02-19-2004, 01:21 PM
நன்றி தினக்குரல் 19.02.04
பிரபாகரனுடன் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து நேரடிýயாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஒரே அரசியல்வாதி
தான் படைத்த வரலாறு குறித்து கிண்ணியாவில் ரவப் ஹக்கீம்
சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பிரதிநிதியாக தனித்தரப்பாக கலந்து கொள்ள முடிýயுமென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நான் செய்து கொண்ட ஒப்பந்தத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரோடு ஒரே மேசையில் ஒன்றாக இருந்து ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் செய்தோம். அந்த ஒப்பந்தம் இன்று சாமானியமாக பேசப்பட்டாலும், விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் இன்னுமொரு தலைவருடன் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து நேரடிýயாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்த வரலாறு என்றுமே கிடையாது என }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை, கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான ரவ10ப் ஹக்கீம் பெரிய கிண்ணியா கிராமக் கோட்டடிý திடலில் இடம்பெற்ற பொதுக் கூýட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரபாகரனும் ரணிலும் ஒன்றாக அமர்ந்து செய்த ஒன்றல்ல. இருவரும் ஒரே நேரத்தில் வௌ;வேறு இடங்களிலே இருந்து கொண்டு செய்த ஒப்பந்தமாக அது இருக்கின்றது. எனவே இந்த ஒப்பந்தம் பற்றி இன்று எவ்வளவு எடுத்தெறிந்து பேசினாலும் அதிலே ஒரு விடயத்தை நாங்கள் மறந்துவிட முடிýயாது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளில் இருந்து விடுதலைப்புலிகள் செய்கின்ற எல்லா விடயங்களையும் சிலாகித்துப் பேசுகின்ற விமர்சகர்கள், அதை ஆதரித்து நிறையக் கட்டுரைகள், செய்திகள் வெளியிடுகின்ற தமிழ் பத்திரிகைகள் விடுதலைப் புலிகளின் தலைவர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மட்டும் விமர்சித்து வருகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூýடாது.
முஸ்லிம் தரப்பில் எல்லோரும் அதைப்பற்றி அன்று மகிழ்ச்சியோடு இருந்தார்கள். நல்லதொரு விடயம் செய்யவேண்டுமென்று சொன்னார்கள். காலப்போக்கிலே உடன்பாட்டிýல் தரப்பட்டவைகள் மீறப்படுகின்ற நிலை ஆரம்பித்த பொழுது அந்த உடன்படிýக்கை சம்பந்தமான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது. நம்பிக்கையீனத்தின் காரணமாக கலவர நிலைமை தோன்ற ஆரம்பித்தது. அதைப்பற்றி சற்று கண்டனப் பார்வையோடு பேச வேண்டிýய ஒரு நிலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்ட பொழுது விடுதலைப் புலிகளின் பிரதேச தலைமைகள் அதை சகித்துக் கொள்ளவில்லை. மாறாக இன்னும் கடூýரமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதற்கும், முஸ்லிம்கள் மீது அட்டகாசத்தையும், ஆயுதத் திணிப்பையும், அவர்களை பலவந்தப்படுத்தி பணிய வைக்கின்ற முயற்சிகளையும், உயிர் பறிப்புகளையும், உடைமைப் பறிப்புகளையும் அரங்கேற்றுகின்ற அந்த அசிங்கம் நாட்டிýன் பல பகுதிகளிலும் நடந்தன.
குறிப்பாக வட, கிழக்கின் எல்லாப் பாகங்களிலும் இது நடந்தது. எப்பொழுது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வருகின்றதோ அன்றுதான் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுகின்ற ஒரு வரலாற்றை நாங்கள் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம். பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வருகின்ற பொழுது நாங்கள் ஒற்றுமைப்படுவதைத் தவிர வேறு வழியிருக்க முடிýயாது. அதனை இந்த தேர்தலிலே நாங்கள் நிரூýபிக்க வேண்டிýய அவசியமிருக்கின்றது.
இந்த தேர்தல் இந்த நாட்டிýலே இருக்கின்ற தேசிய அரசியல் சக்திகளுக்கு காட்ட விரும்புகின்ற ஒரு தேர்தல் அல்ல. இந்த தேர்தல் விடுதலைப் புலிகளின் அலட்சியப் பார்வையை மாற்றுவதற்கும், சர்வதேச சமூýகத்திற்கு முன்னால் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கும் முஸ்லிம் தரப்புக் கோரிக்கையை வென்றெடுப்பதற்குமான ஒரு தேர்தலாகும். தனித்தரப்புக் கோரிக்கையை பற்றி என்னோடு முரண்பட்டு இருக்கின்ற எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்து நாங்கள் ஒரே குரலில் பேசினோம். பாராளுமன்றத்திலே அதற்கென ஒத்திவைப்பு நேர பிரேரணையைக் கொண்டுவந்து நான் முன்மொழிந்து பேசிய பொழுது அதை ஆமோதித்துப் பேசிய அத்தனை பேரும் எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப்புலிகளின் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டிý அதைப்பற்றி வியாக்கியானம் செய்து திரும்பத் திரும்ப பேசினார்கள்.
