Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு?
#1
<b>ஆதிமனிதன் இறந்தது எவ்வாறு?

பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன் றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்கு மனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர்.

டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924ல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோ தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூகித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக் கொல்லவில்லை. ஒரு பெரிய பறவை தான் வேட்டையாடிக் கொன்றது என்று பத்தாண்டுகளுக்கு முன்பு லீ பெர்ஜர், தமது சக ஆராய்ச்சியாளர் ரோன் கிளர்க்குடன் சேர்ந்து நிரூபித்தார். ஆதிமனிதனின் புதைபடிவுகள் கிடைத்த இடத்தில் இருந்த, சிறிய குரங்குகளின் புதைபடிவுகளில் இருந்து அவை, பறவைகளால் தான் கொல்லப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்ததில், கண் துளைகளுக்குப் பின்னால், ஒரே மாதிரியான துளைகளும், வெட்டுக்களும் தெரிந்தன. இதைப்படித்த பெர்ஜர், டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண் துளைகளுக்குப் பின்னால் வெட்டுக்காயம் ஏற்பட்ட சேதம் தெரிந்தது. ஆகவே, ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது உண்மை என்கிறார்கள்.

தினமலரிலிருந்து</b>
Reply
#2
Quote:மனிதன் பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப் பட்டான்

<b>எச்சரிக்கை</b>
கள உறவுகளே.......பறவையினங்களிடம் அவதானமாக இருங்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குருவியும் பறவை இனம் தானே? :wink:
[size=14] ' '
Reply
#4
குருவி வேட்டையாடாது மனிதனை..மனிதன் தான் அதை வேட்டையாடுவான்..! ஆனால் கழுகுகள் வேட்டையாடி இருக்கலாம் ஒரு காலத்தில்..! ஏன் இப்பவும் மனிதக் கழுகுகள் மனிதனையே வேட்டை ஆடுகின்றனவே..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
தற்காலத்திலேயே பறவைகள் மனிதனை வேட்டையாடுவது நடக்கும் போது இது என்ன புதிய கண்டுபிடிப்பு :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)