Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாங்கள் தமிழ் மாணவர்கள்
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>நாங்கள் தமிழ் மாணவர்கள்</b></span>

இவர்கள் உழைக்கமட்டுமே வந்தவர்கள்
வேறு எதுவுமே தெரியாது என்று தலைகுனிய மட்டுமே தமிழன் என்ற
கருத்துக்கள் நடமாடும் புலம்பெயர் சமூகச்சந்தையில்
பலதரப்பட்ட தடைகளை உடைத்து எல்லாமே எம்மால் முடியும் என்று
தலைநிமிர்த்தி புதியதொரு உலகம் செய்ய தைரியமாய் புறப்பட்டு
பிறிதொரு திசையில் கால்தடம் பதிக்கிறது புலம்பெயர் தமிழினத்தின் அடுத்த
தலைமுறை. தமிழ் மக்களினதும் தமிழ் மாணவர்களினதும் தாய் மொழியினதும்
தாய் நிலத்தினதும் எங்கள் இளய தலைமுறையினதும் நலன் விரும்பிகள்.
நாங்கள் தமிழ் மாணவர்கள்...!

இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டொரு மாணவர்களின்
தீராத தேடலினாலும் விடாமுயற்சியினாலும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில்
சிறு அரும்பாக முழைவிட்ட இந்த மாணவர் சங்கம்
இன்று இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்களின் பலத்தோடு யாரும் எதிர்பாற்க
முடியாத அழவுக்கு எவரும் எட்டித்தொட முடியாத உயரத்தை நோக்கி
பெரு விருட்சமாக வளர்ந்துவருகிறது.

எமதிந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முதல் அடையாளம்
பிரான்சின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றானா போர்தோ என்னும் இடத்தில்
கடந்தமாதம் நடைபெற்ற அகில பிரான்சு மாணவர்
சங்க ஒன்றுகூடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரான்சு முழுவதிலும்
இருந்து 564 மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
5 நாட்கள்வரை நடைபெற்ற இந்த ஒன்றுகூடலிகன்போது நல்ல திட்டங்களிலும்
பயனுள்ள செயற்பாடுகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சிகண்ட 34 சங்கங்கள்
தெரிவுசெய்யப்பட்டது. இந்த 34 சங்கங்களில் தமிழ் மாணவர் சங்கம் 6 ஆம்
இடத்தைப் பிடித்துள்ளது. எமதிந்தச் சங்கம் ஆரம்பித்து இரண்டு
ஆண்டுகளுக்குட்பட்ட காலப்பகுதியிலேயே 564 மாணவர் சங்கங்களில் 6ஆம்
இடத்தைப் பிடித்திருப்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விடயம்.

எமது அன்புக்குரியவர்களே...
இந்த மாணவர் அமைப்பு உங்களுடைய அரிய பொக்கிஷம் தமிழ் மாணவர்களின்
தலைசிறந்த சொத்து. இந்த ஆலமரம் உங்களுக்கு மட்டுமே பயன்தரும்
உங்களுக்காகவே கிளைபரப்பி நிழல்தரும். பாற்பவர் பலர் பயன்பெற இன்னும்
பிரமிப்போடு பிரமாண்டமாக வளர்த்தெடுப்பது உங்களுடைய பொறுப்பு.
உலகத்தில் எந்த மூலையில் வாழும் தமிழ்மாணவனுக்கும் இந்த பொறுப்பில்
நிச்சயம் பங்குண்டு.

