07-29-2003, 08:37 AM
இன்னோரிடத்திலிருந்ததை இங்கு தருகிறேன்
தேடல்
அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம்.
ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது.
இந்திய சாகித்திய அகாதெமியின் தென்மண்டலக் குழுவினர், "இன்றைய தமிழின் இலக்கிய வரலாறு" எனும்
ஒரு மிகப்பெரிய நூலை மூன்று பெரும் தொகுப்புகளாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
( "A New Comprehensive History of Tamil Literature " in the three volumes
of 540, 460 and 1175 pages respectively) மூன்றாவது தொகுப்பில் எழுதும் முப்பது
கட்டுரையாளர்களில் என்னையும் ஒருவனாகத் தேர்வு செய்துள்ளனர்.
எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு : " தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம், தலித்தியம்"
நான் ஏற்கெனவே எனது "கவிதையின் கதை" நூலுக்காகச் சேகரித்துள்ள கவிதைகள் தவிரவும் இன்னும் பல
நல்ல கவிதைகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நமது நண்பர்களில் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்கள் இந்தத்தலைப்பில் சேர்க்கக் கூடிய -பொருத்தமான
- கவிதைகளை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன். தகுதியான கவிதைகளை கவிஞர் பெயர்,
வெளிவந்த நூல் அல்லது இதழ் ஆதாரத்துடன் தந்தால் உறுதியாகப் பயன்படுத்துவேன் என்பதை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இணையத்தில் கிடைக்கக் கூடிய நூல், இதழ்களில் இத்தகைய கவிதைகள் இருக்குமெனில் அந்தச் சுட்டியை மட்டும்
தெரிவித்தாலும் போதுமானது.
நல்ல கவிதைகள் / கவிஞர்களை தமிழகம் தாண்டியும் 22 இந்தியமொழிகளில் வரக்கூடிய நூலில் அறிமுகப்
படுத்தக் கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்த, நண்பர்களின் உதவியை
எதிர்பார்க்கிறேன்.
நமது மடற்குழுவில் இதனைத் தந்தாலும் நல்லதே (அத்தைகய கவிதைகள் பற்றி, மடற்குழுவில் உள்ள மற்ற
நண்பர்களின் கருத்தையும் அறியலாம்தானே?) மடற்குழுப் பொறுப்பாளர்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள் என்றே
நம்புகிறேன்.
அல்லது, தனி மடலில் எனக்குத் தெரிவித்தாலும் நன்றியுடன் ஏற்பேன்.
பெண்ணியக் கவிதைகளை பெண்களும்,
தலித்தியக் கவிதைகளைத் தலித்துகளும்தான் எழுதியிருக்கவேண்டும் என்பதில்லை.
ஆண்கவியோ, பெண்கவியோ, மரபோ, புதுக்கவிதையோ, ஐக்கூவோ உணர்வின் உண்மையும், கவித்துவமுமே
முக்கியம்.
ஒரு தகவலுக்காக-
"தையல் சொல் கேளேல்" என்று எழுதியவர், ஔவை.
"தையலை உயர்வு செய்" என்று எழுதியவன் பாரதி.
"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு" என்றவர்க்கு மாறாக, "தொப்பை பெருத்தல் ஆணுக்கழகா?" என்று
கேட்டவர் இன்குலாப்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்.
muthunilavan@yahoo.com