Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் தமிழ் தேசியப்பிரகடனம்
#1
திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Written by Ellalan Monday, 09 January 2006

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் வேறு, தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு அல்ல என்பதனை சர்வதேசத்தின் பார்வைக்கு உரைத்துக் காட்டுமுகமாகவும், இதேவேளை தமிழ் மக்களின் உணர்வுகளை இனிவரும் காலங்களிலாவது சர்வதேச சமுகம் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும், பாரபட்சமின்றி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச சமுகத்திற்கும் உணர்த்தும் வகையிலும் இந்த முக்கியமான கட்டத்தில் இந்த எழுச்சி பிரகடன நிகழ்வு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


தகவல்: சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#2
திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினர் வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்ற வேண்டும் என்று அச்சுறுத்தி வருவதாக மக்கள் உரிமை அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


டோரா படகுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா கடற்படையினருக்கு இரங்கல் தெரிவித்து இந்த வெள்ளைக் கொடிகளை ஏற்றுமாறு சிறிலங்கா கடற்படை கட்டளையிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து திருகோணமலையில் மேலதிக படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூழ்கடிக்கப்பட்ட டோரா படகின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் லெப்டினண்ட் கொமாண்டர் கமல் வனரட்ன என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரு கடற்படையினர் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ். தாக்குதல்களில் சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதும் வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்றி இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினர் கட்டளை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது

http://www.eelampage.com/?cn=23230
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
திருகோணமலை கடற்கரைச் சேனையில் தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வு

நாளை நடத்த அழைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், வெருகல் மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழீழ மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கடற்கரைச் சேனையில் தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வு ஒன்றை நடத்தவிருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் வாகரைப் பிரதேச தேசிய எழுச்சிப் பிரகடன ஏற்பாட்டுக் குழு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அறிக்கை வருமாறு;

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், வெருகல் மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான தமிழீழ மக்கள் நாளை 10 ஆம் திகதி ஒன்று கூடி தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வினை நடத்தவிருக்கின்றோம்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழீழ பிரதேசமெங்கும் இத்தகைய எழுச்சி நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில் 2006 ஆம் ஆண்டில் முதல் எழுச்சி நிகழ்வாக நடைபெறுவதற்கான சகல ஒழுங்குகளும் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மேற்படி பிரதேசங்கள் எங்கும் எழுச்சி ஏற்பாட்டுக் குழுக்கள் எம்மால் அமைக்கப்பட்டு பிரசாரப் பணிகள் கிராமங்கள் தோறும் உணர்வு பூர்வமாக அரங்காற்றுகைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் பேசும் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பின் பின், ஒற்றையாட்சி முறையின் கீழ் இறைமையை இழந்தவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாகவும் உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாகவும், பாதுகாப்பு அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் நிலையினை பேரினவாத அரசுக்கு நாகரிகமான முறையில் எடுத்துக் கூறிய போதெல்லாம் பல தடவைகள் ஒப்பந்தங்களென்றும், பேச்சுவார்த்தைகளென்றும், பேசப்பட்டு பின்னர் அவை அனைத்துமே எந்த விதமான பயன்பாடுகளுமற்ற வகையில் செயலிழந்து போயின.

தமிழ் பேசும் மக்கள் அடிமைகளாகவும், சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களாகவும் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம், இறைமை, தன்னாதிக்கம் என்பவை நியாயமானவை. இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான அங்கீகாரம் உள் நாட்டிலும் சர்வதேசங்களிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் சர்வதேசத்தில் தனியான ஒரு இனமாகவும், தங்களைத் தாங்களே ஆளுகின்றவர்களாகவும், தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பதை உலகு ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களது உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேசமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த குரல் என்பதை "தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வு' மூலம் எடுத்துக் கூறவுள்ளோம்.

தினகுரல்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
பாதுகாப்பு வழங்க மறுத்த படையினர் இன்று பேச்சுக்கழைப்பது வேடிக்கை புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலன்
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறிய படைத்தரப்பினர்இ டோராபடகு வெடித்து சிதறியதும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையானது என்று விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலன் தெரிவித்தார்.நாளை செவ்வாய்க்கிழமை மூதூர் கிழக்கில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை கடற்கரைச் சேனை தேசிய எழுச்சிப் பேரவை பணிமனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடற்படை டோரா படகு வெடித்து சிதறி 13 கடற்படையினர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இராணுவ கடற்படைஇ பொலிஸ் அதிகாரிகள் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும்இ இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு வழங்கத் தயாராகவுள்ளதாகவும் கண்காணிப்புக் குழுவினர் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் மூதூரில் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைக்க இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நான் செல்ல முயன்ற போது எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்ற படையினர் இன்று என்னை பேச்சுக்கழைப்பது வேடிக்கையானது. திருமலை கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா படகு வெடித்து சிதறியதாகவும்இ 15 பேர் காணாமல் போனதாகவும் ஊடகங்கள் வாயிலாகத் தான் நான் அறிந்து கொண்டேன். இன்று திருகோணமலை மாவட்டம் பற்றிய செய்தி ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின்றது. ஊடகங்களின் கவனம்இ தற்பொழுது திருமலையின் பக்கம் திரும்பியுள்ளது. கடற்படையினரால் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து திருமலை மாவட்டம் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது.

எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழீழத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய எழுச்சி விழா பிரகடன நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவிருக்கின்றது. இதில் தமிழீழ மக்கள் உலக நாடுகளுக்கு பல செய்திகளைச் சொல்ல விருக்கின்றனர் என்பதை இந்த ஏற்பாட்டுக் குழுவில் முக்கிய பிரதிநிதிகள்மூலமும்இ பெருந்திரளாக வந்திருப்பதைக் காண முடிகின்றது.

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<b>இனியும் அங்கீகரிக்காவிட்டால் "இறுதி மக்கள் யுத்தம்" : மூதூரில் பிரகடனம் </b>

[புதன்கிழமை, 11 சனவரி 2006, 00:23 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் இனியும் அங்கீகரிக்காவிட்டால் எமது தேசியத் தலைவரின் ஆணையை ஏற்று மண் காக்க மக்கள் படையணி போரிடும் என்று மூதூர் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


திருகோணமலை மூதூரில் தமிழ் தேசிய மாநாட்டு எழுச்சிப் பேரவைத் தலைவர் பொ. இரட்ணசிங்கம் தலைமையில் நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடனத்தை படையணி பொறுப்பாளர் பிரபாகரன் வெளியிட்டார்.

அப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனியும் யோசிக்க என்ன இருக்கின்றது. ஒன்றும் இல்லை. ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டியதுதான். அதுதான் சாவுக்குள் வாழ்வை அமைப்பதென்பது.

சாவென்பது எமக்கு வீரச்சாவாக அமைய வேண்டும். வீழ்ந்தவர் நினைவுடன் வீறாக எழுந்து எமது மக்களின் வாழ்வுக்காக எமது மண்ணையும் எமது இருப்பையும் காப்போம். எத்தனை வருடங்கள் ஏமாற்றப்படுவது?

50 வருடங்களுக்கு மேலான போராட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடலாமா? பம்மாத்து பாராளுமன்றத்தில் சாத்வீக போராட்டங்கள் சாதித்தது என்ன. உயிரினையும், உறவுகளையும் உடைமைகளையும் இழந்ததுதான். திட்டமிட்ட இன அழிப்பினால் இலங்கை உச்க்கட்டத்தில் நின்றதனை நாம் கண்டோம். குட்டக் குட்ட குனியும் மடையர் என நினைத்தவர்களை தட்டிக்கேட்டது எமது புதல்வர்களது கரங்களில் ஏந்திய ஆயுதங்கள் பட்டொழிந்து போவதைவிட தட்டிக் கேட்டு வெட்டிச் சரித்து சரித்திரம் படைத்த போதுதான் தட்டிக் கழிக்க முடியாது சமரசம் பேச வந்தான் எமது எதிரி.

சர்வதேமும் உற்றுப் பார்த்து உணர்ந்து கொண்டதால் விட்டுக் கொடுப்பு சமாதான தேவையுடன் சரியென வந்தனர் எமது வீரப்புதல்வர்கள், ஆனால் திட்டமிட்ட சதிகளுடன் எம் எதிரிகள் திசை மாறி சென்று விட்டனர்.

சமாதானத்தை உச்சரித்துக் கொண்டு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையிலும் மனித உரிமை மீறல்களிலும் யுத்தநிறுத்த மீறல்களிலும் தனது இராணுவத்தை ஈடுபடுத்திக் கொண்டும் சர்வதேத்தை ஏமாற்றிக் கொண்டும் இருக்கின்றனர்.

சர்வதேம் எங்கும் எம் வீரப்புதல்வர்களின் பலம் உணர்ந்து கொள்ளப்பட்ட நிலையில் வெறி பிடித்த சிறிலங்கா இராணுவத்தினதும் அரசினதும் பேரின வெறி பெரிதாக தொடரவே செய்கின்றது.

அரிய தியாகத்தினால் எமது மண் அகிலம் வியக்கத்தக்க வகையில் தலை நிமிர்ந்துள்ளது. எமது படை சகல மக்களின் வாழ்வுக்காக, சமாதானத்துக்காக தலைசாய்த்து நிற்கிறது. எமது வீரப் போரின் கரங்களாகிய மக்கள் தாம் எதிர்பார்த்தது பொய்த்து விடக்கூடாது என்ற நினைப்புடன் எமக்காய் தியாகத் தீயில் உயிரிழந்த எம் புதல்வர்களின் கனவுகள் சமாதான சதி வலையில் சிக்கிச் சாவதை இன்னும் அனுமதிப்பதா? என்று குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

எமது வீர வரலாறும் போர்க்கள வீச்சும், அகிலம் அறியும்.

