Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் மாணவரைக் காணவில்லை
#1
பெருந்தொகையில் தொடர்கிறது இடப்பெயர்வு!

யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்குச் சென்ற இராமநாதன் ரதீஸ்குமார் (வயது 20) என்ற மாணவரைக் காணவில்லை என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அந்த மாணவர் கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற பின்பு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கும் ரதீஸ்குமாரின் பெற்றோர் கொண்டு சென்றனர். முகமாலை சோதனைச் சாவடியூடாக அந்த மாணவர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்லவில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பருத்தித்துறை தும்பளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 10 மணிவரை சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தும்பளை புனித மரியாள் கத்தோலிக்க தேவாலயப் பகுதியில் 500 இற்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு வீடாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்பகுதி மக்கள் எவரையும் வீட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கவில்லை. அப்பிரதேசத்தின் ஒட்டுமொத்த போக்குவரவுகளை சிறிலங்கா இராணுவத்தினர் தடை செய்து இந்தத் தேடுதலை மேற்கொண்டனர்.

ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை உருவாக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரின் இந்தத் தேடுதல் நடவடிக்கையால் ஜெனீவா பேச்சுக்கள் பாதிக்கக் கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று பொங்கியெழும் மக்கள் படை அறிவித்திருக்கும் நிலையில் இத்தகைய காணாமல் போகும் நிகழ்வுகளும் இராணுவ வன்முறைகளும் நீடித்து வருவது தொடர்பில் யாழ். பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.

இதனிடையே வடமராட்சி கிழக்கில் உள்ள நடு குடத்தனை பகுதியைச் செய்த 150 குடும்பத்தினரில் 140 குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேபோல் யாழ். ஊர்காவற்றுறை பகுதியின் தோப்புக்காடு கிராமத்தின் அனைத்து மக்களும் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

[size=7]puthinam
Reply
#2
மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் ஊழியர் கடத்தல்.
! ! !!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)