Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
சென்னை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் புவியல் பகுதி ஆய்வாளர் 02 தை 2006 உலகின் பல பாகங்களில் பாரிய நிலநடுக்கம் பூமியதிர்ச்சி ஏற்படலாம் என்று எதிர்வு கூறியதாக சொல்லப்படுகிறது.
இதைப்பற்றி மேலதிகச் செய்தி தெரிந்தவர்கள் இணைக்கவும்.
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ஜன. 2ல் பெரிய பூகம்பம் ஏற்படும்: சென்னை விஞ்ஞானி எச்சரிக்கை
டிசம்பர் 31, 2005
சென்னை:
ஜனவரி 2ம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சென்னை பல்கலைக்கழக பயன்பாட்டு புவியியல் (அப்ளிகேஷன் ஜியாலஜி) துறைத் தலைவர் வெங்கடநாதன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக வெங்கடநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதற்கு முன்பு பல நிலநடுக்கங்களை 'ஜியோ அஸ்ட்ரோ பிசிக்கல்' கணக்கீடுகளின்படி சரியான முறையில் கணித்துக் கூறியுள்ளேன். அந்த வகையில் ஜனவரி 2ம் தேதி உலகின் பல்வேறு பகுதிகளில் சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்க உள்ளதை கணித்துள்ளேன்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா மற்றும் இந்தியாவின் அருணச்சாலப் பிரதேசம் மாநிலத்திற்கு தென் மேற்கில் இந்த பூகம்பம் ஏற்படும். ரிக்டர் அளவு கோலில் 7.0 என்ற அளவில் இது இருக்கும்.
அதேபோல இமாச்சலப் பிரேதசம், பூட்டான், ஜப்பானில் உள்ள ரைக்யூ தீவுகள், ஆஸ்திரேலியா அருகே பாபுவா நியூகினியா தீவுக் கூட்டத்தில் உள்ள நியூ பிரிட்டன் ஆகிய பகுதிகளிலும் 5 முதல் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும்.
இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் வெங்கடநாதன்.
வெங்கடநாதன் கூறுவது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
நாளைக்கு கிரகணங்கள் எதாவது இருக்கா?
அல்லது பல கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரம் சந்தர்ப்பம் இருக்கா?
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
இல்லை பல நாட்கள் என்ன பல மணத்தியாலங்களுக்கு முன்னரே எதிர்வு கூறுவதுக்கு மேற்குலத்தில் கூட வழிகள் இல்லை.
அவர்கள் பூமியின் சுழற்சி வேகத்தில் வரக்கூடிய தற்காலிகமான ஆனால் கணிசமான மாற்றத்தை எதிர்வு கூறுவதன் மூலம் நிலநடுக்கம் வருவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று கூறவருகிறார்களோ என்று தான் கேக்கிறன்.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
இல்லை பல நாட்கள் என்ன பல மணத்தியாலங்களுக்கு முன்னரே எதிர்வு கூறுவதுக்கு மேற்குலத்தில் கூட வழிகள் இல்லை
இது எப்படி சாத்தியப்பட்டது
ஆனால் எங்கள் பரம்பரையினர் பல எதிர்வுகூறல்களை சொல்லி அது நடந்திருக்கின்றது அது எப்படி சாத்தியமாகும் முன்னேர்கள் சில வழிமுறைகளை கையாள்கின்றார்கள் அதன்படி தான் எதிர்வுகூறுகின்றார்கள் உதாரணமாக கடந்த வருடம் நடந்த உண்மை இலங்கையின் கரையோர பிரதேசத்தில் புவிநடுக்கம் வரும் என எதிர்வுகூறி அது அப்படியே நடந்தது எப்படி(சுனாமி இல்லை சுனாமிவருவதற்கு முன்னர்)
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
இலங்கை கரையோரப் பிரதேசத்திலை எப்ப பிள்ளை வந்தது? நிகழ்வுச்சுற்றறிக்கை (incident bulletin) ஏதாவது அவதானிப்பு மையத்திலை இருந்து வெளிவந்தா போடுங்கோ? நடந்ததை எத்தினை நளைக்கு முதல் யார் எதிர்வு கூறினார்கள்?
விலங்குகளின் நகர்வுகளை வைத்து இயற்கை அனர்த்தங்களை எதிர்வு கூறும் நடைமுறைகளை எமது முன்னோர் மாத்திரமல்ல பல இனங்களின் முன்னோர் கொண்டிருந்தனர்.
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
இது நடந்தது கடந்த வருடம் இது அவதானிப்பு மையத்திலை இருந்து வந்தது அல்ல ஒரு தனிநபரின் எதிர்வுகூறல் இதை பற்றி பத்திரிகையில் வந்தது இதை இப்ப உறுதிப்படுத்த என்னிடம் இப்பொமுது ஆதாரம் இல்லை யாழ் களத்தில் உள்ள இலங்கையில் இருக்கும் யாரிடமும் இருந்தால் தெரிவியுங்கள்
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஆனால் இவற்றையெல்லாம் விட மழை வருவதற்கு முன்னால் ஈசல் பறப்பது நிலநடுக்கம் சுனாமி போன்றவற்றை மிருகங்களாலும் முன்கூட்டியே அறிய முடிந்துள்ளது போன்றவை நாம் கண் முன்னால் காண்பவையே. சுனாமி ஏற்படுவதற்கு முன்னால் வனவிலங்குகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்திருந்தன.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
அப்படி பார்த்தால் இன்று தானே நிலநடுக்கம் வர வாய்ப்பு இருக்கு. சரி உறவுகளே, உயிருடன் திரும்பினால் மறுபடி பார்க்கலாம்.
[b][size=15]
..
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
அத்திலாந்திக் சமுத்திரத்தில் தென்பகுதியில் சன்வீச் தீவுக்கு கிழக்குப் பகுதியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சி 7 தசம் 3 றிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி ஏற்பட்டமை தொடர்பாக இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளிவரவில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. சுனாமி ஏற்படுத்துவதற்கு தேவையான தாக்கத்தை விட குறைந்த மட்டத்திலான தாக்கமே ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. எனினும் இதன் பிரதிபலிப்புக்கள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை கரையோரப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
லங்காசிறி
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
வெங்கடநாதனிற்கு நோபல் பரிசு கொடுப்பார்களா?
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
கொடுக்கலாம் போலத் தான் கிடக்குது
[size=14] ' '
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
விலங்குகளின் நடமாட்டத்தை வைத்து அவர்கள் உயரமான பகுதிகளிற்கு சென்றுள்ளார்கள். இதைப்பற்றி ஒரு விவரணம் போட்டிருந்தார்கள். அவர்களின் மூதாதையர்களும் கடற்கோள் ஆல் பாதிக்கப்பட்டதாகவும் அதைபற்றிய பாதுகாப்புhகள் முன்அறிவுப்புகள் பற்றி சந்ததி சந்ததியாக அவர்கள் ஒரு இயற்கையின் சீற்றமாக தண்டனையாக அறிந்து நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறார்கள்.
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>அத்திலாந்திக் சமுத்திரத்தில் தென்பகுதியில் சன்வீச் தீவுக்கு கிழக்குப் பகுதியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.</span>
இந்த பூமியதிர்ச்சி 7 தசம் 3 றிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி ஏற்பட்டமை தொடர்பாக இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளிவரவில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. சுனாமி ஏற்படுத்துவதற்கு தேவையான தாக்கத்தை விட குறைந்த மட்டத்திலான தாக்கமே ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. எனினும் இதன் பிரதிபலிப்புக்கள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை கரையோரப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம்: லங்கா சிறீ
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>