அந்த அர்ப்பணிப்புக்கள் கற்பனைக் கதையல்ல, நாம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களின் உன்னதப் போரும் உலகம் வியக்கும் அரசியல் போக்கும் அறிந்த நாம் இனியும் பேரினவாதிகளுடன் பேரம் பேசுவதா?

போர் தவிர்த்து சமாதானம் பேசுவது வீண் என்று விளங்கவில்லையா?,

தமிழீழ தமிழர் நாம் விடுதலைப் புலிகள் என யார் அறிவார்.

தமிழ் மக்கள் அனைவரும் புலிகளே. தமிழீழ தமிழர்களின் உலகப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன், இன்று நாம் அவர் ஆணைக்காக காத்திருக்கும் நிலை. பொறுமைக்கும் எல்லையுண்டு. காத்திருக்கின்றோம் தலைவர் சொல்லை.

இனியும் நாம் சர்வதேசத்துக்கு மதிப்பளித்து நாம் உயர்வானவர்கள் என்பதை அவர்கள் எமது பிரச்சினையில் ஈடுபட்டு நீதியான தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவர்களின் மனிதாபிமான கடமை.

அதில் சர்வதேசம் தவறும் நிலையில் நாம் எதுவித அச்சமும் இன்றி எமது தலைவனின் பின்னால் அணி திரள்வோம்.

மக்கள் படையணி போரிடும் போதிலே எமது இருப்பையும் வாழ்வையும் எமது வாழ்வுக்கான மண்ணையும் காப்போம்.

இருப்பினும் இழப்போ, இறப்போ என்ன யோசிக்க இருக்கின்றது. ஒன்றுமே இல்லை. ஒரு முடிவுதான் இறுதி முடிவு. அதுதான் மக்கள் படையணி.

புலிப்படை மண் காக்கும், மானம் காக்கும், வாழ்வு அமைக்கும். தமிழீழம் காணும், தரணி எங்கும் போற்றும்!

சர்வதேசமே, சர்வதேச மக்களே, சிறிலங்கா அரசே! யுத்தமின்றி சாத்வீகமான முறையில் கௌரவமான தீர்வுக்கே இன்றுவரை இந்த நிமிடம் வரை காத்திருக்கிறோம்.

எமது உள்ளத் துடிப்பையும் உணர்வையும் புரிந்து கொண்டு எமக்குரிய தீர்வினை தரத் தவறினால் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது தேசிய தலைவனின் வழியிலே வழிகாட்டலிலே எமது தீர்வினை பெற்றுக் கொள்ள தயாராகி விட்டோமென உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

மரபு வழித்தாயகம், தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, எமது இறையாண்மைக்கான போராட்டம் என்பனவற்றின் அடிப்படையில் எம்மையும், எமது போராட்டத்தையும் அங்கீகரிக்குமாறு சமாதானத்தை விரும்புகின்ற அனைத்து சர்வதேசத்தையும், சர்வதேச நாடுகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் பின்பும் சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் தலைவன் கூறியது போல் தரப்பட்ட கால அவகாம் முடிவடைகின்றது. எனவே விடுதலைப் போரை எங்கள் காவலன் சுட்டும் காலத்தில் நாமும் இணைந்து முன்னெடுக்க தயார். எங்களை வாழ விடுங்கள் இல்லையேல் எமது வழியில் விடுங்கள் என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொதுச்சுடரினை வீரவேங்கை சிவாஜினி, லெப்டினன்ட் தானந்தா ஆகியோரின் பெற்றோர்களான தியாகராஜபிள்ளை, அருளானந்தம் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

தமிழீழத் தேசியக் கொடியினை வீரவேங்கை மேஜர் தமிழ்மாறன், துணைப்படை வீரர் குப்பியன் ஆகியோரின் தந்தையாரான சந்தகுட்டி அரசரெட்ணம் ஏற்றி வைத்தார்.

ஈகச்சுடரினை கரும்புலி மேஜர் ஜெயத்தின் தாயார் குணநாயகம் நாகேஸ்வரி ஏற்றி வைத்தார்.

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சி.எழிலன், தளபதி மருதம், தலைமைச் செயலக பொறுப்பாளர் புதியவன், மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் காருண்யா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அரங்க செயற்பாட்டுக் குழுவினரின் கலை நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மூதூர் கிழக்கு மற்றும் மூதூர் தெற்கு பிரதேசங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூதூர் முழுமைக்கும் மஞ்சள், சிவப்பு நிறக்கொடிகளும் வாழைமரங்கள், மகர தோரணங்களாகக் காட்சியளித்தது


நன்றி:புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)