Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உருப்படியாய்... என்ன செய்தேன்...?
#1
<b>உருப்படியாய்...
என்ன செய்தேன்...?</b>

இன்னும் எத்தனை தடவைதான்
புரண்டு புரண்டு
படுத்திருப்பேன்...?
எனது வீடு...
மயான அமைதியாய்க் கிடக்கிறது
எனது படுக்கை அறை
சிறைச்சாலைபோல்
காட்சியழிக்கிறது....!

சுவர்க்கடிகாரம் மட்டும்
டிக் டிக் என்று
சத்தம் செய்தபடி
பத்துமணி தாண்டி
ஓடிக்கொண்டிருந்தது

எழுந்திருக்க மனமில்லாமல்
மீண்டும் கண்களை மூட
"சடீர்" என்று ஒரு சத்தம்
அது என் அன்னை
எனக்காகத் தயாரித்த
தேனீரை மேசையில்
வைக்கும் சத்தம்..!
அந்த சடீர் என்னும்
சத்தத்தின் அர்த்தம்...
இனியும் படுக்காதே
எழுந்திரு என்பதாகவே
தெரிந்தது...!

படுத்திருந்தபடியே...
யன்னல் திரையை
மெதுவாக விலக்கி
வீதியை எட்டிப்பார்த்தேன்
அங்கே...
மதிய சாப்பாட்டு
இடைவேளைக்காக
இன்றைய படிப்பாளிகள்
நாளைய உழைப்பாளிகள்
உரையாடிக்கொண்டே
செல்வது தெரிந்தது

ஓ.........
மணி பன்னிரண்டு
ஆகிவிட்டதா...??
கட்டிலைவிட்டு எழுந்து
கடமைகள் முடித்து
இப்போது வரவேற்பறையில்
இருக்கிறேன்
எதுவுமே செய்துவிட
விரும்பாதவனாய்...
ஆசனத்தில் அமர்ந்தபடி
அண்ணார்ந்து பார்க்கிறேன்

அடிக்கடி
அழுதுகொண்டிருக்கும்
என் கைத்தொலைபேசி
என்றும் இல்லாமல்
இன்றைக்கு ஏன்
அமைதியாய் ஒரு
ஓரமாய்க் கிடக்கிறது...?

தொலைபேசியை எடுத்து
நானே அழைத்தேன்
அந்த நேரம்தான்...
நண்பர்கள் எல்லோரும்..
வெளியே சென்றுவிட்டார்கள்
சிலபேர்
குளித்துக்கொண்டிருக்கிறார்கள்
சிலபேர்
நித்திரையாம்

வெறுப்புடனே
சமையல் அறைக்குச் செல்கிறேன்
சாப்பாட்டைப் பார்த்துவிட்டு
சாப்பிட மனமில்லாமல்
மீண்டும்
வரவேற்பறைக்கு வந்து
தொலைக்காட்சி பார்க்கிறேன்
தொலைக்காட்சியில்...
தொடர் நாடகங்கள்
இந்த நாடகத்தைப் பார்ப்பதனால்
எனக்கென்ன நன்மை...?
இதைப்பார்த்து பொழுதைப்போக்க
நான் விரும்பவில்லை...
ஆகையினால்
அடுத்த தொலைக்காட்சியை
பார்க்க முயன்றேன்....
அங்கேயும் தொடர்நாடகம்

எதற்கு இத்தனை தொடர்கள்..?
எதற்கு இந்த
தொலைக்காட்சிகளின்
திடீர் வருகை...?

சில வேளைகளில்
இப்படி இருக்குமோ...???

