இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று நாள் இந் திய விஜயம் எதிர்பார்த்த வெற்றியையோ திருப்தியையோ அவருக் குத் தரவில்லை என்று புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரிய எதிர்பார்ப்போடு புதுடில்லி சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒட்டுமொத்தத்தில் வெறுங் கையுடன் இலங்கை திரும்பியிருக்கின்றார் என்கின்றனர் சுயாதீன நோக்கர்கள்.
* இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான அமைதி முயற்சிகளில் பங்களிக்க இப்பிரச்சினைக்குள் இந்தியாவை இழுத்துவிட இலங்கைத் தரப்பு எடுத்த முயற்சிக்கு இணங்காமல் நாசூக்காக மறுத்து விலகிக்கொண்டுவிட்டது புதுடில்லித் தலைமை.
* இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்குமானால் அச் சமயத்தில் இந்தியா நேரடியாக இலங்கைக்கு உதவிகளை வழங் கும் என்ற உறுதிமொழியை இந்தி யத் தரப்பிடமிருந்து எப்படியாவது பெற்றுவிட ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான இலங்கைத் தூதுக் குழு துடியாய்த் துடித்தது. ஆனால், அது சரிவரவில்லை. அத்தகைய இணக்கத்தை தயார் நிலை உறுதியை வழங்க இந்தியத் தலைமை மறுத்துவிட்டது.
* ஆகக்குறைந்தது, இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளுள் ஒன்றாக இந்தியத் தரப்பை இழுத்துச் செருகிவிடுவதற்கு இலங்கைத் தூதுக்குழு எடுத்த முயற்சிக்கும் இந்தியா இணங்க மறுத்துவிட்டது. ஏற்கனவே, இணைத்தலைமையை வகிக்கும் நான்கு நாடுகளுடனும் முரண்பட விரும்பாத புதுடில்லித் தலைமை இது தொடர்பான இலங்கைத் தரப் பின் கோரிக்கைக்குத் தெளிவாகப் பதில் தராமலேயே இலங்கைத் தரப்புக்கு ஏமாற்றிவிட்டது.
* கடைசியாக, உத்தேச இலங்கை இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தையாவது செயலுருப் பெற வைக்கும் முயற்சியில் ஜனாதி பதி மஹிந்த தரப்பு புதுடில்லியில் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட் டது. ஆனால், அதற்கும் கைவிரித்து விட்டது இந்திய மத்திய அரசு. இன் றைய சூழ்நிலையில் பாதுகாப்பு ஒப் பந்தம் என்ற பேச்சை எடுத்தாலேயே இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று புதுடில்லித் தலைமை இலங்கைக்குழுவுக்குத் தெரிவித்திருக்கிறது.
தமிழகக் கட்சிகள் மற்றும் எம்.பிக்களின் தயவில் தங்கிநிற்கும் இந்திய மத்திய கூட்ட மைப்பு அரசு, இலங்கையுடனான உத்தேச பாதுகாப்பு ஒப்பந்த விடயத்தை முன்நகர்த்தினால், அரசுக் கூட்டமைப்புக்கு ஆதரவான தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேருவதுடன் மத்திய அரசு கவிழும் நிலையும் ஏற்படும் என இந்தியத் தரப்பு இலங் கைத் தரப்புக்குச் சுட்டிக்காட்டியதாகக் கூறப் படுகின்றது.
அது மட்டுமல்லாமல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயம், தமிழகத் தில் இலங்கை அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், உணர்வெழுச்சியைக் கிளப்பி விட்டிருக்கின்றது. இது இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதி மஹிந்தவின் புது டில்லி விஜயத்தின் பெறுபேறாகக் கிடைத்த பெரும் பின்னடைவாகும்.
ஒருபுறம் ஜனாதிபதி மஹிந்தவைத் தமிழ கத்தில் வரவேற்பது தமக்கு எதிராக அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதி, மஹிந்தவை வரவேற்கத் தமிழக முதல் வர் ஜெயலலிதா மறுத்தமை ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவரது அரசுத் தலைமைக்கும் பெரிய அரசியல் அடியாகும்.
இவ்வாறு சுயாதீன நோக்கர்கள் மேலும் தெரிவித்திருக்கிறார்கள்.
source:
www.uthayan.com