Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இயல்புச்சூழல் பாதிப்பு
#1
[size=18]<b>கிழக்கு பல்கலைக்கழகத்தின் 15 பேராசிரியர்கள் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினர்
[திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 09:20 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

கருணா குழுவால் படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் தம்பையாவின் மறைவை அடுத்து தொடர்ச்சியாக விடுக்கபட்ட கொலை அச்சுறுத்தல்களால் அச்சமடைந்த அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 15 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் தனது கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பேராசியரியர் ஒருவருக்கு அடையாளம் தெரியாத குழு ஒன்று விடுத்து வரும் தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தலை அடுத்து அவரும் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா, தனது குழுவினரை கொண்டு மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண மக்களை துரத்தி அடித்ததை அடுத்து கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் இடம்பெயர்ந்து சென்றுவிட்டு மீள வந்து பல்கலைக்கழகத்தில் தனது கற்பித்தல் செயற்பாட்டை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் வைத்து இவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதனை அடுத்த தமக்கும் இதே கதி நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்து சுமார் 15 பேராசிரியர்கள் தமது குடும்பத்துடன் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்பொது அந்த பல்கலைக்கழகத்தில் "விடுதலைப் புலிகளால் ஏற்பாடு செய்யப்படும் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுக்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ சமூகமளித்தால் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு நடந்த அதே கதிதான் நடக்கும்" என்று அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு தொலைபேசிகள் மூலமும் அச்சுறுத்தல் விடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கிழக்கு கல்விச் சமூகம் பீதியில் உறைந்து போயுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

<i>[b]தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)