01-08-2006, 03:06 PM
<b>போர் நிறுத்தம் முறிந்து விட்டதா?</b>
* சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்!
போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
இதன் உச்சக் கட்டமாக, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலும் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு வெளியே அதிவேக டோரா படகொன்று அழிக்கப்பட்ட தாக்குதலும் அமைந்துள்ளது.
கிழக்கில் ஆரம்பமான நிழல் யுத்தம் நிஜ யுத்தமாக மாறப்போகின்றதென எச்சரிக்கப்பட்டு வந்த போதெல்லாம் அது பற்றி அரசு தரப்பு அலட்டிக்கொள்ளவில்லை. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நிழல் யுத்தம் புலிகளை வலுவிழக்கச் செய்துவிட்டதாகக் கருதியோர் அந்த நிழல் யுத்தத்தை வடக்கிலும் மேற்கொள்ள முயன்றதன் விளைவே இன்றைய நிலைமை.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, குறிப்பாக புதிய ஜனாதிபதியின் பதவியேற்பும் புதிய இராணுவத் தளபதியின் நியமனமும் இவ்வாறானதொரு நிலைமையை தோற்றுவித்துவிட்டது.
யுத்தநிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதாயின் சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முன்னர் 14 நாள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டுமென்றெல்லாம் உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள போதிலும் எந்த முன்னறிவித்தலுமின்றி எல்லாமே முடிந்துவிட்டது.
போர்நிறுத்த உடன்பாடே அமுல்படுத்தப்படாத நிலையில் அந்த உடன்பாட்டிலிருந்து விலகுவதற்கு எவர் 14 நாள் முன்னறிவித்தல் கொடுக்கப் போகின்றனர்? இதுவே இன்று பெரும் யுத்தம் வெடிக்கப்போவதற்கான முன்னறிவித்தலாகிவிட்டது.
வடக்கு - கிழக்கில் கடந்த சில வாரங்களாக அப்பாவித் தமிழ் மக்கள் படையினரால் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். பொது மக்கள் மற்றும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டபோது போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கைகட்டிப் பார்த்திருந்தது. பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியை படையினர் காட்டுமிராண்டித்தனமாக அடக்கியபோது கண்காணிப்புக் குழுவினர் மௌனம் சாதித்தனர்.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மிலேச்சத்தனமாக படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது எவருமே வாய் திறக்கவில்லை. இந்த நிலைமைகள் தான் இன்று போர்நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவரக் காரணமாகிவிட்டன. இனி கண்காணிப்புக் குழு என்ன செய்யப் போகிறது?
போர் நிறுத்த உடன்பாடு, மக்களின் இயல்பு வாழ்க்கையை கருதிச் செய்யப்பட்டது. ஆனால், அந்த உடன்படிக்கை அமுலிலிருக்கையில், கண்காணிப்புக் குழு பார்த்துக் கொண்டிருக்கையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படையினரின் தாக்குதல்களால் படுகாயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு - கிழக்கில் அண்மைக்காலமாக நடைபெற்ற தாக்குதலில் புலி உறுப்பினர் எவரும் கொல்லப்படவில்லை. கொல்லப்பட்டவர்களெல்லாம் அப்பாவி மக்களே. ஆனாலும், யாழ் நகரில் கோட்டை அருகே ஐவர் கொல்லப்பட்ட போது அவர்களைப் புலிகளென்றனர். திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களையும் புலிகளென்றனர்.
எந்த உடன்பாடு தங்களுக்கு பாதுகாப்பாயிருக்குமென்று மக்கள் கருதினார்களோ அந்த உடன்பாடே அவர்களுக்கு எமனாகிவிட்டது. புலிகள் தான் படையினரைத் தாக்குகிறார்களென்றால், படையினர் புலிகளுடன் மோத வேண்டும். ஆனால், அண்மைக் காலத்தில் கொல்லப்பட்ட 40 அப்பாவி மக்களில் ஒரு புலியையாவது இவர்களால் காண்பிக்க முடியுமா என மக்கள் கேட்கின்றனர்.
திருகோணமலையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற படுகொலை தான், இனிமேல் போர்நிறுத்தமே வேண்டாமென தமிழ் மக்களை குரலெழுப்ப வைத்தது. திட்டமிட்ட ரீதியில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளது. திட்டமிட்டு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அதன் பின் படுகொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களையும் புலிகளென்று இராணுவம் அறிவித்தது. படையினரைத் தாக்கும் நோக்குடன் கைக்குண்டுகளுடன் வந்த புலிகளே, அதில் இரண்டு வெடித்ததில் உயிரிழந்ததாகக் கூறினர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இதனைக் கூறியிருந்தார்.
எனினும், இந்த ஐவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறியபோது, படையினரைத் தாக்க வந்த புலிகள் படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டபோது, சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்னர் இராணுவம் கூறியது. ஆனாலும், இதற்கும் படையினருக்கும் எதுவித தொடர்புமில்லையெனவும் படைத்தரப்பு கூறியது.