வேரோடி எங்கும் விழுதெறியும் இந்த ஆலமரத்தில் பலம்மிக்க ஒரு பெரும்
விழுதாய் "அறிவோலை" என்ற பெயரோடு கல்வி சம்மந்தமான தகவல்களும்
அறிவியல் சம்மந்தமான ஆவணங்களும் சமகால அரசியல் ஆய்வுகளும்
உலகச் செய்திகளையும் உள்ளடக்கிய சஞ்சிகை வருடங்களுக்கு இரண்டு
அல்லது மூன்று முறை பிரஞ்சிலும் தமிழிலுமாக இரண்டு மொழிகளில்
வெளியாகிறது. எமது அறிவோலையின் முதலாவது இதழை கடந்த ஆண்டு
பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின்போது தாயகத்தில் இருந்து
வருகைதந்த விடுதலைப்புலிகளின் அரசவைக் கவிஞர்
திரு. புதுவை இரத்தினதுரை அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது

முதலாவது இதழிலேயே பல வாசகர்களினதும் பெரியவர்களினதும்
அறிஞர்களினதும் பாராட்டுக்களையும் ஊக்குவிப்புக்களையும் பெற்றது.
அதைத்தொடர்ந்து இரண்டாவது இதழ் கடந்த மாதம் அகில பிரஞ்சு மாணவர்
சங்கங்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு. தோமாஷ் புவாறியர் அவர்களால்
வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில் பல வேறுபட்ட
பிரஞ்சு மாணவர்சங்க உறுப்பினர்களும் ஆய்வாழர்களும் தகவல்
சேகரிப்பாளர்களும் தமிழ் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு
சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வின்போது எமது பெற்றோர்களுக்கும் இதர மாணவர்களுக்கும்
எமது தற்போதய செயற்பாடுகள் பற்றி விளக்கினோம் அந்த செயற்பாடுகளில்
சில பின்வருமாறு....

மாணவர்களுக்கு இலவச வகுப்புகள்
மக்களுக்கு இலவச பொழிபெயற்புச் சேவை
சகமாணவர்களுக்கு உதவிகள் புரிதல்
கல்வி தொடர்பான சுற்றுலாக்கள்
கல்வி தொடர்பான கலந்துரையாடல்கள்
கல்வி தொடர்பான ஆலோசனைகள்
பயனுள்ள தகவல்கள்தேடி மாணவர்களுக்கு அறிவித்தல்
பெற்றோர்களோடு கலந்துரையாடல்
பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கல்வி பற்றிய அறியாமையை போக்குதல்
தமிழ் வளர்ப்புத்திட்டங்கள்
தமிழ்ப்பாரம்பரியங்களை பாதுகாக்கும் திட்டங்கள்

இப்படியாக எமது செயற்பாடுகள் நீழ்கிறது....
இருப்பினும் இவை தற்காலிக செயற்பாடுகளே தவிர வருங்கால செயற்பாடுகள்
இன்னும் பல.........

ஆகவே... அன்புக்குரிய தமிழ் மாணவர்களே...
வேறுபட்ட கலாச்சாரம் வேறுபட்ட இனங்களுக்கு மத்தியில் எங்கள்
பாரம்பரியங்கள் எங்கள் கலாச்சாரங்கள் எங்கள் சுயஅடையாளங்கள்
எந்தவிதத்திலும் அழிந்திவிடாமல் எந்தவிதத்திலும் காயப்படாமல்
காப்பது எங்கள் கடமை. எந்தத்தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழனுக்குரிய
தன்மைகளுடனும் தமிழனுக்குரிய அடையாளத்துடனும் இருப்பதையே
நாங்கள் விரும்புகிறோம் அதுபோல நீங்களும் அதையே விரும்புவீர்களாயின்
புறப்பட்டு வாருங்கள் உங்களை வரவேற்க உங்கள் சகோதரர்கள்
நாங்கள் தயாராய் இருக்கிறோம். எல்லோரும் ஒன்றுசேர்ந்து இலக்குகளைநோக்கி
பயணத்தைத் தொடர்ந்து சாதனைகள் பல படைத்து பார்பவர்கள் புகள
புதியதொரு வரலாறு எழுதுவோம். புலத்தில் தாய்நிலத்தின் நினைவோடு
நடமாடுவோம். இன்னும் பெரியதொரு பலமாக உருவாகுவோம்.
ஏனெனில்... நாங்கள் தமிழ் மாணவர்கள்...!


நம்பிக்கையுடன்
பிரஞ்சு தமிழ் மாணவர் சங்கம்
19.10.2003 (பாரீஸ்)
sharish
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)