Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசேட அதிரடிப்படையின் கைவரிசை
#1
இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கோ சம்பந்தப்பட்ட ஏனையோருக்கோ தெரியா மல்
திருகோணமலை நகரின் பாதுகாப்புக்கு என்ற பெயரில் விசேடமாக அனுப்பப்பட்ட ஒரு
சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 24 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை யினரின்
கைவரிசையே திருகோணமலையில் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்களினதும் படுகொலைகள்
என இப்போது தகவல்கள் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக் கின்றன.
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்றதும் அவரது பாதுகாப்பு ஆலோசகராக,
ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிரமுகரும், முன்னாள் பிரதிப் பொலீஸ்மா அதிபரு மான
எச்.எம். பி. டபிள்யூ. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவும்
அவ ரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருமான கோட்டபாய ராஜபக்ஷவும்
இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கை யில்
அந்தச் சந்தர்ப்பத்தை வகையாகப் பயன் படுத்தி பாதுகாப்பு அமைச்சின் செயலாள ருக்குத்
தெரிவிக்காமல் அவருக்குத் தெரி யப்படுத்தாமல் மேற்படி விசேட அதிரடிப்படைப் பிரிவினர்
கொட்டகதெனியவின் வழிகாட்டலில் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும்
கூறப்படுகின்றது.
குழப்பத்தை ஏற்படுத்தும் "பயங்கரவாதி களுக்கு' எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற விசேட உத்தரவுடன் அனுப்பி வைக்கப்பட்ட இந்த அணியினரே ஐந்து
அப்பாவித் தமிழர்களையும் கொன்று தமது கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.
திருகோணமலையிலோ, மேலிடத்திலோ உள்ள பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்குத்
தெரியப்படுத்தாமல் இந்த விசேட அதிரடிப்படை அணி விசேட உத்தரவுடன் அங்கு
அனுப்பிவைக்கப்பட்டிருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றது.
ஜனாதிபதியின் ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தமது அதிகார எல்லை களைத் தாண்டி
இவ்வாறு படைக்குவிப்பு, நகர்த்தல் போன்ற செயல்களில் கையடிப்பது பாதுகாப்பு
உயர் வட்டாரங்களில் பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் கூட உருவாக்கியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் தற்போது
அமைதி முயற்சிகளுக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் வாய்ப்புகளையும் குழப்பியடிக்கும்
விதத் தில் அரசின் பாதுகாப்புக் கொள்கை மற்றும்
நடைமுறைப்படுத்தல் ஆகியன
தொடர்பான விடயங்களில் தமது எல்லை தாண்டி அவர்
பகிரங்கமாகக் கருத்து வெளியிடுவ தும் அரசுக்குத் தேவையற்ற பல குழப்பங் களை
உருவாக்கியிருப்பதாகத் தெரிகின்றது.
இந்த நிலைமை குறித்தும் தமது அதிகார செயற்பாட்டு எல்லையைத் தாண்டி ஜனாதி பதியின்
பாதுகாப்பு ஆலோசகர் செயற்படக் கூடாது என்பது பற்றியும் பாதுகாப்பு அமைச் சின்
செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அண்மையில் கொட்டகதெனியவுக்கு நாசூக் காக
ஆலோசனை கூறியிருக்கிறார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு மற்றும் மலையகப்
பிரதேசங் களில் தமிழர்களுக்கு எதிராகப் பெரும் கெடுபிடிகள், தேடுதல்கள்,
சுற்றிவளைப்பு கள் என்பன இடம்பெறுவதற்கும் கொட்டகதெனியவே காரணம்
என்றும் சில வட்டா ரங்களில் சந்தேகம்
தெரிவிக்கப்படுகின் றது.

www.uthayan.com
enrum anpudan
Reply
#2
SUNDAY TIMESல் வந்த இந்தச்செய்தியினை இன்று உதயன் வெளியிட்டுள்ளது
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)