இதன் மூலம், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு வீச்சும் அதன் பின்னர் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதும், திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களென நிரூபணமாகிறது. படையினரின் பொய்ப் பிரசாரத்தை, மருத்துவ அறிக்கையும் வீதியிலிருந்த துப்பாக்கிச் சூட்டு அடையாளமும் அம்பலப்படுத்தியது.
அந்த ஐவரும் வைத்திருந்த கைக்குண்டுகள் தான் வெடித்து அவர்கள் உயிரிழந்தனரென்றால் அவர்களது மரணங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் எவ்வாறு காரணமாயின? அப்படியானால் அவர்களை யாரோ சுட்டிருக்க வேண்டும்.
மருத்துவ அறிக்கை, இந்தச் சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பிருப்பதை உறுதிப்படுத்திவிட்டது. ஆனாலும், இதனுடன் தங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் படையினர் கூறியது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகிவிட்டது.
இதற்கும் படையினருக்கும் தொடர்பில்லையென்றால், அவர்கள் வைத்திருந்த குண்டுதான் வெடித்து அவர்கள் இறந்ததாகவும், பின்னர் படையினர் மீது கைக்குண்டை வீச முற்பட்டபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் எவ்வாறு படையினரால் கூறமுடியும்.
ஆனால், திருகோணமலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் படுகொலையின் தொடர்ச்சியே நேற்று அதிகாலை திருமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே இடம்பெற்ற டோரா படகு மீதான தாக்குதலாகும்.
மட்டக்களப்பு, அம்பாறையில் கருணா குழுவின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிழல் யுத்தம் தங்களுக்கு வெற்றியளித்து வருவதாக படைத்தரப்பு கருதுகிறது. இதன் தொடர்ச்சியாக வடக்கிலும் நிழல் யுத்தம் ஆரம்பமானது. பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஆழ ஊடுருவும் படையணியும் தனது கைவரிசையை காட்டத்தொடங்கிய நிலையில் திருமலையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த மாணவர் மீதான படுகொலை மேற்கொள்ளப்பட்டது.
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையும், புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க முற்படுவதும் இனவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாகிவிட்டது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் புலிகளால் எவ்வித தாக்குதலையும் தொடுக்க முடியாதென்ற கணிப்பில் வடக்கு - கிழக்கில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி அதன்மூலம் மக்களை அச்சுறுத்தி புலிகள் பக்கமிருந்து அவர்களை பிரித்துவிடலாமெனத் தப்புக் கணக்கு போடப்பட்டுள்ளது.
குடாநாட்டில் முன்பெல்லாம் படையினரின் வாகனம் மோதி எவராவது காயமடைந்தால் கூட கொந்தளிக்கும் மக்கள், இன்று எத்தனையோ அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டும் பேசாதிருக்கின்றனர். ஆறுமணியுடன் யாழ். குடாநாடே முடங்கிவிடுகிறது. எதனைப் பற்றியும் எவருமே பேசுவதில்லை.
போர் நடைபெற்ற காலத்தில் கூட இருந்திராத அளவிற்கு இன்று வடக்கு - கிழக்கு மக்கள் மாலை 6 மணியுடன் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர். அவசர நோயாளர்களைக் கூட இரவில் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம், புலிகளின் நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மக்களின் ஆதரவை இல்லாது செய்துவிடலாமென படைத்தரப்பும் அரசும் கருதுவது போல் தெரிகிறது. அச்சமூட்டி தமிழர்களை அடக்கிவிடலாமென்ற ரீதியில் உளவியல் போர் தொடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சமூகத்தின் மூலம் புலிகளுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்தவாறு இந்த உளவியல் போரை முன்னெடுப்பதே புதிய அரசினதும் புதிய இராணுவத் தளபதியினதும் திட்டமென தமிழ் தரப்புகள் கடும் குற்றஞ்சாட்டுகின்றன. எனினும், இந்த அச்சமூட்டும் உளவியல் போரை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போகின்றார்களென்பதையே திருகோணமலையில் மாணவர்கள் மீதான படுகொலை உணர்த்தியது.
இந்தச் சூழ்நிலையில் தான் புலிகளின் கடும் எச்சரிக்கை வெளியானது. மக்களைப் படையினர் படுகொலை செய்வதை இனியும் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லையென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அறிவித்தார். மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்தார்.
ஆனாலும், படையினர் மீது பொது மக்கள் தாக்கினாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்துமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடும் உத்தரவு பிறப்பித்த மறுநாளே, படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறி ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இவையெல்லாவற்றுக்குமான உச்சபட்ச தாக்குதலே நேற்று அதிகாலை திருகோணமலையில் டோரா மீது மேற்கொள்ளப்பட்டதாகும். கடற் கரும்புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கடற்படையினர் கூறுகின்றனர். கிளேமோர் தாக்குதல்களின் அடுத்த கட்டத் தாக்குதல் இதுவாகும்.
