Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்தில் சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் அடாவடி
#21
<b>யாழில் மாணவரைக் காணவில்லை: பெருந்தொகையில் தொடர்கிறது இடப்பெயர்வு! </b>
[செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 18:23 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்குச் சென்ற இராமநாதன் ரதீஸ்குமார் (வயது 20) என்ற மாணவரைக் காணவில்லை என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அந்த மாணவர் கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற பின்பு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கும் ரதீஸ்குமாரின் பெற்றோர் கொண்டு சென்றனர். முகமாலை சோதனைச் சாவடியூடாக அந்த மாணவர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்லவில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பருத்தித்துறை தும்பளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 10 மணிவரை சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தும்பளை புனித மரியாள் கத்தோலிக்க தேவாலயப் பகுதியில் 500 இற்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு வீடாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்பகுதி மக்கள் எவரையும் வீட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கவில்லை. அப்பிரதேசத்தின் ஒட்டுமொத்த போக்குவரவுகளை சிறிலங்கா இராணுவத்தினர் தடை செய்து இந்தத் தேடுதலை மேற்கொண்டனர்.

ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரின் இந்தத் தேடுதல் நடவடிக்கையால் ஜெனீவா பேச்சுக்கள் பாதிக்கக் கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று பொங்கியெழும் மக்கள் படை அறிவித்திருக்கும் நிலையில் இத்தகைய காணாமல் போகும் நிகழ்வுகளும் இராணுவ வன்முறைகளும் நீடித்து வருவது தொடர்பில் யாழ். பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.

இதனிடையே வடமராட்சி கிழக்கில் உள்ள நடு குடத்தனை பகுதியைச் செய்த 150 குடும்பத்தினரில் 140 குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேபோல் யாழ். ஊர்காவற்றுறை பகுதியின் தோப்புக்காடு கிராமத்தின் அனைத்து மக்களும் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply
#22
<b>சமாதான சமிக்ஞைகளை நிராகரிக்கும் சிறிலங்கா இராணுவம்: யாழில் தொடரும் கெடுபிடிச் சோதனைகள்! </b>
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 19:02 ஈழம்] [தாயக செய்தியாளர்]
சமாதான சமிக்ஞைகளை சிறிலங்கா இராணுவம் நிராகரித்துவிட்டு யாழில் தனது வழமையான கெடுபிடிச் சோதனைகளையும் அத்துமீறல்களையும் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


வலிகாமம் மேற்குப் பகுதியில் பல வீதிகளிலும் மற்றும் சாவகச்சேரி மீசாலையிலும், பருத்தித்துறை தும்பளையிலும் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வீதிச் சோதனைகளை முடுக்கி விட்டிருந்தனர்.

அராலி, வட்டுக்கோட்டை, மூளாய், மாவடி, சித்தன்கேணி, சங்கானை, நவாலி ஆகிய இடங்களில் வீதிகளில் பெருமளவில் நிறுத்தப்பட்டிருந்த படையினர் வாகனச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் படையினர் அவர்களை தீவிர உடற்சோதனைக்கு உட்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் பாகங்களையும் பிரித்து தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

தென்மராட்சியில் நேற்று மூன்று இடங்களில் சிறிலங்காப் படையினரால் வாகனங்கள் மறிக்கப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கொடிகாமம் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகிலும் நுணாவில் காவல் நிலையத்திற்கும் அருகிலும் கைதடி சந்தியிலும் வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளும் படையினரால் சோதனையிடப்பட்டன.

படையினரின் இத்தகைய செயற்பாடுகளை கடுமையாக கண்டிக்கும் தென்மராட்சி பொது அமைப்புக்கள், அமைதி நிலையை சீர்குலைத்து இயல்பு நிலையை குழப்ப படையினர் முயற்சிப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இத்தகைய செயற்பாடுகளில் படையினர் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளன.

