Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு
#1
பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு அரச படையினருக்கு பொங்கி எழும் மக்கள் படை அறிவுரை வழங்கியுள்ளது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்திலேயே இந்த வேண்டுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பொங்கி எழும் மக்கள் படையினரிட மிருந்து சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிங்கள மொழிப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உங்களைப் பற்றியோ உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லை.

அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க் கைக்காக உங்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களை மாத்திர மன்றித் தேவை ஏற்படின் சிங்கள மக்களையும் கொல்வார்கள். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எனக் கூறி ஏதுமறியா சிங்கள மக்களைக் கொன்று குவித்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தையும் இணைந்து சிங்கள சிப்பாய்கள் ஆயிரக் கணக்கில் இறப்பதற்கு வழி அமைத்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்இ ஜெயசிகுறு இராணுவ நடவடிக்கைஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இருந்த போதிலும் கொல்லப்பட்ட இந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் குறித்து இந்தத் தலைவர்கள் ஒரு கணமாவது சிந்தித்தார்களா? அவர்கள் அவ்வாறு சிந்தித்திருந்தால் ஆயுத இறக்கு மதி எனக்கூறி கோடிக் கணக்கில் தரகுப் பணம் பெற்று பெரிய தனவந்தர்களாகியிருக்க முடிந்திருக்குமா? சந்திரிகா தற்போது பிரிட்டனில் மாளிகை ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதை நீங்கள் அறிவீர்களா? சந்திரிகாவுக்கு இவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது?!!

அவ்வாறானவர்களின் வசதிக்காக அவர்களின் கட்டளைகளை ஏற்று நீங்கள் மடிவதில் எதுவித பயனும் இல்லை. முல்லைத்தீவு முகாமில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களைக்கூட அரசு பொறுப்பேற்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

முல்லைத்தீவுஇ கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு முகாம்களுக்கும் மற்றும் ஜெயசிகுறுஇ அக்கினிச் சுவாலை நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளை வழங்கிய இராணுவ அதிகாரிகள் தற்போது ஓய்வுபெற்று தங்கள் குடும்பங்களுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் கொல்லப்பட்ட மற்றும் ஊனமுற்ற சிப்பாய் கள் குறித்தும் அவர்களது குடும்பங்கள் குறித்தும் எதையுமே அவர்கள் செய்யவில்லை. நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டமான வாழ்க்கை குறித்து நாங்கள் நன்கு அறிவோம். ஏன் நீங்கள் மாத்திரம் இவ்வாறு கஷ்டமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்?

உங்களது தாயகத்தை பெறுவதற்கா நாங்கள் போராடுகிறோம்? தமிழீழம் எமது தாயகம். உங்களது தாயகம் சிறிலங்கா. உங்களது நாட்டைக் காக்க நீங்கள் விரும்பினால் தென்பகுதிக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களது கல்லறைகளை நாங்கள் கட்டுவோம். எமது தாயகத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி தற்போது ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இந்த மக்கள் ஒன்று திரண்டு படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டால் படையினரின் மரணம் உறுதி. உங்கள் மீது நாங்கள் அனுதாபப்படுகிறோம். உங்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் நாங்கள் கவலையடைகின்றோம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவிசெய்யத் தயாராய் இருக்கிறோம்.
விருப்பமானதை நீங்கள் தெரிவு செய்யுங்கள். அது உங்களின் உரிமை. நீங்கள் விடுமுறையில் சென்று மீண்டும் பணிக்கு உங்கள் முகாம்களுக்கு வராமல் விடுங்கள். இல்லாவிடின் எங்களிடம் சரணடையுங்கள். எல்.ரீ.ரீ.ஈ யினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு நீங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல எங்களால் வசதிக ளைச் செய்துதர முடியும். இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் பயமோ அச்சமோ இன்றி வாழ்கின்றனர். ஒரு கணம் சிந்தியுங்கள்!

சிங்களத் தலைவர்கள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக எங்களது புத்திஜீவிகளையும் ஏதுமறியா மக்களையும் மிருகத்தனமாகக் கொன்று குவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தமிழ் மகன் அரசினால் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக பத்துச் சிப்பாய்கள் கொல்லப்படுவர். பழிவாங்கல்களுக்கு பலியாவது நீங்களே. இதைத் தடுப்பது கடினமாகும்.

எனவே எமது வேண்டுகோளை ஏற்று பெறுமதியான உயிரைப் பற்றிச் சிந்தித்து நல்ல தீர்மானத்தை மேற்கொள்ளுங்கள்இ சிங்கள அரசியல் தலைவர்களினதும் இராணுவக் கட்டளை அதிகாரிகளினதும் கட்டளைகளை கணக்கில் எடுக்காது நாங்கள் தெரிவித்துள்ள பாதுகாப்பு ஒழுங்குகளைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளுகிறோம். இதை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் குடும்பத்தினரும் திருப்தியடைவார்கள் என்பது உறுதி.

