05-31-2005, 09:17 PM
<b>குற்றவாளிகளின் பட்டியலில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச விமான நிலையக் கருவி காட்டிக் கொடுத்தது</b>
ஜப்பானுக்குச் செல்வதற்காக கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத் திற்குச் சென்ற ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது கடவுச் சீட்டை குடிவரவு, குடியகல்வு அதிகாரி களிடம் சோதனைக்காக ஒப்படைத்த போது அது கணினி முறைக்கு உட் படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆபத்தை அறிவிக்கும் சமிஞ்ஞை ஒலி எழுந்த தன் காரணமாக விமான நிலையத் தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசேட முக்கிய பிரமுகர்களின் வழியாக இலங்கைக்கு வந்து போகின்ற சோமன்ச அமரசிங்க, ஜப்பானுக்கு சாதாரண பொதுமக்கள் செல்லும் வழியாகச் சென்றிருந்தார். முக்கிய பிரமுகர்களின்வழியால் செல்லும்போது கடவுச்சீட்டு குறித்த பிரச்சினைகள் தோன்றுவதில்லை.
ஆனால், சாதாரண மக்களின் வழியால் செல்கின்றபோது குற்றவா ளியாகப் பெயர் குறிப்பிடப்பட்டு கறுப் புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நப ரொருவர் நாட்டைவிட்டு வெளியே செல்ல முயற்சி எடுத்தால், புதிய கணினி முறையின் கீழ் ஆபத்தை அறிவிக் கும் ஒலி எழுப்பப்படும்.
இந்த வகையில் ஜே.வி.பி. தலை வர் சோமவன்ச அமரசிங்கவின் பெய ரும் தற்போதும் நாட்டுக்குள் உள் நுழைவதற்கும், நாட்டை விட்டு வெளி யேறுவதற்கும் தடைவிதிக்கப்பட்ட கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட் டிருப்பதனால் இவ்வாறு ஆபத்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமவன்ச அமரசிங்கவின் விமானப் பணய அனுமதிப் பத்திரம், கணினி பரிசோதனைக்குட்படுத்திய பின் ஆபத்து சமிக்ஞை ஒலி எழுப்பி யதன் காரணமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்த குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், சோமவன்ச அமரசிங்கவிற்கான அனுமதியை வழங்க முடியாது பெரும் சிக்கலுக் குள் சிக்கித் தவித்தனர்.
எனினும் அரசாங்கத்தின்முக்கிய அமைச்சரொருவர் குடிவரவு, குடிய கல்வு அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதன் பின்னர், சோமவன்ச அமரசிங்கவுக்கு பயண அனுமதி வழங் கப்பட்டது. சோமவன்ச அமரசிங்க, விமல் வீர வன்ச மற்றும் நந்தன குணதிலக ஆகியோர், ஜப்பானுக்கு சென்ற விமா னத்திலேயே அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜயந்த தன பாலவும் ஜப்பானுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழநாடு/யாழ்ப்பாணம்