Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்த
#1
<b>ஒரே ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை அழிக்க முடியும்</b>

ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் மீது விமானத் தாக்குதல் நடத்த முடியுமென அண்மையில் புலிகள் இயக்க முன்னணித் தலைவர் பானு விடுத்த அச்சுறுத்தலையிட்டு ஷ்ரீலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப எந்தவொரு தாக்குதலுக்கும் விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை உயரதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் ஷ்ரீலங்கா விமானப்படையினர் ஷ்ரீலங்காவின் வெவ்வேறு பிரதேசங்களிலும் நான்கு இடங்களில் ராடர் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நிலையங்களை அமைத்துள்ளதாகவும் அந்த நிலையங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் ராடர் கருவிகள் தாக்குதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அக்கருவிகள் மூலம் விமானம் ஒன்று தரையிலிருந்து ஆகாயத்தில் உயர எழுந்து செல்லும் முன்னரே கண்காணித்துத் தாக்குதலை நடத்த முடியுமென்றும் மேலும் ஷ்ரீலங்கா விமானப்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி புலிகள் இயக்க தலைவர் பானுவின் அச்சுறுத்தல்பற்றி விமானப் படையைச் சேர்ந்த சிரேஷ்ட விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், குறித்த புலிகள் இயக்கத் தலைவர் பானு "ஸ்வின்" வகையைச் சேர்ந்த இரண்டு சிறிய விமானங்களை வைத்துக் கொண்டு விமானப் படையினரை அச்சுறுத்துவதாகவும், ஷ்ரீலங்கா விமானப்படையிடம் இருக்கும் ஒரு மிக் விமானத்தின் மூலம் ஒரே ஒரு தாக்குதலில் இரணைமடுவிலிருக்கும் புலிகளின் விமானத் தளத்தை முற்றுமுழுதாக அழிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

-திவயின : 12.01.2006-

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...14/Shinhala.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஒரே ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை அழிக்க முடியும்

புலிகளின் கட்டடுப்பாட்டுப் பகுதிக்குள் முதலில் சிறிலங்கா விமானப்படையின் விமானம் செல்ல வோண்டும் அதன் பின் தாக்குதல் நடத்துவதை பற்றி கதைக்கட்டும்

அண்மையில் இலங்கை விமானப்படை உலங்குவானுர்தி இரணைமடு குளத்துக்கு அண்மையாக செல்லும் போது சாம்(ஏவுகணை எதிர்புக்கருவி) எச்சரிக்கை கருவி தானக இயங்கியதாக கூறி விமானப்படை விமானங்களை புலிகளின் கட்டடுப்பாட்டு பகுதியில் பறப்புக்களை மேற்கெள்ள அனுமதி மறுக்கப்பட்டது இது அவர்கள் வாயலே விட்ட அறிக்கை

அப்படி என்றால் மிக்16 வந்து தாக்கிவிட்டடுப் பேகும் மட்டும் விடுதலைப்புலிகள் பார்த்துக் கொண்டிருப்பார்களா

இதுவும் இவர்கள் தான் சென்னார்கள்
யாழ். குடாநாட்டில் ஆர்.பி.பி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகனைகள் உட்பட ஆயுதங்களைப் பயன்படுத்தி பலாலி விமானத் தளத்திற்குச் செல்லும் விமானங்கள் மீது தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக யாழ். குடாநாட்டில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டை விடுதலைப் புலிகள் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிகிறது.

விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே பொருத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் யாழ். நோக்கிப் பயணமாகும் விமானங்கள் மீது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தி விமானங்களைச் சுட்டுவீழ்த்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவ விடும் செய்திகளை வைத்து ஒரு ஜோக் புத்தகம் எழதலாம்
Reply
#3
எருமை மாடு ஏரோப்பிளேன் ஓடின கதைதான். புலிகள் என்ன விமானம் வைத்திருக்கிறார்கள் எண்டதே சரியாத் தெரியாமல் <b>இக்பால்அதாஸ்</b> சொல்லுற கதையை வச்சு இவங்களா கற்பனை வளத்தை மெருகேற்றினம்.

பேசாமல் கதை எழுதி இலங்கையின்ர வருமானத்தைப் பெருக்க விடலாம் போலகிடக்கு,

வானம்பாடி உதுக்கு ஆதாரம் என்ன எண்டு கேட்டுச் சொல்லுங்கோ. :wink:
:::::::::::::: :::::::::::::::
Reply
#4
சரி கெட்டிக்காரர் புழுகு எட்டு நாளைக்கு என்பார்கள் எல்லாவற்றையும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)