01-13-2006, 11:21 AM
<b>பயணிகளை நிர்வாணமாக படம்பிடித்து காட்டும் கருவி
லண்டன் ரெயில் நிலையங்களில் பொருத்தப்படுகிறது </b>
லண்டன், ஜன.13-
லண்டன் நகரில் ரெயில் நிலையங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும் கருவி பொருத்தப்பட இருக்கிறது.
வெடிகுண்டு தாக்குதல்
லண்டன் நகர் ரெயில் நிலையங்களில், அல்கொய்தாவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தி, 56 பயணிகளை பலி
கொண்டனர்.இதைத் தொடர்ந்து, குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வரும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு வசதியாக உயர் தொழில் நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும்.
சோதனை முறையில்
இந்த ஸ்கேனர் கருவிகள் லண்டனில் உள்ள பெரிய ரெயில் நிலையத்தில் 4 வாரங்களுக்கு பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்படும்.
மேற்கு லண்டனில் உள்ள பிட்டிங்டன் ரெயில் நிலையத்தில் இந்த ஸ்கேனர் கருவி பொருத்தப்படும். ரெயிலில் ஏறுவதற்கு முன்பு பயணிகள் இந்த கருவி வழியாக செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
80 வினாடிகளில் இந்த ஸ்கேனர் முழு உடையுடன் உள்ள பயணிகளை நிர்வாணமாக காட்டிவிடும். இதை பக்கத்து அறையில் உள்ள ஆபரேட்டர் கம்ப்ïட்டர் திரையில், பயணிகள் நிர்வாணமாக இருப்பதைப் பார்க்கலாம்.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>