""எமது இந்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து உங்கள் பெறுமதி மிக்க உயிரைக் காப்பாற்றுங்கள்''

நன்றி.
இப்படிக்கு
பொங்கி எழும் மக்கள் படை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சூரியன்
Reply
#2
நேற்று(02-01-2006) நண்பகல் பலாலி வீதியில் காவல் கடமையில் நின்ற இராணுவத்தினர் முன்னிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சுருட்டிய பேப்பர் கட்டு ஒன்றை தவற விட்டுச் சென்றார்கள் இதனை வழிப்போக்கர்கள் எவரும் எடுக்க முன்வரவில்லை. இராணுவத்தினருக்கு முன்னால் கிடந்தமையால் அதனையிட்டுப் பொது மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாது சென்றார்கள் குறிப்பிட்ட சில நிமிடங்களாக இராணுவத்தினரும் அக்கறை காட்டாது இருந்தார்கள். விட்டுச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள் என நினைத்த இராணுவத்தினர் அதனை குறிப்பிட்ட நேர இடைவெளியின் பின்னர் வீதியால் வந்த வயோதிபரை மறித்து அதனை எடுத்து விரிக்கும் படி கூறினார்கள் அதனை எடுத்து விரித்துப்பார்த்த போது அதனுள் மக்கள் படையினரால் வெளியிடப்பட்ட சிங்கள் மொழியிலான இராணுவத்தினருக்கான துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டன. இராணுவத்தினரை யாழ்குடாநாட்டில் இருந்து வெளியேறும்படியும் உங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள் என்ற துண்டுப் பிரசுரமே காணப்பட்டதாகும் இதனால் இராணுவத்தினரிடையே பலத்த குழப்பமான நிலைமை காணப்பட்டதாக கூறப்படுகின்றது இந்தச் சம்பவம் திருநெல்வேலி பலாலி வீதி தபால் கட்டைச் சந்திக்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது.


நிதர்சனம்
Reply
#3
மக்கள் படை என்பது ஒரு தனி அமைப்பா? அல்லது இந்தச் சொல் தமிழீழ விடுதலை புலிகளை குறிக்கிறதா?
,
......
Reply
#4
மக்களாள் மக்களுக்காக மக்களாள் உருவாக்கப்பட்டது மக்கள்படை. இதில் அனைத்து பகுதி மக்களும் அங்கத்துவம், ஆயுதபயிற்சி எடுத்த உறுப்பினரும் உண்டு. ஒட்டுமொத்த மக்களின் படை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
#5
Luckyluke Wrote:மக்கள் படை என்பது ஒரு தனி அமைப்பா? அல்லது இந்தச் சொல் தமிழீழ விடுதலை புலிகளை குறிக்கிறதா?

மக்கள் படை என்றால் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படை
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
இதிலை ஏனப்பு விடுதலைப்புலிகளை இழுக்கிறீங்கள்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#6
Luckyluke Wrote:மக்கள் படை என்பது ஒரு தனி அமைப்பா? அல்லது இந்தச் சொல் தமிழீழ விடுதலை புலிகளை குறிக்கிறதா?

அடடடே,, வணக்கம்,, கன நாள் கண்டு,,, இருந்தாலும் நீங்க செய்யவேண்டியதை உங்க அண்ணன் வானம்ஸ் செய்துட்டார்,,,

என்ன கேட்டியள்? அட இதெல்லாம் ஒரு கேள்வியா? புலிகள் அமைப்பில இருக்கிறவையள் எல்லாம் எங்க இருந்து வந்தவையள்? அதைவிடுங்க,, அன்றிலிருந்து இன்று வரை இராணுவம் மக்கள் விடுதலைப்புலிகள் என்று பிரித்து பார்த்தா யுத்தம் புரிஞ்சிருக்கு? அட அவங்கட கூற்று என்னெவென்றால் புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்,, சரி வியட்நாம் அமெரிக்கா படைகளுக்கு எதிரா போராடி வியட்நாமைவிட்டு அடிச்சு கலைச்ச கதை தெரியுமோ? அப்ப வியட்நாம் போராளிகள் மட்டுமா அதைச்செய்தார்கள்? அந்த இறுதிப்போரில மக்கள் தானய்யா அரைவாசிப்பேர்.. எல்லாம் ஆயுதப்பயிற்சியை தாங்களாகவே கேட்டு பெற்றவர்கள்,, அதே மாதிரித்தானய்யா இதுவும்,,

எண்ட நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது, அவர் சொன்னார், ஓயாத அலை 4ல் ஆனையிறவை பிடிக்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக சாகவச்சேரி, கொடிகாமம் பகுதி வரை புலிகள் வந்திட்டினம்,, அந்த நேரம் ஆயுதங்களை அள்ளுறதுக்கு மக்கள் பலர் தாங்களாகவே புலிகளிட்ட கேட்டிருக்கினம்,, (அதில அவனும் அவண்ட நண்பர்களும்) ஓம் எண்டு விட்டிட்டினம்,, ஒரு கட்டத்தில இவங்களுக்கு ஆவேசம் வந்து இவங்களே ஆயுதங்களை எடுத்து புலிக்கு பின்னால போய் ஆமியை அடிக்க வெளிக்கிட்டாங்கள்,,,

அப்படி களத்தில நிண்டால் வெற்றிகள் கிடைக்கும் பொழுது அல்லது ஆவேசத்தை அடக்கேலாமல் உணர்ச்சிவசப்பட்டு ஆமியை போட்டுத்தள்ளிக்கொண்டு இருக்கினம் பொதுமக்கள்,, அட இராணுவத்தளபதியே ஓடர் குடுத்துட்டராம் பொதுமக்கள் எண்டு பாரமல் சுடச்சொல்லி,, அப்ப எனி தமிழ் மக்களும் விடுதலைப்புலிகள் தானே? புரிதோ? அல்லது வேற ஏதாவது கேட்டு உம்மையும் குழப்பி எங்களையும் குழப்பலாம் எண்டு யோசிக்கிறீரோ? சரி சரி புரியாத அன்னிய சகோதர்களுக்கு புரிய வைக்கிறதுக்கெண்டே களத்தில கன பேர் இருக்கினம்,, கேளுங்க கேளுங்க... :wink: (சின்னப்பிள்ளைத்தனமா கேக்காதேங்கப்பா) :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)