Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணைத் தற்கொலை..!
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41230000/jpg/_41230614_anne_turner203.jpg' border='0' alt='user posted image'>

Dr Turner,(66) என்பவர் supranuclear palsy எனும் மூளைக் கலங்கள் சிதைவடைவதால் தோன்றும் இயலாமை நோயினால் பாதிகப்பட்டிருந்தார். மிகச் சமீபத்தில் அதன் அவஸ்தையில் இருந்து விடுபடுவதற்காக சுவிஸ்லாந்தில் பிறிதொரு மருத்துவக் குழுவினரின் பரித்துரையின் அடிப்படையில் மாத்திரைகள் மூலம் தற்கொலை செய்ய அனுமதிகப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். இவ்வகையில் தற்கொலைகள் தூண்டப்படுவது மனித உரிமைகள் பற்றி கருசணை கொண்டோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..!

குறித்த supranuclear palsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரில் மூளையில் சில வகைக் கலங்கள் தொடர்ந்து அழிவுறுவதால் கண்ணசைவு..கை கால் அசைவுகள்.. பேச்சு. விழுங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்கு அவசியமான இயக்கங்கள் சீர்குலைந்து விடுகின்றன. இறுதியில் அவர் மரணப்படுக்கைக்கு செல்ல வேண்டியதாகிறது. இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிகம் தாக்கும் எனினும் இள வயதிலும் இதன் தாக்கம் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்..!

http://kuruvikal.blogspot.com/ மற்றும் bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ம்ம்...ரொம்ப பரிதாபமாக இருக்கின்றது.

அப்படியான நோய்கள் ஐரோப்பாவில் அதுவும் நான் வசிக்கும் நாட்டிலும் இருக்கின்றது. நேரில் கூட அவர்களோடு வேலை செய்திருக்கின்றேன்.. அவர்கள் தானாக இயல்பாக நடக்கவே கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு left.. right சொல்லித்தான் நடக்க வைப்பார்கள்..நடக்கும் போது யாராவது குறுக்கால் சென்றாலோ..கதை கேட்டாலோ..அப்படியே நின்று விடுவார்கள்..மீண்டும் நடக்க ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கணும். சாப்பிடுவது கூட..கஷ்டம் தான். ரொம்ப பாவமாக இருக்கும்.

ஆனால் இப்படி கருணை தற்கொலை கேட்டு செய்து கொண்டதாக நான் அறியவில்லை. ஒரு பக்கதிலிருந் து பார்த்தால்..(அவர்களை நேரில் கண்டால்)அது நியாயம் போலவே தோன்றும். ஆனால் மறு பக்கம்..சட்டம் வேறு சொல்கிறதே. :roll:


Quote:இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிகம் தாக்கும் எனினும் இள வயதிலும் இதன் தாக்கம் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்..!

ம்ம் கூட வயது வந்தோர்க்கு தான் வரும் நோய். ஆனால் சிறு வயதிலேயே..சிறுவர்களுக்கு/இடை வயதுள்ளோருக்கு கூட வரும் நோய் epilepsy என்பார்கள். அந்த நோய் தொடர்ந்து மருந்துகள் பாவிக்காமல் தொடருமானால்..அதன் அற்றாக்குகளினால் ஒரு காலகட்டத்தின் பின் மூளை செல்கள் சேதமடைந்து..இந்த நோய் உருவாகும் சந்தர்ப்பமும் கூட இருக்குமாம். சிறுவர்களுக்கு இது கூட வருமென்றால்..அந்த நோயின் தாக்கத்தினால் வருமாம். ஆனால் இப்போது தான் மருந்துகள் நிறையவே இருகின்றன. அதையும் தாண்டி..சில நாட்களுக்கு முன்...பள்ளியில் நல்ல புள்ளிகள் பெற்றதால் தாய் ஒரு சிறுவனை (அவர் குழந்தையை) game விளையாட அனுமதித்தாராம். சிறுவன் 12 மணி நேரம் தொடர்ந்து விளையாடியதால்..கேமிலிருந்து வந்த நிற ஒளியினால்..அவருக்கு எபிலெப்சி அற்றாக் வந்து டாக்டர்களால் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக இறந்து போனாராம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#3
நன்றி ப்ரியசகி..! இவ்வகை நோய்கள் பற்றியும், நோயாளிகளுடன் நீங்கள் பெற்ற நேரடி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதுக்கு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
நன்றிகள் குருவிகள் உங்கள் தகவல்களுக்கு.
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ப்ரியசகி. களத்தில் இதைப்பற்றி பெரியப்பு ஒரு கட்டுரையை இணைத்து இருந்தார். அதை இங்கு இணைக்கின்றேன்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7537

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)