Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகள் படத்தில் நடித்த
#1
விடுதலைப் புலிகள் அமைப்பு தயாரித்த அம்மா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகையும், அவரது தாயாரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ¬முறிந்துள்ள நிலையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் தரப்பில் தான் அதிக அளவில் இதுவரை சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு யாழ்ப்பாணம் பகுதியில் மணிபாய் நகர் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், அவரது இரு மகள்களும் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான நிதர்சனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா என்ற படத்தில் நடித்தவர் ஆவார்.

இதே போல தமிழ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். வடமராச்சியில், நெல்லியாடி என்ற இடத்தில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்கரைப்பட்டு என்ற இடத்தில் தமிழர்களுக்கும், ¬முஸ்லீம்களுக்கும் இடையே வெடித்த திடீர் மோதலில் 2 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)