Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டு. சட்டவாளர்கள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு
#1
<b>மட்டு. சட்டவாளர்கள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு </b>


மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்களிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையி லான சந்திப்பு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் மற்றும் மட்டு நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. அன்புமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொண்டனர்.

அண்மைக் காலமாக படையினரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது, தடுத்து வைத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளைக் கையாளலாம் என்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் தெரிவித்துள்ளார்.


<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு & சங்கதி</i></b>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)