Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க
#1
<b>நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க </b>

சிறையில் உள்ள எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாது தொடர்ச்சியாக 3 மாதங்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் அரசியலமைப்புச் சட்டத்தின் 66 (ஈ) பிரிவின் கீழ் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றச் செயலாளரின் கடிதம் நேரடியாகவே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எஸ்.பி. திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளரை நாடாளுமன்றச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதமும் நாடாளுமன்ற செயலாளர் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் சம்பந்தமாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்த போதிலும் அத்தகைய கடிதம் கிடைக்கவில்லை என்று தேர்தல் செயலகம் தெரிவித்திருந்தது.

அதனால் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்புவதற்கு நேற்று முன்தினம் நடைபெற்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி இன்று நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் மாநாட்டில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.

முன் அனுமதியின்றி 3 மாதங்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாத எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகி உள்ளது என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடென்றும் அந்த நிலைப்பாட்டிலிருந்தே அரசாங்கம் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் ஆராயப்படும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#2
பாவம் அந்த மனுசன்.

நம்பின எல்லோரும் அவரைக் கைவிட்டுவிட்டார்கள்.
[size=14] ' '
Reply
#3
எஸ் பி திசாநாயக்காவிற்கு மன்னிப்பு வழங்கி அவரை சிறையிலிருந்து விடுதலை செய்ய ராஜபக்ஷ தீர்மானத்துள்ளதாகவும் ஆனால் அதனை ஏற்க வேண்டாம் என ரணில் கேட்டுகொண்டுள்ளதாகவும் செய்திகளில் படித்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
<b>எஸ்.பி. திசநாயக்க நாடாளுமன்ற ஆசனத்துக்கு ரேணுகா ஹேரத் நியமனம் </b>

ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு ரேணுகா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயகக் வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் எஸ்.பி.திசநாயக்க இருப்பதால் நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றக் கூட்டங்களில் 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து பங்கேற்காததால் எஸ்.பி. திசநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

இதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா ஹேரத் அந்த ஆசனத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு வலபனெ தொகுதியில் போட்டியிட்டு ரேணுகா ஹேரத் வெற்றி பெற்றார். 1989 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் ரேணுகா ஹேரத் பணியாற்றினார்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#5
<b>எஸ்.பி.திசாநாயக்க அடுத்த மாதம் விடுதலையாகிறார்! </b>


நீதிமன்ற அவமதி;ப்புத் தொடர்பில் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அடுத்த மாதம் 27ம் நாள் விடுதலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்நடத்தையின் அடிப்படையில் இவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு அடுத்த மாதம் 27ம் நாள் விடுதலை செய்யப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அவரை விடுவிக்குமாறு கோரி கடந்த 2ம் நாள் முதல் ஐதேகவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சத்தியகிரகப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்: சங்கதி

இவர் நீதிமன்ற அவமதிப்பு காரணமாக 2வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது
[size=14] ' '
Reply
#6
<b>எஸ்.பி.திசநாயக்க விடுதலை எப்போது?</b>

சிறிலங்கா நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவருமான எஸ்.பி.திசநாயக்க விசேட மன்னிப்பின் கீழ் இம்மாதம் 15 ஆம் நாள் அல்லது 17 ஆம் நாள் விடுதலையாகக் கூடும் என்று சிறிலங்கா அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் காப்பாற்றக் கோரி எஸ்.பி.திசநாயக்க உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 13 ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது.

எஸ்.பி.திசநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படும் நிலையில் இந்த வழக்கு திரும்பப் பெறக் கூடும் என்று தெரியவருகிறது.

அந்த வழக்கு திரும்பபெறப்பட்டால் எஸ்.பி.யை விடுதலை செய்வதற்கு இருக்கும் சட்டச் சிக்கல்கள் தீரும் என்பது அரச தலைவர் செயலகத்தின் கருத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.பி.திசநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைப் படி மார்ச் மாதம் 27 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#7
<b>மார்ச் 27 இல் எஸ்.பி.திசநாயக்க விடுதலை </b>
[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 05:45 ஈழம்] [கொழும்பு நிருபர்]
ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி.திசநாயக்க எதிர்வரும் மார்ச் 27 ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.


சிறை நன்னடத்தை காரணமாக அவரது தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்கள் 14 நாட்களுக்காக அவர் விடுதலை செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

இதனிடையே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கத்தை ஆட்சேபித்து எஸ்.பி.திசநாயக்க தாக்கல் செய்திருந்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை தலைமை நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நிராகரித்தது.

பதில் பிரதம நீதிபதி நிஹால் ஜயசிங்க தலைமையில் என்.கே. உடலகம,என்.ஈ. திசநாயக்க ஆகியோரை கொண்ட குழு இம்மனுவை நிராகரித்தது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி என்ற காரணத்துக்காக தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து விட முடியாது என்று தெரிவித்து இம்மனுவை திசநாயக்க தாக்கல் செய்திருந்தார்.

எஸ்.பி.திசநாயக்க, பதவி விவகாரம் தொடர்பில் ஏலவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தாராயினும் தலைமை நீதிபதி தீர்ப்பு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அம்மனுவை விசாரிப்பதற்கான சட்டவாதிக்கம் கீழ்நிலை நீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் வழங்க மறுத்திருந்தது.

இந்நிலையில் தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நடைபெற்று நேற்று முடிவடைந்தன.

மனுதாரரான திசநாயக்கவின் சார்பில் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுடன் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா, கோலித தர்மவர்த்தன ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

அரசியலமைப்பின் 105 ஆவது அத்தியாயம் உயர் நீதிமன்றத்தின் சட்ட நியாயாதிக்கம் பற்றியது. ஆனால் குற்றவியல் குற்றம் பற்றிய வரைவிலக்கணத்தை அது கூறவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு தண்டனை வழங்க முடியும் என்று தான் அதில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு அரசியலமைப்பின் கீழும் சரி தண்டனைச் சட்டக் கோவையின் படியாயினும் சரி குற்றவியல் குற்றமல்ல என்று அரச தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பதாக நீதிபதிகள் அறிவித்து திசநாயக்கவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)