Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கற்பை காத்தாள்; கையை இழந்தாள்:
#1
கற்பை காத்தாள்; கையை இழந்தாள்: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
லக்னோ: வயலில் வேலை செய்து கொண்டிருந்த தலித் பெண், தன்னை கற்பழிக்க முயன்ற நான்கு பேரிடம் போராடி கற்பை காத்துக்கொண்டாள். ஆனால், அதற்கு விலையாக தன் வலது கையை இழந்தாள். வெட்டிய வலது கையையும் எடுத்துக் கொண்டு கும்பல் ஓடிவிட்டது.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 250 கிலோமீட்டர் துõரத்தில் உள்ள ஆரியா மாவட்டம். அங்குள்ள அசல்டா என்ற கிராமத்தில் பெரும்பாலோர் தலித் இனத்தவர். விவசாய கூலியாக வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தலித் மக்களுக்கு, இங்கெல்லாம் அதிக கஷ்டங்களை தருவர் மேல்ஜாதியினர். அதனால் தான் மாயாவதி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்ததும் தலித் ஆதரவு பெருகியது. ஆனாலும், தலித்களுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்ற குறையும் உண்டு.

இதுபோன்ற கிராமங்களில் தலித் பெண்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் அதிகம். கற்பழிப்புகள், கொலை போன்றவையும் நடக்கத்தான் செய்கின்றன. அதனாலேயே தலித் மக்கள் வெறுத்துப்போய்விட்டனர். நக்சலைட்களாகவும் சிலர் மாற, மேல் ஜாதியினரே காரணம்.

அசல்டா கிராமத்தில் தொடர்ந்து தலித் பெண்களுக்கு "செக்ஸ் தொல்லைகள்' அதிகரித்து வந்தன. எதுவும் பேச முடியாத நிலையில் தத்தளித்து வந்தாலும், பெண்கள் எதிர்க்கத் துவங்கினர். கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவம் கிராமத்தை மட்டுமில்லாமல், மாவட்டம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த 16 வயது பெண் அஞ்சு. இவர் விவசாயக்கூலி வேலைக்கு செல்வதுண்டு. நான்கு பேர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்த வண்ணம் இருந்தனர். பொறுத்து வந்தார் அவர். இந்த நிலையில் அந்த நான்கு பேரும், கடந்த ஞாயிறன்று, அஞ்சுவை வயலில் இருந்து துõக்கிச்சென்றனர்.

எல்லார் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பற்றி மற்ற விவசாயக் கூலிகள் வாயை திறக்கவில்லை. அஞ்சுவை பம்ப்செட் அறையில் நான்கு பேரும் கற்பழிக்க முயன்றனர். அப்போது தன் மானத்தை காக்க தயாரானாள். நான்கு பேரையும் கடுமையாக எதிர்த்து, தன் கற்பு , பறிபோகாமல் பார்த்துக் கொண்டாள்.

"என்னை கொன்று விட்டு தான் என் கற்பை சூறையாட முடியும், முடிந்தால் அதை செய்யுங்கள்' என்று கூறிய அஞ்சுவிடம் இனி எந்த ஜம்பமும் பலிக்காது என்று வெறியாகிவிட்ட அந்த நான்கு பேரும், "இவளை இப்படியே விட்டுப் போய்விடக் கூடாது, இவளை போன்ற பெண்களுக்கு பயம் வரும் படி ஏதாவது செய்ய வேண்டும் என்று, அஞ்சுவின் வலது கையை கத்தியால் வெட்டினர். பிஞ்சு கை, அப்படியே வாழைத்தண்டு போல, துண்டாகி விழுந்தது.

கதறக்கதற, அஞ்சுவை அங்கேயே விட்டு விட்டு, அவளது துண்டான வலது கையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றி போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் மட்டும் பதிவு செய்துவிட்டனர்.

தினமலர்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)