Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நளினிமுருகன் மகள் சிறையில் பெற்றோரை சந்திக்கிறார்
#1
நளினிமுருகன் மகள் தமிழகம் வந்தார்: சிறையில் பெற்றோரை சந்திக்கிறார்
ஜனவரி 10, 2006

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார்.



இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது.

முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. முருகன் தாக்கல் செய்துள்ள கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

ஆரித்ராவுக்கு 6 வயது ஆகும் வரை தனது தாயாருடன் இருந்தார். அதன் பின்னர் முருகனின் தாயாருடன் ஆரித்ரா இலங்கை சென்று விட்டார். இந் நிலையில் தனது பெற்றோரைக் காண ஆரித்ரா விரும்பினார்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தனர் முருகன் குடும்பத்தினர்.

ஆனால், விசா கொடுப்பதில் இந்திய தூதரகம் தாமதம் செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். முருகன் சிறையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதையடுத்து உடனடியாக ஆரித்ராவின் விசா விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து விசா வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆரித்ராவுக்கு விசா கிடைத்தது. இதையடுத்து ஆரித்ரா தனது உறவினர்களுடன் சென்னை வந்துள்ளார்.

தற்போது வேலூர் சென்றுள்ள அவர் இன்று தனது பெற்றோரை சந்திக்க சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். இன்றே அனுமதி கிடைத்தால் 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தாய், தந்தையை சந்திப்பார் ஆரித்ரா.

6 வயதில் இலங்கைக்குப் போன ஆரித்ராவுக்கு இப்போது 14 வயதாகிறது. அவர் தங்கியிருக்கும் இடத்தை போலீஸார் படு ரகசியமாக வைத்துள்ளனர்.
http://thatstamil.indiainfo.com/news/2006/...1/10/lanka.html
.
.
Reply
#2
பல ஆண்டுகளுக்குப் பின் பெற்றோரை காணும் குழந்தையின் மன நிலை
குழந்தையைக் காணும் பெற்றோரின் மன நிலை
அதுவும் தமது பெற்றோரின் நிலை..........
இப்படியான அவலங்கள் மனதை நோகவே வைக்கின்றன.

இதுபோல் நிஜங்கள் யாருக்கும் தெரியாமல்
எத்தனையோ?

தகவலுக்கு நன்றி இனிய ராஜாதிராஜா
Reply
#3
தாய் தந்தை இருவருமே சிறையில் அதுதவிர அவர்களை சந்திப்பதும் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான். உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய குழந்தை தான் ஆரித்ரா.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
நளினி, முருகன் இருவரது தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை விடுத்து இருந்தார்.... அதில் நளினியின் தண்டனை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது... குடியரசுத் தலைவர் முருகன் மீது கருணை காட்டுவார் என்றே நம்புகிறேன்....

ஏற்கனவே இது குறித்த வேண்டுகோளை நான் இந்திய குடியரசுத் தலைவரின் மின் அஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்....

கள உறவுகளும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...
,
......
Reply
#5
எந்த குற்றமாக இருப்பினும் மரண தண்டனை அதற்கு சரியான நீதி இல்லல். சக மனிதனின் உயிரை அழிக்க யார்க்கும் உரிமை இல்லை என்பது எனது கருத்து.
.
.
Reply
#6
<i>நடந்தேரும் அவலங்களைக் கன்டு துயர்மிகுகிறது...</i>

