மிகச் சுலபமென புலனாய்வுப் பிரிவு கருதியதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மீனவர்களும் பேசாலை தமிழ் மீனவர்களும் அருகருகிலிருப்பதால் இவ்விரு தரப்புகளுக்குமிடையே இன மோதல்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தளவு முஸ்லிம்களின் உடைமைகளுக்குப் பெரும் சேதமேற்படுத்தினால்இ அவர்கள் பெருமளவு தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் சாத்தியம் குறைவென்பதால்இ அதிகளவிலுள்ள தமிழ் மீனவர்களுக்கெதிராக குறைந்தளவு முஸ்லிம் மீனவர்கள் வன்முறையில் இறங்குவது போல் ஒரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டது.

இதனால்இ பேசாலையில் தமிழ் மீனவர்களின் 20 இலட்சம் ரூபா பெறுமதியான றோலர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட தமிழ் மீனவர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டனர். இந்தச் சூழ்ச்சிகளை அறியாத அவர்கள்இ தொழில் போட்டியால் முஸ்லிம்களே தங்கள் றோலர்களை எரித்ததாகக் கொதித்தனர். ஆனாலும்இ உண்மை நிலை பின்னர் இரு தரப்பினருக்கும் உணர்த்தப்படவே அங்கு கொந்தளிப்பு நிலைமை தணிந்தது.

இந்த நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை பள்ளிமுனைக் கடற்பரப்பில் மோதல் இடம்பெற்றதுடன் வெள்ளிக்கிழமை பேசாலையில் கிளேமோர் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது சம்பவத்தில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்துஇ ஜனாதிபதி தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை அவசரமாகக் கூடி அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலைகள் குறித்து அரசியல் தலைமையா அல்லது இராணுவத் தலைமையா முடிவெடுப்பதென்பதில் நீடிக்கும் குழப்பமேஇ இதுவரை வடக்கில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்ற போதும் அதனைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதைக் காட்டுகிறது.

வடக்கு நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது கூட்டமைப்பினர் தெரிவித்த பல்வேறு முறைப்பாடுகளையும் கேட்டு அவற்றுக்கு பரிகாரம் காண்பது போல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருத்துகளை தெரிவித்த போதும்இ ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு வந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ இராணுவத்தினரை முகாம்களினுள் முடக்குவதன் மூலமே தற்போதைய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியுமென்ற கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியை விட இராணுவத் தளபதியே தனது அதிகாரத்தை அங்கு நிலை நிறுத்த முயன்றுள்ளார். இதுஇ குடாநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை வடக்கில் ஏனைய பகுதிகளிற்கும் பரவக் காரணமாகிவிட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டையும் மீறி விட்டதாகவே கருதப்படுகின்றது.

புதிய ஜனாதிபதிஇ புதிய பிரதமர்இ இவர்களைச் சார்ந்த பிரதான கூட்டணிக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் அதி தீவிரவாதங்களை விடஇ புதிய இராணுவத் தளபதியின் கடும் போக்கு நிலைஇ போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக தமிழர் தரப்பை கருத வைத்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாட்டுக்கு ஏற்ப படையினர் நடந்து கொள்ள வில்லையென ஆரம்பம் முதல் இதுவரை தமிழ்த் தரப்புகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன. போர் நிறுத்த உடன்பாடானதுஇ கைதுகள்இ சுற்றி வளைப்புகள்இ தேடுதல்கள்இ பொது மக்கள் மீதான தாக்குதல்கள்இ துப்பாக்கிச்சூடுஇ அச்சுறுத்தல்கள்இ படையினர் மீதான தாக்குதல்கள்இ எதுவுமே நடைபெறக் கூடாதென வலியுறுத்துகிறது. ஆனால்இ வடக்கு-கிழக்கில் இவை மிகச் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.

கிழக்கில் ஆரம்பமான நிழல் யுத்தமே இன்று எல்லாவற்றுக்கும் வழி வகுத்துள்ளது. இந்த நிழல் யுத்தத்தை புதிய அரசு வடக்கிலும் பரவ விட முயற்சித்ததால் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து எந்தத் தரப்பாவது விலகுவதென்றால் 14 நாள் கால அவகாசம் கொடுத்தே விலக வேண்டுமென்ற நிலைமையையும் இல்லாது செய்து விட்டது. ஆரம்பம் முதலே நடைபெற்று வந்த நிழல் யுத்தம் 14 நாள் கால அவகாசமின்றியே நிஜ யுத்தமாகி விட்டதாகவே அனைவரும் கருதுகின்னறர்.

ஆரம்பம் முதல் எடுத்ததற்கெல்லாம் புலிகளை மட்டுமே குற்றம்சாட்டி வந்த கண்காணிப்புக் குழுவும்இ அரச படையினரின் அத்துமீறல்களை ஒரு போதும் கண்டிக்கவில்லை. அம்பாறையில் ஹெலிகொப்டர் மீதான தாக்குதலின் போது கூடஇ புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் இதற்கு புலிகளே முற்று முழுதாகப் பொறுப்பெனக் கூறி இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தது.

கண்காணிப்புக் குழுவின் இந்தக் கூற்றை நியாயமென அரசும் படைத்தரப்பும் கூறின. அப்படியாயின்இ ஆரம்பம் முதல் இன்று வரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களும் படைத் தரப்பு அல்லது அரசே பொறுப்பென கண்காணிப்புக் குழு கூறியிருக்க வேண்டும். ஆனால்இ ஒரு சம்பவத்துக்குக் கூட இன்று வரை படைத் தரப்பையோ அரசையோ கண்காணிப்புக் குழு குற்றஞ்சாட்டாததும் நிலைமை இந்தளவு தூரம் வருவதற்கு காரணமாகிவிட்டது.

