Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் - ஹிந்துஸ்தான் டைம்ஸ்
#1
புதன் 11-01-2006 21:21 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்]

<b>விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அச்சமே பேச்சுக்களை தொடங்க முட்டுக்கட்டையாக இருக்கிறது - ஹிந்துஸ்தான் டைம்ஸ்.</b>
தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அம்சமே தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் தரப்புக்களை ஆதாரம் காட்டி இந்த கருத்தை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

ஆசிய நாடு ஒன்றிலோ அல்லது தென்னாபிரிக்காவிலோ பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது அங்கு தமக்கு சம உரிமைத்தன்மை வழங்கப்படாது என தமிழீழ விடுதலைப் புலிகள் எண்ணுகின்றனர்.

சர்வதேசம் ஏற்றுக்கொண்ட இறைமைக் கொண்;ட நாடு ஒன்றுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்படும் என்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.

எனவே தான் அரசாங்கம் முன்வைத்த இந்த இரண்டு இடங்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என ஹிந்துதாஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நோர்வேயில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதை தமிழீழ விடுதலைப்புலிகள் விரும்புவதற்கு முக்கிய காரணம் நோர்வே கடந்த பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் சமதன்மையை வழங்கியிருந்தது.

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்லோ மாநாட்டின் போது நோர்வே நாடு முன்னாள் பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கும் சம பாதுகாப்பை வழங்கியிருந்தது.

பேச்சுவார்த்தையின் போது அரசாங்கத்தின் கொடியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியும் மேசையில் வைக்கப்பட்டிருந்தன என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நோர்வே உட்பட மேற்கத்தைய நாடுகளை தவிர்;ந்த பிற நாடுகளில் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகும் நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்காமைக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் இரண்டு காரணங்களை குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கிடைக்கும் மேற்கத்தைய வரவேற்பபை குறைப்பதும்

சமாதான முனைப்புகளுக்கு மேற்கத்தைய நாடுகளில் இருக்கும் முக்கியத்துவத்தை குறைப்பதுமே இந்த இரண்டு காரணங்களாகும்.

இதேவேளை அரசாங்க தரப்பு ஏன் நோர்வேயை பேச்சுவார்த்தை தளமாக ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகிறது என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நாட்டின் நம்பிக்கையில்லை என்றபோதும் வேறு வழியில்லை என்ற நிலையில் நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக ஏற்றுக்கொண்டமை,

அத்துடன் தென்னிந்திய பின்கதவின் ஊடாக நாட்டின் பிரிவினைக்கு இந்திய அரசாங்கம் உதவாது என்ற காரணங்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்காக சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)