<i><b>பெற்றோரைச் சந்திப்பது ஒரு ஆசுவாசமாவாவது இருக்கக்கூடும்....</b></i>

நல்லது நடக்கும் என்று நம்புவோம்...
"
"
Reply
#7
வேலுõர் சிறையில் இருந்து பரோலில் செல்ல நளினி மனு வேலுõர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தன் மகளைக் காண ஒரு மாதம் பரோலில் செல்ல சிறை அதிகாரிகளிடம் மனு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டணையாக குறைக்கப்பட்டது. நளினி வேலுõர் பெண்கள் சிறையிலும், முருகன் உட்பட மூவர் ஆண்கள் சிறையிலும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நளினியின் தண்டனைக் காலம் 14 ஆண்டுகள் முடிந்தது. இவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்து வேலுõர் பெண்கள் சிறை அதிகாரிகள் சென்னையில் உள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அங்கிருந்து இதுவரை பதில் வரவில்லை. இதனால் நளினி கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் வசித்து வந்த நளினியின் மகள் அரித்திரா நேற்று முன் தினம் வேலுõர் சிறையில் தனது பெற்றோரை சந்தித்து விட்டு சென்றார்.

இதையடுத்து தன் மகளைப் பார்க்கவும், அவருடன் சில நாள் தங்கி இருக்கவும், தன்னை ஒரு மாதம் பரோலில் விட வேண்டும் என்று நளினி வேலுõர் பெண்கள் சிறை அதிகாரிகளிடம் மனு செய்துள்ளார். இந்த மனு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மனுவின் மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளதாக சிறை அதிகாரிகள் கூறினர்.

மூன்று மாத சுற்றுலா "விஸா'வில் தமிழகம் வந்துள்ள அரித்திரா அது வரையில் சென்னையில் தங்கியிருப்பதாக தெரிகிறது.

தமிழகம் வந்துள்ள அரித்திராவுக்கு கடுமையான நிபந்தனைகளுக்கு இடையில் "விஸா' வழங்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளிக்க கூடாது. தமிழகத்தில் தங்கும் இடம் குறித்த தகவல்களை வெளியில் விடக்கூõடது என்னும், அரித்திரா செல்லும் இடங்கள் குறித்து உளவுத்து துறை போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பன உட்பட பல நிபந்தனைகளின் பேரில் அரித்திராவுக்கு "விஸா' வழங்கப்பட்டுள்ளது.

Dinamalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<b>மகளுடன் மனம்விட்டு பேசத்துடிக்கும் நளினி!

அரித்திராவுக்கு சீ.பி.ஐ. விடுத்துள்ள எச்சரிக்கை!

* ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி, முருகன் தமது மகளை நீண்ட நாட்களின் பின் சந்தித்தனர்</b>

-எஸ்.ஜே.எம்.-

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள்தண்டனைக் கைதியான நளினி, மரணதண்டனைக் கைதியான முருகன் தம்பதியின் மகள் அரித்திரா, போராட்டங்களின் பின் தனது பெற்றோரை கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் சிறையில் சந்தித்தார்.

14 வயதுடைய அரித்திரா தனது பெற்றோரை கடைசியாக 2002 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தார். நீண்ட நாட்களின் பின் பெற்றோரை பார்க்க விரும்பிய அரித்திரா, தமிழ் நாடு செல்ல இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்தார்.

`விசா' அனுமதியை தூதரகம் மறுத்தது, இந்திய வெளிவிவகார அமைச்சுடன் போராடிய அரித்திரா, இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்திக்கும் தனது பெற்றோரை பார்க்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தன் தாய் தந்தையரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி இந்திய அரசுடன் போராடிய அரித்திரா அதில் வெற்றி கண்டார். தமிழ்நாடு சென்ற அரித்திரா கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தனது பெற்றோரை வேலூர் சிறையில் பார்த்தார்.

அரித்திரா பெற்றோரை சந்திக்க வேலூர் சிறைக்கு வருகிறார் என்பதை அறிந்து பெருமளவு செய்தியாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தனர். செய்தியாளர்கள் அரித்திராவை படம் எடுக்க முடியாதவாறு அவரின் முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்டு அழைத்து வரப்பட்டார். உயரமான வெள்ளை நிறமுடையவர். அவருடன் நளினியின் தாய் பத்மா, முருகனின் தாய் நேசமணி, நளினியின் சகோதரி ஆகியோரும் வந்திருந்தனர்.

