Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
8 கடற்படையினர் கொலை
#1
8 SLN sailors killed in Claymore blast in Chettikulam

[TamilNet, January 12, 2006 10:48 GMT]
Eight Sri Lanka Navy sailors were killed when the bus they were travelling in hit a Claymore mine explosion in Chettikulam Thursday evening around 4:20 p.m., Sri Lankan naval sources said. The attack took place on Mathawachi - Mannar Road.
Eight SLN personnel were seriously wounded, the sources added.

Chettikulam is located 24 km southwest of Vavuniya town.

Further details are not available at the moment.

tamilnet
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b>வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: 8 கடற்படையினர் பலி </b>

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் ஸ்ரீலங்கா கடற்படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்து மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் எட்டுக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.

மதவாச்சி மன்னார் வீதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை

<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
Reply
#3
<b>வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: ஒன்பது கடற்படையினர் பலி </b>
Written by Paandiyan Thursday, 12 January 2006

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் சிறீலங்கா கடற்படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் ஒன்பது கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு கடற் படையினர் படுகாயமடைந்துள்ளனர். (மேலதிக விபரம் இணைப்பு)

வவுனியா புனாவ கடற்படை முகாமிலிருந்து மன்னார் நோக்கி பேரூந்து ஒன்றில் மதவாச்சி - மன்னார் வீதி வழியாக சென்ற கடற்படையினரை இலக்கு வைத்து செட்டிக்குளத்திற்கும் அடம்பன் குளத்திற்கும் இடையில் வைத்து இக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த கடற்படையினர் அனைவரும் செட்டிக்குளம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். னஇவர்களை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதற்கு இராணுவத்தினர் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மேலதிக இராணுவத்தினர் அழைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்தி: சங்கதி
<b>
?
- . - .</b>
Reply
#4
2 ஆம் இணைப்பு) செட்டிக்குளத்தில் கண்ணிவெடியில் சிக்கி 10 சிறிலங்கா கடற்படையினர் பலி: 9 பேர் படுகாயம்!!
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 16:42 ஈழம்] [வவுனியா நிருபர்]
வவுனியா செட்டிக்குளத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 4.20 மணிக்கு கிளைமோர் கண்ணிவெடியில் சிக்கி 10 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 9 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.


மன்னார் - மதவாச்சி வீதியில் செட்டிக்குளத்துக்கும் அடம்பன்குளத்துக்கும் இடையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அனுராதபுரம் கடற்படை முகாமிலிருந்து வியாழக்கிழமை மாலை மன்னாருக்கு விடுமுறையில் திரும்பிய கற்படையினரை இராணுவ வாகனத்தில் அழைத்துச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




வவுனியா நகரிலிருந்து தென்மேற்கில் 24 கிலோ மீற்றரில் செட்டிக்குளம் உள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட மன்னார் - மதவாச்சி வீதியானது மன்னாருக்கான பிரதான விநியோகப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை சிறிலங்கா கடற்படையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

படுகாயமடைந்த படையினர் செட்டிக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலையடுத்து மேலதிக படையினர் செட்டிக்குளம் பகுதியில் குவிக்கப்பட்டு பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இத்தகைய கிளைமோர்த் தாக்குதல்களில் சிக்கி மொத்தம் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41210000/jpg/_41210230_bus203.jpg' border='0' alt='user posted image'>
The wrecked bus the sailors were travelling on

படம்> bbc.co.uk
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)