இன்று முஸ்லிம் காங்கிரஸில் இணைவதிலும், ஒரே தரப்பாக போட்டிýயிடுவதிலும் விதவிதமான கருத்துகளை வைத்துக் கொண்டு விதவிதமாகப் பலர் பேசுகின்றார்கள். தனித்தரப்பை நாடுவதற்கு முன்பு ஒரே தரப்பு என்கின்ற நிலைமைக்கு நாங்கள் வந்தாக வேண்டும். எனவே இந்த தனித்தரப்பு கோரிக்கையில் நாம் ஒன்றாக நின்று நாங்கள் ஒரே தரப்பாக அதை வென்றெடுக்க வேண்டிýய அவசியம்தான் இந்த அரசியலில் எங்களுக்கு இருக்கின்ற மாபெரும் சவாலாகும். அதை எதிர்கொள்வதற்காகத்தான் நான் இந்த அறைகூýவலை விடுக்கின்றேன். தேர்தலுக்கான நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு 48 மணித்தியாலம் வரை இந்த அழைப்பு வந்து சேர விரும்புகின்ற அனைவருக்கும் இருக்கும்.
நாடு முழுவதிலும் தனித்துப் போட்டிýயிடுவது என்று முடிýவெடுத்துவிட்டால் ஒவ்வொரு இடத்திலும் அந்த நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்வது என்பது சாமானியமானதொரு காரியமல்ல. நியமனப் பத்திரம் என்று தாக்கல் செய்யப்பட்டு முடிýகின்றதோ அன்றுதான் முஸ்லிம் காங்கிரஸ{டைய தலைவருக்கு தேர்தல் முடிýந்தது போன்ற நிம்மதி ஏற்படும். அடுத்த இரண்டு கிழமைக்குள்ளாக நாங்கள் இந்த நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான உள்ளக முடிýவுகளை செய்துகொள்ள வேண்டும். அதேநேரம், அடுத்த ஒரு சில நாட்களுக்குள்ளாக இந்த ஒற்றுமையை நாங்கள் காண வேண்டுமென அவாவுறுகின்றேன்.
கிண்ணியாவில் இருக்கின்ற வௌ;வேறு அரசியல் தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அவர்களுக்கிடையில் இருக்கின்ற விருப்பு, வெறுப்புகளைப் பற்றிய சரியான ஆய்வையும், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான சரியான அனுகுமுறையையும் உலமாக்கள் செய்ய வேண்டும். இதை இங்கு இருக்கின்ற புத்திஜீவிகள் செய்யவேண்டும். கூýட்டிýணைந்து ஒற்றுமையாக இந்த சமூýகத்தின் உயர்வுக்காக இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும். எல்லோரையும் ஒற்றுமைப்படுத்திவிட்டு அதற்கான பரிந்துரைகளை என்னிடத்தில் செய்கின்ற பொழுது அவற்றின் ப10ரண உடன்பாட்டைக் காண்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இதைச் சொல்லிவிட்டுப் போவது தான் என்னுடைய தலையாய கடமையாக இருக்கின்றது. திருகோணமலை மாவட்டத்தில் இது காலவரையிலும் முஸ்லிம் காங்கிரஸ் வகுத்து வந்த விய10கத்தில் விநோதமான அற்புதங்கள் இருக்கின்றன. அது படிýப்படிýயாக ஒரு பரிணாம வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றது.
ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் படிýப்படிýயாக ஆசனங்களின் தொகையைக் கூýட்டுகின்ற இந்த விளையாட்டைச் செய்வதற்கு விகிதாசாரத் தேர்தல் முறையின் விசித்திரங்கள் எங்களுக்கு உதவியாக இருந்திருக்கின்றன. அதேபோன்று வேற்று அரசியல் கட்சிகளோடு செய்துகொண்ட உடன்பாடுகளும் இதற்கு உதவியாக இருந்திருக்கின்றன. ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸ{டைய பரிணாம வளர்ச்சியில் இன்னுமொரு புதிய கட்டம் ஆரம்பித்திருக்கின்றது. இதுகாலவரையும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று ஆசனங்களை வென்றது என்கின்ற ஒரு வரலாறு திருகோணமலை மாவட்டத்திலே இல்லாது இருக்கின்றது. அதை களைவதற்கு எங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ{டன் முரண்பட்டு இருப்பவர்கள், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை அல்லது முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கின்ற அரசியல் பிரமுகர்களை விரும்பாத மாற்றுக் கட்சிக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்த துணை போவதா என சிந்திக்காமல் இது எங்களுடைய இயக்கம், உங்களுடைய பாதங்களில் நான் காணிக்கையாக விட்டுச் செல்கின்ற இயக்கம், இதை தூக்கியெடுத்து, வளர்த்தெடுத்து இதற்கு உரமூýட்டிý இதை பாதுகாக்கின்ற பெரிய பொறுப்பு இங்கு இருக்கின்ற உங்கள் ஒவ்வொருவருடைய கரங்களிலும் தரப்படுகின்றது என்றும் ஹக்கீம் தமதுரையில் தெரிவித்தார்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->