எதிர்வரும் 23 ஆம் திகதி நோர்வேயின் விஷேட பிரதிநிதியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரையும் நோர்வேயையும் சமாதான முயற்சியிலிருந்து அப்புறப்படுத்துவதில் புதிய ஜனாதிபதி மிகத் தீவிரம் காட்டியதால் அவரும் கடும் அழுத்தங்களின் மத்தியிலேயே இங்கு வருகிறார். அவர் கூட அரசியன் உளவியல் போரில் சிக்குண்டுள்ளார்.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் நோர்வே மேற்கொள்ளும் முதலாவது அனுசரணைப் பணி இதுவாகும். அதற்கு முன்னர் தமிழ் மக்களையும் புலிகளையும் மிரட்டி அச்சுறுத்தும் வகையிலேயே தற்போதைய கடும் நடவடிக்கைகளில் படைத்தரப்பு இறங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனாலும், அதற்கு முன்னர் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாய தேவை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சொல்ஹெய்ம் இங்கு வந்ததும், ஒஸ்லோவில் கூட போர்நிறுத்த உடன்பாடு குறித்துப் பேச தாங்கள் தயாரென அரசு அறிவித்துவிட்டால், அதன் பின் எறியப்படும் ஒவ்வொரு கைக்குண்டையும், சமாதான முயற்சியை குழப்ப புலிகள் முயல்வதாக சுலபமாகக் கூறிவிடலாம். அவ்வாறானதொரு நிலையில் புலிகளால் எதுவுமே செய்ய முடியாது போய்விடும். சமாதான முயற்சிக்கு அரசு உடன்பட்ட நிலையில் அதனைக் குழப்பவே புலிகள் தாக்குதல் நடத்துவதாக வெளியுலகும் கண்டிக்கும்.
சொல்ஹெய்மின் வருகைக்கு முன், எப்படித் தங்களை வலுவுள்ளவர்களாகக் காட்ட முடியுமோ அந்தளவிற்கு அச்சமூட்டும் உளவியல் போரை நடத்துவதில் படைத்தரப்பு தீவிரம் காட்டுவது போல் தென்படுகிறது.
அதனால் தான் சொல்ஹெய்மின் வருகைக்கு முன்னர் புலிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. அதன் ஒரு கட்டமே நேற்றைய டோரா மீதான தாக்குதலென பலரும் கருதுவதால் செல்ஹெய்மின் வருகைக்கு முன்னர் மேலும் அசம்பாவிதங்கள் நிகழக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், சொல்ஹெய்மின் வருகைக்கு முன்பே முழு அளவில் போர் வெடித்து விடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது. அதற்கேற்பவே தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.டோரா மீதான தாக்குதல் குறித்து இன்னமும் சரியான விபரங்கள் வெளியாகவில்லை.
இது தற்கொலைத் தாக்குதல்தானென்றால் அவ்வாறானதொரு தாக்குதலை மேற்கொள்ளுமளவிற்கு நிலைமை சென்றுவிட்டதால் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது கடினம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மௌனம், தற்போதைய நிலைமைகளுக்கு அவரது ஆசியும் உண்டெனக் கருத வைக்கிறது. நிலைமையின் பாரதூரத்தை அவர் இதுவரை உணர்ந்து கொள்ளவில்லையென்பதும் தெளிவாகிறது.
இந்தச் சூழ்நிலையில் பெரும் போர் வெடிக்காவிட்டாலும் அரசினதோ அல்லது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கோ புலிகள் இனிப் பணிந்து போகும் சாத்தியமில்லையென்பது தெளிவு. முன்பெல்லாம் யுத்தநிறுத்தம் முறிந்து போனபோது அதற்கு புலிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. ஆனால், இம்முறை புலிகள் மீது வலுக்கட்டாயமாக யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் மௌனம் குறித்து தமிழ் மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கிய நிலையில் திருமலையில் டோரா மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது தொடரும் சாத்தியமும் தென்படுகிறது. வடக்கு - கிழக்கில் யுத்த நிறுத்தம் அமுலிலுள்ள போதே தமிழர்கள் படுகொலை செய்யப்படுகையில் அந்த யுத்தநிறுத்தத்தைப் பயன்படுத்தி தெற்கிலிருந்து இனியும் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்க முடியாதென்பது தெளிவாகிவிட்டது.
நோர்வேயின் அனுசரணை முயற்சி இனியும் பயனளிக்கும் சாத்தியம் தெரியவில்லை. காலத்தை கடத்தும் முயற்சியே இந்த சமாதானப் பேச்சுவார்த்தையும் போர்நிறுத்தமும் என்பதை தமிழர்கள் உணர்ந்துவிட்டனர். இதையே, மாவீரர் தின உரையிலும் புலிகளின் தலைவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் கூறியதுபோல், மகிந்தவின் அரசிற்கான காலக்கெடு முடிந்து தாயக விடுதலைக்கான போராட்டத்தை தமிழர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.
பொன்சேகா கடும் உத்தரவு பிறப்பித்த மறுநாளே, படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறி ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

http://www.thinakural.com/New%20web%20site...08/vithuran.htm

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>