முதலில் வேலூர் சிறையிலுள்ள விசேட பெண்கள் பிரிவுக்கு சென்று தனது தாயைப் பார்த்தார் அரித்திரா. தன் மகளைக் கண்ட நளினி மிகுந்த மகிழ்ச்சியில் உணர்ச்சி மேலிட்டுக் காணப்பட்டதாகவும் கண் கலங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தனது தாயுடன் பேசிவிட்டு அங்கிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள ஆண்கள் சிறைக்குச் சென்று தந்தையையும் பார்த்தார்.

மரண தண்டனை, விதிக்கப்பட்டுள்ள முருகன் தன் மகளைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால், சில அடி இடைவெளிகளிலேயே தந்தையும் மகளும் சந்தித்தனர் என நளினி, முருகனின் சட்டத்தரணி எஸ். துரைசாமி தெரிவித்தார்.

தனது பெற்றோரை சந்தித்த வேளையில் அரித்திரா அடிக்கடி மனமுடைந்து காணப்பட்டதாகவும் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை, மற்றும் தனது கல்வி குறித்து விளக்கியதாகவும் சிறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் விசா அனுமதியை ரத்துச் செய்து, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுவோமென புலனாய்வுத் துறை அதிகாரிகள் அரித்திராவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

3 மாத கால விசா அனுமதியில் சென்றுள்ள அரித்திரா, தங்கியிருக்கும் இடத்தை இரகசியமாகப் பேண வேண்டும். தமது ஒவ்வொரு அசைவுகளையும் இந்திய மத்திய புலனாய்வுத் துறையான சீ.பி.ஐ.க்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறையை விட்டு வெளியே வந்த அரித்திராவை சூழ்ந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். பெருந்தொகையான கேள்விகள் கேட்கப்பட்ட போதும் அவற்றுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். உடனடியாக சட்டத்தரணியின் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

ஆனால், முருகனின் தாயார் நேசமணி கருத்துத் தெரிவிக்கையில், `இலங்கையில் தினமும் கொலைகள் நடைபெறுகின்றன' என்றார்.

தனது மகளுடன் வெளியில் சென்று உல்லாசமாக பொழுதைக் கழிக்க ஒரு மாத காலத்துக்கு அனுமதி தருமாறு வேலூர் சிறை தலைமை அதிகாரி இராமச்சந்திரனிடம் நளினி கோரியுள்ளார்.

முருகன் தனது மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக நளினிக்கும் மரண தண்டனையே விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரையும் தூக்கிலிட்டால் அவர்களது பிள்ளை அநாதையாகிவிடுமென காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். இதையடுத்தே, நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

1991 மேயில் தமிழ் நாட்டில் வைத்து ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். முருகன் இக் கொலைத் திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் விடுதலைப் புலி அங்கத்தவரெனவும் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். நளினியை முருகன் காதலித்திருந்தார். ராஜீவின் கொலைக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அவசரமாக திருமணம் செய்து கொண்டனர். இக் கொலைச் சதித் திட்டத்தை நளினியும் தெரிந்து வைத்திருந்தார் எனக்கூறி நளினி கைது செய்யப்பட்டார். இருவரும் கைது செய்யப்படும்போது நளினி கர்ப்பிணியாகவே இருந்தார்.

சிறையில் தனது பிள்ளையை பெற்றெடுத்த நளினி 6 வருடங்களாக மகள் அரித்திராவை தன்னுடனேயே சிறையில் வளர்த்து வந்தார். பின்னர் அரித்திரா தனது பாட்டியுடன் யாழ்ப்பாணம் வந்த தனது கல்வியைத் தொடங்கினார். தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் பாடசாலையில் சிறப்பாக கல்வி கற்று வருகின்றார்.

- தினக்குரல்
Reply
#9
<b>மிகுந்த போராட்டத்திற்குப் பின் தனது தாய் தந்தையை மகள் சந்தித்து இருக்கின்றார். அது போல் மனிதாபிமானமாக அவரின் ஏனைய ஆசைகளும் நிறைவேற்றப்படுமென நம்புவோம்.</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)