திருநெல்வேலிச் சந்தி, தபால் பொட்டிச் சந்தி வீதிகளில் நிற்கும் படையினரால் துப்பாக்கி முனையில் சைக்கிளில் செல்லும் பெண்கள், மாணவிகள் நிறுத்தப்பட்டு கேவலமான சொற்தொடர்களை பயன்படுத்தி கிண்டல் செய்யும் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளில் சிங்களப் படைகள் ஈடுட்டிருப்பதாக பெண்கள் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

வீதியில் இளம் பெண்களிடம் அடையாள அட்டைகளை வாங்கும் படையினர் திரும்பி வருகையில் தம்மிடம் வந்து பெற்றுச் செல்லும் படி கூறி வருவதுடன் அவர்கள் இருக்கும் வீடுகள் தொடர்பாகவும் அவர்களின் வீட்டில் உள்ளோர் தொடர்பாகவும் கேட்டறிவதாகவும் பெண்கள் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தை அதிகாலையில் படையினர் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்.சிறிலங்கா காவல் நிலையப் பின்வீதி, யாழ். நூலகப்பகுதி முன்வீதி, பின்வீதிகளை தற்பொழுது படையினர் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் பயிற்சி நடவடிக்கைகளில் படையினரும், காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டிருப்பதாகவும் இதனால் காலை வேளையில் அப்பாதையூடாக பயணம் செய்ய பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

அவ் வீதியூடாகச் செல்லும் மீன் வியாபாரிகளும், வர்த்தகர்களும், அரச உத்தியோகத்தர்களும் வேறு வீதிகளை அதிகாலையில் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

யாழ். பேரூந்து நிலையப் பகுதியிலுள்ள ஓட்டோச் சாரதிகள் பலருக்கு படையினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் பீதியடைந்துள்ள ஓட்டோச் சாரதிகள் சாரதிகள் தொழிலில் ஈடுபட முடியாமல் வீடுகளிலேயே முடங்கியிருப்பதுடன் பலர் இடம்பெயர்ந்து தமது வாகனங்களுடன் குடாநாட்டின் வேறு பிரதேசங்களுக்கும் வன்னிக்கும் செல்கின்றனர்.

பலர் இத்தொழிலை கைவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதுடன் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

யாழ். நகரப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறும்போதெல்லாம் படையினர் ஓட்டோ சாரதிகளை கடுமையாக தாக்குவதுடன் அவர்களின் வாகனங்களையும் கடுமையான சேதத்திற்கு படையினர் உள்ளாக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சமாதான சூழலுக்கான சமிக்ஞைகள் வெளியிடப்பட்ட நிலையிலும், சோதனை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் யாழ். குடாநாட்டில் தற்போழுது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுடன் ஈ.பி.டி.பி குழுவினர் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் படையினரின் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலேயே இக் கொள்ளைச் சம்பவங்கள் துணிச்சலாக நடைபெற்று வருவதாகவும் படையினரின் பாதுகாப்புடன் ஈ.பி.டி.பி குழுவினர் ஆயுதங்களுடன் சென்று வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

குடாநாட்டில் இருந்த சமூக விரோதிகள், கொள்ளையர்கள் ஈ.பி.டி.பி குழுவிடம் இணைந்து தற்பொழுது கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு படையினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#23
<b>யாழில் கிராம அலுவலர்களைக் குறிவைக்கும் இராணுவம் </b>


யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மீது மேற் கொள்ளும் அடாவடி நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்களை கிராம அலுவலர்கள் உடனுக்குடன் நீதி மன்றங்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பவற்றிற்கு வழங்கி வருவதினால் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் பலவும் தடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய செயற்பாடுகளை கிராம அலுவலர்கள் ஓரு சிலர் உற்சாகத்துடன் செய்கின்ற போதிலும் இராணுவத்தினர் பொதுவாக கிராம அலுவலர்கள் மீது வஞ்சம் தீர்ப்பது போன்று வெருட்டுவதுடன் அவர்களை அவமரியாதை செய்யும் நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகின்றார்கள்.

கடந்த வாரம் யாழ் மாவட்ட மனிதஉரிமைகள் அமைப்புக்களும் இராணுவத்தினரும் கலந்துரையாடும் போது கிராம அலுவர்களுடன் இணைந்து சுற்றி வளைப்புக்கள் மற்றும் இராணு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புக்களின் கோரிக்கையை இராணுவ உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு நடவடிக்கையும் எடுப்பதாகவும் அறிவித்த நிலையிலேயே இராணுவத்தினர் கிராம அலுவலர்களுடன் முரண்படத் தொடங்கியுள்ளார்கள் தற்போது கிராம அலுவர்கள் மற்றும் பொது மக்கள் கொடுக்கும் தகவல்கள் காரணமாக உடனடியாக உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் பலருடைய கைதுகள் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#24
<b>யாழில் தொடர்ந்து படைக்குவிப்பு- தேடுதல் நடவடிக்கைகள்! </b>

யாழ். குடாநாட்டில் இயல்பு நிலைக்கு எதிராக தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக பல்வேறு பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.


