Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெறி நாய்களிடம் விலகி இருப்போம் அல்லது அடித்து துரத்துவோம்
#1
படையினர் வன்முறைகளைக்கு முடிவுகட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வோம்: கஜேந்திரன்

[வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 01:42 ஈழம்] [ம.சேரமான்]
யாழ் குடா நாட்டில் சிறிலங்காப்படையின் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டி எம் மண்ணில் இருந்து வெளியேற்றும் வரை இளைஞர் யுவதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள படைகளினால் எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள், அப்பாவி மக்கள் மீதும், மாணர்கள் மீதும் கடற் தொழிலாளர் மீதும் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகள், சித்திரவதைகள்,கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல போராட்டங்களை நாடாளுமன்றத்திற்குள்ளேயும் நடத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளையும் முடக்கியிருக்கின்றோம்.

சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை புரிந்த படையினர் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டதாக இல்லை.

தமிழ்மக்கள் மீது அரச பயங்கரவாதம் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இதனை ஒருபோதும் சிறிலங்கா அரசு நிறுத்தப்போவதில்லை இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும்.

ஆகவே எதிரிக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அவ்வாறு பதிலடி கொடுப்பதன் மூலம் தான் எங்கள் நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்ற முடியும்.

இதற்காக இளையர்,யுவதிகள் முன்வர வேண்டும் என்றார் கஜேந்திரன்.


கஜேந்திரன்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
விலகி இருந்து வெறிநாய்க்கு பயந்து கொண்டு தினமும் திரிவதோ? இரண்டவது கட்டம் தான் சரி!!
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)