Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரைத் தொடங்க ஆணையிடுங்கள்
#1
போரைத் தொடங்க ஆணையிடுங்கள்: தேசியத் தலைவருக்கு மட்டக்களப்பு பிரகடனம் வேண்டுகோள்!

எதிரி வலிந்து போரைத் தொடங்க முனைகின்ற நிலையில் இனியும் பொறுத்திருக்காமல் போரைத் தொடங்க ஆணையிடுங்கள் என்று தமிழீழத் தேசியத் தலைவருக்கு மட்டக்களப்பு கண்டன எழுச்சிப் பிரகடனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


மட்டக்களப்பு அம்பிலாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன எழுச்சி நிகழ்வில் வெளியிடப்பட்ட பிரகடன விவரம்:

சிறிலங்கா அரசு எம்மீது வலிந்து போர் தொடுக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. சர்வதேசத்தின் மத்தியில் எமது இனத்துக்கு களங்கம் ஏற்படும் வகையில் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கிறது. தற்போதைய அரசும், இனவெறிக் கூட்டமும் எமது உயிரினும் மேலான விடுதலையைப் பயங்கரவாதமாக்க முனைந்து செயற்படுகின்றது.

நாளுக்கு நாள் எமது உடன்பிறப்புக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். மென்போக்குக் கொண்ட தமிழ் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், சாதாரண தொழிலாளிகள் அனைவரும் தமிழினம் என்ற ஒரே காரணத்துக்காகக் கோழைத்தனமாகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

இன்றைய சமாதான சூழலை நன்கு பயன்படுத்தி சர்வதேசம் எங்கும் தமிழினத்திற்கு எதிரான நாகரீகமற்ற கபடத்தனமான கருத்துகளை முன்னெடுத்துச் செல்வதுடன் எம்மினத்தைச் சீண்டிப் பார்க்கவும் முனைகிறது சிறிலங்கா அரசு.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை மட்டும் நோர்வே நாடு வழங்கினால் போதும். அதன் தலைநகரில் பேச்சுக்கள் நடைபெறக் கூடாது எனவும், சர்வதேச நாடுகள் எல்லாம் எம் இனத்தின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளக் கூடாது என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது சிறிலங்கா அரசு.

எமது தமிழ்ப் பெண்கள், மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு நடுவீதிகளிலும் பாழ் கிணறுகளிலும் தூக்கி வீசப்படுகின்றனர். இன்றைய சமாதானச் சூழலில் புங்குடுதீவில் சகோதரி தர்சினிக்கு நடந்த அவலமும் மன்னாரில் பச்சிளம் குழந்தைகளுடன் பெற்றோரையும் சேர்த்து எரிக்கப்பட்ட கொடுமையையும் எண்ணிப் பார்க்கின்ற போது எம் நெஞ்சங்கள் வெடிக்கின்றன.

நீண்டகாலமாக தமிழ் மாணவர்களுக்குக் கல்வி, தொழில் வாய்ப்புக்களில் பாரபட்சம் காட்டி வருவதே சிங்கள இனவாத அரசுகளின் இனவெறிப் போக்குகளாகும். இப்படியான பாரபட்சத்துக்கு சவாலுடன் முகம் கொடுத்து கல்வியில் வெற்றி காணும் தமிழ் மாணவர் சமூகத்தை சிங்கள இன வெறியர்கள் பொறுக்க முடியாமல் நயவஞ்சகமாகக் கொலை செய்து வருகின்றனர்.

கடந்த 2002- பெப்ரவரி 23 ஆம் நாள் கைச்சாத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இன்று வரை நிராயுதபாணிகளாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான எமது தாயகப் பிரதேசத்திற்குள் அரசியல் பணியாற்றச் சென்ற 200-க்கும் மேற்பட்ட போராளிகளும் 500-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களும் சிங்கள இனவெறியர்களால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நெஞ்சங்களை உலுக்கி நிற்கின்றது. இந்நிலையில் தமிழர் தாயகமெங்கும் நிழல் யுத்தம் ஒன்றை சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு நடாத்தி வருகின்றது.

வீரம் விளை நிலத்தின் வித்துக்களே!

எம் இனிய உறவுகளே! நாம் பொறுமை காத்தது போதும்! பொங்கியெழுவோம்!!

சர்வதேச சமூகமே! சிறிலங்கா பேரினவாத அரசின் கபட நடவடிக்கைகளை நன்கு விளங்கியும் நீ மௌனம் சாதிப்பது ஏன்?

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை உடன்நடைபெற அழுத்தம் கொடு!

எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை அங்கீகரி!

இல்லையேல்...!

காலம் காலமாக அழிந்து போய் அழிவின் விளிம்பில் நிற்கும் எம் இனம் தனது எதிர்கால வாழ்விற்கும் நிலையான இருப்புக்கும் தேசியத் தலைவரின் வழிப்படுத்தலில் பொங்கியெழுவதைத் தவிர்க்க முடியாது.

எமது தமிழீழத் தேசியத் தலைவரின் மேலான கவனத்திற்கு...:

இன்றைய கண்டன எழுச்சிப் பேரணி மூலம் மட்டக்களப்பு மாவட்ட வெகுசன ஒன்றியம் தங்களுக்குத் தயவாக விடுக்கும் அவசர வேண்டுகோ:

மீண்டும் போரை எதிரி வலிந்து தொடங்க முனைகின்றான். இனியும் கைகட்டி வாய்பொத்தி பேசா மடந்தைகளாக பொறுத்துக் கொண்டிருந்தது போதும். போரைத் தொடங்க ஆணையிடுங்கள். ஓயாத அலையென புயலாகப் புறப்படும் பொங்கியெழும் மக்கள் படை.

தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்

என்று அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதினம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)