அமைதி முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்கும் விதத்தில் ஜெனீவாவில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற இருக்கின்ற பேச்சுக்கான நல்லெண்ண நடவடிக்கையாக யாழ். குடாநாட்டில் பொங்குயெழும் மக்கள் படையால் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த சகல நடவடிக்கைகளும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள சூழலில் பொதுமக்களுக்கு எதிரான சிறிலங்காப் படைகளின் அரச பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்ந்தும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக பல்வேறு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையால் விடுக்கப்பட்ட தாக்குதல் எச்சரிக்கை குறித்து சிறிலங்கா படை உயர் அதிகாரிகள் நேற்று பலாலி இராணுவத் தளத்தில் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.

பலாலி இராணுவத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இச்சந்திப்பு யாழ். மாவட்டத் தளபதி சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒன்று கூடலில் வீதிக் கண்காணிப்பையும் சுற்றுக்காவல் நடவடிக்கையையும் தேடுதல் நடவடிக்கையையும் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாகவச்சேரி டச்சு வீதியில் நேற்றுக் காலை குறிப்பிட்ட சில வீடுகள் படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீடுகள் மற்றும் காணிகளைப் படையினர் தோண்டி சோதனை நடத்தியதுடன் பொதுமக்கள் சிலரையும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தென்மராட்சியில் நேற்று பல இடங்களில் படையினரால் வாகனங்கள் மறிக்கப்பட்டு வீதிச் சோனை நடைபெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது கைதடியில் இளைஞர் ஒருவரை படையினர் தடிகளால் தாக்கினர்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் படையினராலும் ஈ.பி.டி.பியினராலும் கடத்திச் செல்லப்பட்டு இளைஞர்கள் பலர் பலாலியிலோ, காங்கேசன்துறையிலோ இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்காலம் என்று காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக உறவினர்களால் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் பலர் தம்மால் கைது செய்யப்படவில்லை என்று படையினர் கூறி வருவதாகவும், இதனால் காணாமல் போனவர் தொடர்பில் மர்மம் நிலவி வருவதுடன் இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊர்காவல்துறை தம்பட்டிக் கிராம கடற்றொழிலாளர்களுக்கு சிறிலங்காக் கடற்படையினர் மேலதிகமாக விசேட அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அடையாள அட்டையை வழங்குவதற்கும் வசதியாக கடற்றொழிலாளர்களை புகைப்படம் பிடித்து வரும் கடற்படையினர் அவர்களிடமிருந்து அட்டை ஒன்றில் கையொப்பங்கள் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

நாரந்தனை வடக்கில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினரே இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழிலாளர்களிடம் தேசிய அடையாள அட்டை, இராணுவ விசேட அடையாள அட்டை, கடற்படையினர் வழங்கிய மீனவ அடையாள அட்டை, கடற்றொழில் சங்கம் வழங்கிய தொழிலாளர் அட்டை ஆகிய நான்கு அடையாள அட்டைகள் இருக்கும் நிலையில் ஐந்தாவது அட்டை ஒன்றை வழங்குவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கச்சாய் குடாக்கடல் பரப்பில் படையினரால் மேற்கொள்ளப்படும் மீன் பிடித்தடைகள், கடல் உயர் பாதுகாப்பு வலய விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட நூற்றுக்காணக்கான சிறு கடல் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வந்த குடும்பங்களுக்கு சிறிலங்கா அரசு தொழில் நட்டஈடு வழங்க வேண்டும் என்று கச்சாய் லிகோரியார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் அரச அதிபர் மற்றும் பல்வேறு தரப்புக்களுக்கு அவரச வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.