கண்காணிப்புக் குழு தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அவர்களால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. தெற்கில் அரசியல்வாதிகளினதும் இனவாதிகளினதும் மிரட்டல்களுக்கு கண்காணிப்புக் குழு பயந்து விட்டது. அதிகாரம் போதாததால் தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையெனக் கூறும் கண்காணிப்புக் குழு இ அப்பாவி மக்களை படையினர் கொடூரமாகத் தாக்கும் போதாவது கூட அதனைக் கண்டிப்பதற்கு அவர்கள் என்ன அதிகாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

படையினர் மீதான தற்போதைய தாக்குதல்களெல்லாவற்றுக்கும் புலிகளே பொறுப்பென அரசும் படைத் தரப்பும் குற்றஞ்சாட்டுகின்றன. தாக்குதல்களுக்கு புலிகள் தான் காரணமென்றால் அதற்கான சூழ்நிலையை உருவாக்கிய படைத் தரப்பையும் அரசையும் யார் கண்டிப்பது.

இந்தத் தாக்குதல்கள் மூலம் புலிகள் ஒன்றை உணர்த்த முற்படுவதாகவே கருதப்படுகிறது. தங்கள் மீதான பல தாக்குதல்களின் போதெல்லாம் மிகவும் பொறுமை காத்த அவர்கள்இ இன்று பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டதால் பொறுமை இழந்து விட்டனர். மக்களையும் மாணவர்களையும் பாதுகாக்க இனி எவரையும் நம்பப் போவதில்லை நாமே ஆயுதப் போராட்டத்தில் குதிக்கப் போகின்றோமென மாணவர் சமூகமும் உறுதிபடக் கூறிவிட்டது.

தங்களுக்கு போர்ப் பயிற்சி வழங்குமாறு மாணவர் சமூகமும் புலிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. போர் நடைபெற்ற காலத்தில் கூட பாரிய இழப்புகளெல்லாம் மக்களுக்கு ஏற்பட்ட போது இந்தளவுக்கு பொங்கியெழாத மாணவர் சமூகம்இ போர் நிறுத்த காலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களால் போர்ப் பயிற்சி பெறப் புறப்பட்டமையானதுஇ நிலைமை எந்தளவு தூரம் சென்று விட்டதென்பதை உணர்த்துகின்றது.

கிழக்கில் நிழல் யுத்தம் நடைபெற்று வரும்போதும் வடக்கில்இ படையினரின் வன்முறைகள் அதிகரித்து வரும்போதும் வாய்மூடியிருந்த இணைத் தலைமை நாடுகள்இ இன்று புலிகளே வன்முறையைக் கைவிட வேண்டுமென எச்சரிக்கிறது. எல்லாம் கடந்து விட்ட நிலையில் இன்று நிலைமையை கட்டுப்படுத்த அரசுக்கும் புலிகளுக்குமிடையில் சமரசம் செய்யவும் அது முயல்கிறது. இனியும் இவர்களது அழுத்தம் எடுபடுமா என்பதுதான் இன்றைய கேள்வி.

தினக்குரல்
Reply
#2
கண்கானிப்பு குழு தனது சேவையை பக்கச்சார்பாக செய்து வருவதுதான் ஏன் என்று விளங்கவில்லை? இவர்கள் யாருக்காக பயப்படுகின்றார்கள்? யாரின் அழுத்தம் இவர்களுக்கு? இலங்கை அரசாங்கத்தால் நிச்சயமாக இவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படமாட்டாது, சிலவேளைகளில் அவ்வாறு பிரயோகிக்கப்பட்டாலும் அதன் விளைவுகள் பாரதூரமாக இருந்திருக்கும். ஆனால் தற்பொழுது நடப்பவற்றை பார்க்கும் பொழுது கண்காணிப்பு குழு அண்டை நாடான இந்தியாவின் அழுத்ததிற்கு உள்ளாகி இருப்பது போல் தெரிகிறது, :roll: :?

தன் வீட்டிற்குள் இருப்பவர்களை அடக்கத்தெரியாமல், பக்கத்துவீட்டுக்காரன் வீட்டில் அத்துமீறி உட்புகுந்து அதை செய் இதை செய் அப்படி செய் என்று கொக்கரிப்பது இந்தியாவுக்கு கை வந்த கலை, இதற்கு காலம் வெகுவிரைவில் பதில் சொல்லும், Idea Idea
[b]

,,,,.
Reply
#3
இப்பொழுது நடந்து கொண்டிருப்பதும் போர் தான்....
Reply
#4
<b>போர் தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது..! சமாதான காலத்தில் வீரமரணமடைந்த போராளிகளின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம்..அதேபோல் பொதுமக்களினதும் எண்ணிக்கை..!

அத்துடன் சமாதானம் பறித்தெடுத்த தளபதிகளினதும்..மூத்த திறமையான பத்திரிகையாளர்களினதும்.. அரசியல்வாதிகளினதும் இழப்புகள் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பேரிழப்புக்களாகும்..!

கருணா எனும் ஒரு கொள்கை அற்ற கொலைவெறியனின் செயலால் முழு ஈழத்தமிழனின் நலனும் பாதிப்படைந்து கொண்டே போகிறது..! அதற்கு சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்க...சர்வதேச சமூக மனித உரிமை முழக்ககாரர்கள் புலிகளில் பிழைபிடிப்பதில் காட்டும் ஆர்வத்தை உண்மைகளை அறிவதில் காட்டுவதாக இல்லை..!</b> Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அப்போ முழு அளவிலான யுத்தம் மிகவிரைவில்?
http://www.sangam.org/taraki/articles/2005...ar_Imminent.php
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)