01-15-2006, 07:02 AM
<b>இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு: புலிகள் ராணுவம் மோதலால் கடும் பதட்டம் </b>
ராமேஸ்வரம்: கடந்த ஒரு மாதமாக இலங்கையில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், பீதியடைந்த தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஐந்து பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் இனப்போராட்டத்தில் இதுவரை 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்பாடா...! சண்டை ஓய்ந்தது என்று இலங்கை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவியேற்ற பின்னர் நிலைமை மாறி விட்டது.
கடந்தாண்டு இறுதியில் இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ராக்கெட் வீசி தாக்கப்பட்டது. இலங்கை கடற்படையினர் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த இரு சம்பவங்களையும் புலிகள் மறுத்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் 100 பேர் பலியாகி யுள்ளனர்.
அமெரிக்கா அரசு சார்பில் இந்த மோதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், மோதல்கள் தொடர்கின்றன.
இலங்கை மட்டகளப்பில் நார்வே நாட்டு அமைதித் துõதர்கள் தலைமையிலான சண்டை நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தங்கியிருந்த அலுவலக கட்டடத்தின் மீது நேற்று யாரோ சில மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும், கட்டடத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் புலிகள் மறுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து சண்டை நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹெலன் வோலப்ஸ் டாட்டிர் கூறுகையில், ""தாக்குதல் சம்பவத்திற்கு பிண்ணனியில் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. முதல்முறையாக எங்கள் அலுவலகம் <உள்ள கட்டடம் நேரடியாக தாக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால், அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். மூன்றாண்டு காலத்திற்கு பின்பு கடந்த மூன்று நாட்களாக ராமேஸ்வரத்திற்கு அகதிகள் வருவது அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் மட்டும் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர். நேற்று மட்டும் இரண்டு ஆண்கள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர்.
இதுகுறித்து கவுசல்யா என்ற 19 வயதுப் பெண் கூறுகையில்,""நாங்கள் தலைக்கு ரூ. 3 ஆயிரம் கட்டணமாக கொடுத்து தமிழ்நாடு வந்திருக்கி றோம். இலங்கையில் இனி அமைதியாக வாழ முடியாது. அங்கு இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் நாங்கள் பீதியில் இருந்தோம். ராணுவத்தினர் எங்கள் மீது துப்பாக்கியால் சுடுகின்றனர். குழந்தைகளை கொன்று குவிக் கின்றனர். பெண்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குகின்றனர். நாங்கள் உயிருக்கு பயந்தே இங்கு வந்திருக்கிறோம்,'' என்றார்.
ஏற்கனவே வந்துள்ளவர்களில் 24 பேர் இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 12ம் தேதி இங்கு வந்தனர். அடுத்து வந்துள்ள ஒன்பது பேரும் மன்னார் மாவட்டத்திலுள்ள தெசலையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் மண்டபம் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1980ம் ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இந்தியா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : dinamalar.com
http://www.dinamalar.com/2006jan15/imp1.asp

.
.
.