Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
வெற்றித் திலகமிட்டு பிள்ளைகளை புலிகளிடம் ஒப்படைத்த தமிழ்ப் பெண்கள்!
[செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2006, 14:42 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பை எதிர்த்தும் தமிழீழ தேசத்தின் விடிவை விரைவாக ஏற்படுத்துவதற்காகவும் தங்களது பிள்ளைகளை வெற்றித் திலகமிட்டு விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்து வரும் நிகழ்வுகள் தமிழீழத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த திருமதி தியாகராசா என்ற தாய் தனது மகளை போராட்டத்தில் இணைத்துள்ளார்.
அக்கராயன் வலயப் பொறுப்பாளர் குட்டிமணியிடம் நேற்றுக் காலை தனது மகளான ரி.ஜெனிதாவை அவர் விடுதலைப் போராட்டத்திற்காக இணைத்தார்.
"தமிழீழ விடுதலைப் போராட்டம் நீடித்துச் செல்லக்கூடாது. விரைவில் தமிழீழ தனியரசை நாங்கள் அடையவேண்டும். அதற்காக எங்கள் தலைவரின் கையை நாம் பலப்படுத்த வேண்டும். அனைத்துத் தாய்மாரும் தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் முன்வந்து இணைந்து தலைவரின் கையை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே நான் எனது மகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்வந்து இணைக்கின்றேன்" எனவும் வலயப் பொறுப்பாளர் குட்டிமணியிடம் திருமதி தியாகராசா தெரிவித்தார்.
இதேபோல் மன்னார் மாவட்டத்தின் பலாப்பொருமாள் கட்டு வட்டக்கண்டல் எனும் பகுதியில் வசித்து வரும் சண்முகம் காளியம்மா எனும் இத்தாயார் தனது ஆறு பிள்ளைகளில் ஒருவரை தாயக விடுதலைப் போருக்காக தானாகவே முன்வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைத்துள்ளார்.
பிரபாகரன் எனும் மகனை நேற்று முற்பகல் 9.00 மணியளவில் மன்னார் மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் இத்தாயார் விடுதலைப் போருக்காக அனுப்பிவைத்ததோடு தமிழ் பெண்களின் வீர வரலாற்றை நினைவுபடுத்தும் முகமாக மகனுக்கு நெற்றி திலகமிட்டு போருக்கு போய் வருமாறு விடை கொடுத்தனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.
தன் மகனை போருக்கு அனுப்பிய அத்தாயார் கூறியதாவது:
எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது கணவர் மன்னார்ப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி சுகவீனமுற்றிருந்து 1997 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை தேச விடுதலைப் போருக்கு அனுப்பவேண்டும் என்று கூறிவருவார். அவர் இறந்ததன் பின்புதான் எனது பிள்ளைகளுக்கு போராடும் வயது நிரம்பியதால் இப்போது நான் எனது மகனை இயக்கத்தின் இணைக்கிறேன்.
விடுதலைப் போருக்காக ஒரு பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளை இணைத்துள்ளார்கள். எனவே ஆறு பிள்ளைகளைப் பெற்ற நான் ஒரு பிள்ளையேனும் போராட்டத்திற்கு அனுப்பாவிட்டால் தேசம் என்னை மதிக்காது.
எனவேதான் நான் இப்போது எனது 19 வயது நிரம்பிய மகனை இணைத்துள்ளேன். தொடர்ந்து வரும் காலத்தில் விடுதலைப் போர் உக்கிரமடையும் நிலை உருவாகுமானால் எனது 20 வயது நிரம்பிய மற்ற மகனையும் போருக்கு அனுப்ப தயாராக இருக்கிறேன். சிங்கள இராணுவ கெடுபிடிகளுக்குள் சிக்கி துன்பப்படுவதை விட எமது தேசத்தின் விடுதலைக்காக எனது பிள்ளைகளை போராட்டத்தில் இணைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எமது தேசியத் தலைவரின் போராட்டப் படையணிகளை வலுப்படுத்துவதற்காகவும் நீண்ட காலமாக சிங்கள பேரினவாதிகளின் அடக்குமுறையில் சிக்குண்டுள்ள எமது தாயக மண்ணையும் எமது இனத்தையும் மீட்பதற்காகவேவுமே எனது மகனை நான் போருக்கு அனுப்புகிறேன்.
எனது மகனும் என்னுடைய இலட்சியத்தையும் எனது கணவரின் இலட்சியத்தையும் நிறைவேற்றுவான் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு.
எனவேதான் நானாகவே முன்வந்து எனது மகனைப் போருக்கு அனுப்புகிறேன். என்னைப் போன்று இதுவரை காலமும் இந்த விடுதலைப் போருக்காக தமது பங்களிப்பினை செய்யாதிருந்த ஒவ்வொருவரும் முன்வந்து பங்களிக்க வேண்டும் என்பதே எனது விரும்பம்.
ஒவ்வொரு தமிழரும் இப்படிச் செய்வதன் மூலமே எமது தேசம் விரைவில் விடுதலையடையும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
- புதினம்
Posts: 73
Threads: 12
Joined: Dec 2004
Reputation:
0
நிச்சயமாக தமிழிழம் கான்பது உறுதி.
ஒவ்வொரு தமிழரும் இப்படிச் செய்வதன் மூலமே எமது தேசம் விரைவில் விடுதலையடையும்
! ! !!
Posts: 173
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
<b>வெற்றித் திலகமிட்டு பிள்ளைகளை புலிகளிடம் ஒப்படைத்த தமிழ்ப் பெண்கள்!</b>