முகமாலை சோதனைச் சாவடியூடாக வரும் பொது மக்களை விசாரணைக்குட்படுத்தும் படைப்புலனாய்வாளர்கள் பத்திரிகைகளில் வருகின்ற பொதுமக்களின் புகைப்படங்கள் பெயர்கள் அடங்கிய குறிப்புக்களுடன் தற்பொழுது விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் தொடர்பாகவும் அவர்களின் இருப்பிடங்கள் குடும்ப விவரங்கள் போன்றவற்றை படைப் புலனாயர்வாளர்கள் திரட்டி வருவதாகவும் தெரியவருகிறது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#25
<b>யாழில் நள்ளிரவில் இளைஞர்களை குறிவைத்து வேட்டையாடுகிறது சிறிலங்கா இராணுவம்!</b>

யாழ். குடாநாட்டில் நடு இரவுகளில் படையினரால் இளைஞர்கள் பலருடைய வீடுகள் சோதனையிடப்படுவதுடன் இளைஞர்களை பிடித்துச் செல்லும் நோக்குடன் படையினரால் அடிக்கடி முற்றுகையிடப்படுகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள இளைஞர்கள் இரவில் தமது வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் இரவுப் பொழுதை வேறு இடங்களிலும் அயல் கிராமங்களிலும் இளைஞர்கள் கழித்து வருவதாகவும் படையினரால் தமது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணும் இளைஞர்கள், மாணவர்கள் மாலையானவுடன் தமது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதும் அதிகரித்திருக்கிறது.

பகலில் வீடுகளைக் கண்காணிக்கும் படையினர் நள்ளிரவு வீடு புகுந்து இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியை பல இடங்களில் மேற்கொண்டு வருவதால் தமது பாதுகாப்பு கருதி இளைஞர்கள் தங்கள் வீடுகளில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் நெருக்குவாரங்கள் காரணமாக முஸ்லிம்கள் கணிசமானோர் வன்னிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பலர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என முல்லைத்தீவு செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்னியில் உறவினர்கள் இல்லாதோர் தென்னிலங்கை நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். யாழ். குடாநாட்டில் தங்கியிருக்கும் முஸ்லிம்களின் நடமாட்டங்கள், வீடுகள் ஆகியவை சிறிலங்காப் படையினரின் முழுமையான கண்காணிப்பில் இருப்பதினாலேயே அவர்கள் இடம்பெயர்கின்றனர் என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ். குடாநாட்டில் குண்டுகள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அடிக்கடி இராணுவம் கூறிவருவது பொதுமக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என்று யாழ். குடாநாட்டு பொது அமைப்புக்கள் கண்டிக்கின்றன.

பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கவும், அச்சுறுத்தவும் படையினராலேயே குண்டுகள், ஆயுதங்கள் மறைக்கப்பட்டு பின்னர் தம்மால் கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் கூறி இவற்றை மீட்டு வருவதாகவும் இத்தகைய செயல்களின் மூலம் யாழ். குடாநாட்டை ஒரு பதற்றமான சூழலில் தள்ளி வருவதாகவும் இத்தகைய மோசடி ஏமாற்று நடவடிக்கைகளை சிங்களப் படைத்தரப்பும் அதனுடன் சேர்ந்து இயங்கும் குழுவினரும் மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து படைத்தரப்பின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

யாழ். பேரூந்து நிலையப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்னால் மாணவி ஒருவரை ஈ.பி.டி.பியினர் வானில் கடத்த மேற்கொண்ட முயற்சி மாணவியின் சாமர்த்தியத்தால் முறியடிக்கப்பட்டது.

மாணவி பெரிதாகச் சத்தமிட்டு கத்தியதையடுத்து மாணவியை கடத்தும் முயற்சியை ஈ.பி.டி.பியினர் கை விட்டுவிட்டு சிறீதர் திரையரங்குக்குள் தப்பிச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வான் ஒன்றில் வந்து காத்துக்கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட ஈ.பி.டி.பி குழுவினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் சம்பவ இடத்தில் நின்றிருந்த பொதுமக்கள் கூறினர்.

யாழ்.குடாநாட்டில் பொதுமக்களைக் குழப்பும் நோக்கத்துடன் படையினராலும் ஈ.பி.டி.பி.யினராலும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்வேறு அமைப்புக்களின் பெயரில் சுவரொட்டிகளை அச்சடித்து படையினர் ஒட்டி வருவதுடன் அச்சுவரொட்டிகளில் தேச விடுதலையைக் கண்டிக்கும் வாசகங்கள் பல இடம்பெற்றுள்ளதுடன் தேச விடுதலைப் பற்றாளர்களை கண்டித்தும் கொச்சைப்படுத்தியும் பல விடயங்கள் திரிபுபடுத்தியும் பொதுமக்களை குழப்பும் நோக்குடன் பொதுமக்கள் கூடும் இடங்களில் படையினரால் ஒட்டப்பட்டு வருகின்றன.

