Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் தொடர்கிறது வன்முறை
#1
<img src='http://dinamalar.com/2006jan17/photos/fpn-04b.jpg' border='0' alt='user posted image'>

கொழும்பு: இலங்கையில் மர்ம ஆசாமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் பலியாயினர். தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறையால் இலங்கையில் மீண்டும் போர் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெயவர்த்தனா இதுபற்றி கூறியதாவது:

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள மணிப்பாய் என்ற இடத்தில் நேற்று முன்தினம் வண்டியில் வந்த மர்ம ஆசாமிகள் ஒரு வீட்டில் புகுந்து சரமாரியாக சுட்டனர். இதில், அந்த வீட்டில் இருந்த பெண்ணும் அவருடைய இரண்டு மகள்களும் பலியாயினர். எதற்காக இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் "வீர தியாகிகளின்' குடும்பத்தை சேர்ந்தவர்கள். சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் திரைப்பட பிரிவினர் தயாரித்த "அம்மா'என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்று விடுதலைப் புலிகளின் இணையதளம் தெரிவித்துள்ளது.
<img src='http://dinamalar.com/2006jan17/photos/fpn-04c.jpg' border='0' alt='user posted image'>

வடமராச்சி பகுதியில் உள்ள நெல்லியாடி என்ற இடத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் உறுப்பினர் ஒருவரை மர்ம ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர்.

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பட்டு என்ற நகரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இரண்டு கண்ணி வெடிகளை கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.இவ்வாறு ஜெயவர்த்தனா கூறினார்.

இதுமட்டுமின்றி, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்ட நார்வே துõதுக் குழுவினரின் வாகனங்கள் மீது கடந்த 12ம் தேதி வெடிகுண்டு வீசப்பட்டது. நல்ல வேளை வாகனங்களில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தில் வாகனங்கள் சேதமடைந்தன.

"யாரையும் கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வெடிகுண்டு வைக்கப்படவில்லை. யாரோ எங்களை பயமுறுத்துவதற்காக வெடிகுண்டை வைத்தார்களா? என்பதை மறுப்பதற்கும் இல்லை. எப்படி இருந்தாலும் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகப் போவதில்லை' என இலங்கை அமைதி குழுவின் செய்தி தொடர்பாளர் ஹெலன் ஒலப்டோட்டிர் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உட்பட நுõற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

அடுத்த வாரம் அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் மற்றும் நார்வே நாட்டின் அமைதி துõதர் எரிக் சோல்ஹிம் ஆகியோர் இலங்கை வருகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதால் மீண்டும் போர் உருவாகி விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் போர் ஏற்பட்டால் அமெரிக்க உதவியுடன் பலமான இலங்கை ராணுவத்தை சந்திக்க நேரிடும் என்று விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கத் துõதர் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : dinamalar.com
http://dinamalar.com/2006jan17/fpnews4.asp
.
.
Reply
#2
அந்தப்படத்தின் பெயர் "அம்மா நலமா?" எந்த விடுதலைப்புலிகளின் இணையத்தில் படத்தின் பெயரை தப்பாக "அம்மா" என்று பேட்டிருக்கு? தினமலர் வேணும் என்று விடும் தவறு போல் தான் இருக்கு.

"யாரையும் கொல்லும் நோக்கோடு வைக்கவில்லை பயமுறுத்தும் நோக்கோடு தான் வைத்தார்கள் என்பது மறுப்பதற்கில்லை" என்ற தொனியில் தினமலருக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக செவ்வியில் கூறப்பட்டிருக்கா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)