Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!
#1
கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!

"செல்போன்களில் செய்திகளை (எஸ்.எம். எஸ்.,) அளவுக்கு மீறி அனுப்பினால், அது உடல் நலனைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவிர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ்) மூலம் செய்திகளை அனுப்புவர்.

இளைஞர்களிடம்எஸ். எம்.எஸ்., அனுப்பும் பழக்கம் அதிகம் உண்டு. பரிமாறிக் கொள்ள செய்தியே இல்லாவிட்டாலும் கூட, பழமொழிகள், கடி ஜோக்குகளை, வாழ்த்துக்களை அனுப்பி இளைஞர்கள் சந்தோஷம் அடைவது வழக்கம்.

அளவுக்கு அதிகமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பினால் அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக கை விரல்களைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

செல்போனில் உள்ள எழுத்துக்களை தொடர்ந்து அழுத்தி கொண்டே இருந்தால், தசை நார்களில் வலி ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர். இத்தாலியில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் அதிக அளவில் இருக்கிறது.

37 சதவீத சிறுவர்கள் செல்போன் பித்துப்பிடித்து, எப்போதும் செல்போனும் காதுமாக அலைகின்றனர்.

வடக்கு இத்தாலியில் உள்ள சவோனா நகரை சேர்ந்த 13 வயது சிறுமி நாள்தோறும் குறைந்தது 100 முறை எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள்.

இதனால் அவள் கைவிரல்களில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவள் ஒரு முடநீக்கு இயல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். மருந்து கொடுத்ததோடு கை விரல்களுக்கு ஓய்வு கொடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதைத் தொடர்ந்துதான் இத்தாலி நாட்டு டாக்டர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளனர்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)