யாழ். குடாநாட்டில் பொதுமக்களை ஏமாற்றும் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#26
<b>யாழில் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க இராணுவம் தயார்: சரத் பொன்சேகா </b>

யாழ்ப்பாணத்தில் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க சிறிலங்கா இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.


யாழ்ப்பாண பாதுகாப்பு நிலைமைகளை நேற்று வெள்ளிக்கிழமை சரத் பொன்சேகா பார்வையிட்டார்.

அதன் பின்பு அவர் கூறியதாவது:

ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்புக்குப் பின்னர் படையினர் மீதான தாக்குதல் செய்தி எதுவும் வரவில்லை. யாழ். குடாவில் எந்தச் சூழலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவம் தயார் நிலையில் இருப்பது திருப்தியளிக்கிறது.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதில் எமது பங்களிப்பை நாம் செய்திருக்கிறோம். ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்பையடுத்து விடுதலைப் புலிகளும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.

இருந்தபோதும் நாம் குடாநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருக்கவில்லை. எந்த நேரத்திலும் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளானது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. இந்தத் தேடுதல் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு சிறிய அளவில்தான் தொந்தரவு உள்ளது என்றார் அவர்.

யாழ்ப்பாணத்தில் தளபதிகளுடன் அவர் சந்தித்து உரையாடினார். தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிற ஆயுதங்களையும் அவர் பார்வையிட்டதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்தனர்.

<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#27
<b>அச்சுறுத்தலை மறைக்க நாடகமாடும் இராணுவம்</b>

யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவினரது அச்சுறுத்தலால் பெருந்தொகையாக மக்கள் வெளியேறிவருவதை மறைக்க துண்டுப் பிரசுர நாடகத்தை செயல்படுத்தி வருகின்றனர்.


சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்கள் மீது மேற்கொண்ட அச்சுறுத்தல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் பொதுமக்கள் 25,000 பேருக்கு மேல் இடம் பெயர்ந்து வன்னி மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர்.

இடம்பெயர்ந்தோர் பற்றி பிழையான தகவல்கள் அடங்கிய விவரங்களை துண்டுப் பிரசுரங்களை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இத்துண்டுப் பிரசுரத்தில் உண்மைக்குப் புறம்பாக பல விடயங்களைத் தெரிவித்துள்ளதுடன் இரவுடன் இரவாக பொது மக்கள் கூடும் இடங்களில் ஒட்டிவிட்டும் சென்றுள்ளனர்.

அத்துண்டுப் பிரசுரம் விவரம்:

தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக சாதாரண தமிழ் மக்கள் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் தமது இருப்பிடங்களைக் கைவிட்டு பாதுகாப்பற்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவதாக மக்கள் விரோத குழுவொன்று உலக நாடுகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஆனால் மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே இடம்பெயர்ந்துள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிதாக இந்த அமைப்பு மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்காலத்தில் இந்த அமைப்பினருக்கு எதிராக செயல்படுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே அந்த குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்து செல்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவினருக்கு சமுதாயத்தில் முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தமது இருப்பிடங்களைக் கைவிட்டு யாரும் இடம்பெயரத் தேவையில்லை என்பதுடன் சகல மக்களையும் பாதுகாப்பதற்குப் பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதுடன், இந்த அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளை மீண்டும் கடத்தித் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியத் தருகிறோம்

<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#28
இங்கும் கொலைதானா? ம்.. அதுவும் இனம் தெரியாதவங்க செஞ்சாங்களா?

மக்களே இல்லை.. எல்லாரும் இடம் பெயர்ந்திட்டதா சொன்னாங்க.. இப்ப இப்படி சொல்லுறாங்க?
8
Reply
#29
<b>யாழில் மக்களை அச்சுறுத்தும் படையினர் நடவடிக்கைகள் அதிகரிப்பு! </b>

யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் பயணம் செய்யும் பேரூந்துகள், வான், கார் மற்றும் லொறிகளில் பலாத்காரமாக ஆயுதமுனைகளில் மறித்து பயணம் செய்யும் படையினரின் செயலுக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து பொதுமக்களின் வாகனங்களில் படையினர் பயணம் செய்வது நீடிப்பதாகவும் அச்சத்தின் காரணமாக பொதுமக்களை பணயமாகப் பயன்படுத்தும் மனநிலையில் படையினரின் செயற்பாடுகள் மாறிவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் வாகனங்களை படையினர் தாம் நினைத்த இடத்தில் மறித்து ஏறுவதும் தமது முகாம்களுக்கு முன்னால் நிறுத்தி இறங்குவதும் தற்பொழுது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நாவற்குழி சந்தியில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் மாலை ஏழு மணிக்கு பின்னர் பிரதான சாலை வழியாக வருவோரை மறித்து தாக்கி வருவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேலை முடித்து விட்டு களைப்புடன் வீடு திரும்பும் அப்பாவி மக்களை படையினரின் ஈவிரக்கமற்ற முறையில் தாக்கி வருகின்றனர்.

மக்களின் சைக்கிள்களின் காற்றுக்களை பிடுங்கி விடும் படையினர் பொதுமக்களை சைக்கிள்களை உருட்டிச் செல்லுமாறு பணித்து வருகின்றனர்.

சிலருடைய அடையாள அட்டைகளைப் பறித்து வைத்துக்கொண்டு காலையில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அச்சுறுத்துவதுடன் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே யாழ். குடாநாட்டில் அரச படைகளால் சமாதான காலத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்ட்ட படுகொலைகள் மற்றும் படுகாயப்படுத்தப்பட்டு ஊனமாக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படையினரின் தாக்குதலில் சொத்துக்கள் மற்றும் பொருட்களை இழந்த மக்களுக்கு போர் ஓய்வு கால நட்டஈடு வழங்க யாழ். அரச செயலகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமாதான காலத்திலும், சிறிலங்காப் படைகளால் மக்கள் சந்தித்த உயிர், உள பொருளாதார இழப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு என்பதால் யாழ். குடாநாட்டில் படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கும் அரசிடமிருந்து இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க யாழ். அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமரங்கள் சில காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், இவை படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு கரையோர பாதுகாப்பு நிலைகள் அமைக்க கட்டுமரத்தில் உள்ள மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

படையினரின் பிரசன்னம் உள்ள கரையோரப் பகுதிகளில் பிறிதொருவரின் நடமாட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லாமையால் படையினர் இவற்றை தமது தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கடந்த காலங்களிலும் இவ்வாறாக கட்டுமரங்கள் சில காணாமல் போய்யிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் தென்மராட்சி இராணுவ உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் வசிக்கும் மக்கள் படையினரின் அச்சுறுத்தல்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் அஞ்சி வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் ஒரு சிறிலங்காப் படைச் சிப்பாய்க்கும் ஆபத்து நேரும் எனில் அனைவரையும் சாம்பல் ஆக்குவோம் என்றும் ஒருவரேனும் இப்பகுதியில் கடத்தப்பட்டாலோ, காணாமல் போனாலோ உங்களில் பலர் காணாமல் போய்விடுவீர்கள் என்றும் நேரடியாகவே அச்சுறுத்தி வரும் படையினர் பொதுமக்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தும் முயற்சிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல குடும்பங்களை அச்சத்திற்குள்ளாக்கியிருப்பதால் பலரும் அப்பகுதியை விட்டு வெளியேற்றி வருவதாகவும் பலர் தமது பிள்ளைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டு இப் பகுதியில் வசிப்பதாகவும் நாள் தோறும் அனைத்து வீடுகளும் படையினரின் கூடுதலான கண்காணிப்பில் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சரசாலை ஊடாக நெல்லியடிக்குச் செல்லும் வெளிப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் இருபுறங்களிலும், நீண்டு செல்லும் பெரும் பற்றைகளை படையினர் தீயிட்டு அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும் காடுகளைப் போல் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள் பல படையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் மக்கள் படையினரின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும், பெரும் பற்றைகளுக்கு இடையிடையே முகாம்கள் சில இருப்பதாலும் பொது மக்களின் குடிமனைகள் நீண்டு செல்லும் இப்பெரும் வெளிப் பகுதியில் இல்லாமையினாலும் பொதுமக்கள் இந்த வீதியை அவசர தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

சாவகச்சேரிப் பிரதேசத்தில் இருந்து நெல்லியடிக்கு இலகுவில் செல்லும் வீதி இப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)