ஒரு சின்ன கிராமத்தில் இருந்த...
பண்ணையில் இருந்து
மிக மலிந்தவிலையில்
பால்வாங்கி மகிழ்ச்சியோடு...
வாழ்ந்துவந்த
அந்த கிராமத்தைப்பார்த்து
பொறாமைப்பட்ட
பக்கத்துப் பெரிய கிராமத்துக்காரன்
அந்த சின்னக்கிராமத்திற்கு
தனது பண்ணையில் இருந்து
இலவசமாய் பால் கொடுத்தானாம்
இலவசப்பாலை அருந்திய
அப்பாவி மக்கள்
தங்களுக்கென்றொரு
பண்ணை
இருக்குதென்பதையே
மறந்தார்களாம்...!
பிறகென்ன...???
அந்தச் சின்னக்கிராமத்து
பண்ணை இருந்த
இடமே தெரியாமல்
மறைந்துவிட்டதாம்...!
அதன்பின்.........
பெரியகிராமத்துக்காரன்
பெரிய விலையில் அந்த
சின்னக்கிராமத்துக்கு
பால் கொடுத்தானாம்...!

இதுபோலத்தானோ
நாளை நம் கெதி...?
இதற்காகத்தானோ
இந்த தொ(ல்)லைக்காட்சிகளின்
திடீர் வருகை...?

இச்சே...........
வெறுப்புடனே...
அலுத்துப்போயிருக்க
மணி இரவு பத்தைத்தாண்டியது
மீண்டும்
படுக்கையறை நோக்கிச் செல்கிறேன்
ஆமாம்.....
இன்று நான்
உருப்படியாய் எதைச்செய்தேன்...???


த.சரீஷ்
09.09.2003 (பாரீஸ்)
sharish
Reply
#2
தினம் இதைத்தான் சொல்லிக்கொள்கின்றோம்
என்றுதான் உருப்படியாய் செய்துவைக்கப்போகின்றோம்

அனுபவங்களால் வருமபோது கவிதை உயிர்பெறுகின்றது.

நிசப்தத்தை குலைத்த தாயாரின் தேனீர்க்கோப்பை என்னை என் தாயிடம் அழைத்துச்சென்றது. நன்றி

தினசரி வாழ்வின் காரியங்களை குறிப்பெடுத்துக்கொண்டால் இழந்தவை பெற்றவைகளை விட அதிகமாகத்தான் தோன்றுகின்றன

வாழ்த்துக்கள் நண்பா
இன்னும் வளரட்டும் உங்கள் கவிமலை........இமயத்தை தாண்டி..........
[b] ?
Reply
#3
வாழ்த்துக்கள் நண்பனே.. (சாPஷ்..)
நுன் கவிதைத்திறன் வளர்ந்து நிற்க
என் மனப்புூர்வமான வாழ்த்துக்கள்.

<b>உருப்படியாய் என்ன சேய்தேன்.......?</b>

கேட்கிறேன் - என்
சிதறுண்டிருக்கும்
இதயத்தைக் கேட்கிறேன் !

மண்ணின் வாசனையை
இழந்த என் உள்ளத்தைக்
கேட்கிறேன்..

மதிகெட்டு மானுடன்
தறிகெட்டுத் திரிவதை
விதியென்று து}ரநின்று
பலமிழந்து பார்க்கும் போது - மீண்டும்
என் இதயத்தைக் கேட்கிறேன்..

உண்மை உண்மையென்று
உலகில் நடக்காததெல்லாம்
உலகம் தெரியாதவர்
இருப்பர் என்றெண்ணி
உருட்டிச் செல்கிறார் களத்திலே !

இப்போதும் கேட்கிறேன்
என் இதயத்திடம் -
என்னதான் உருப்படியாய் செய்தேன் என்று..

கார்முகில் மறைத்தாலும்
சுூரியன் அழிவதில்லை..சற்றே
மறைகிறான் அவ்வளவுதான்..
அவரவர் பெருமைக்காய்
அந்தி பகலென்றின்றி
பாடாய் மாடாய் உழைக்கிறார்...

ஏனிந்த உழைப்பை
அந்தத் தேசம்........
குண்டுச் சத்தங்களால்
பம்பர் தாக்குதலினால்
கன்னி வெடிகளினால்
அவலக் கோஷங்களால்

உடைமை இழந்து
உணர்வினை இழந்து
உயிரின் உயிரையே இழந்து
திசை போன போக்கெல்லாம்
என் பாட்டனும் பாட்டியும்
பேத்திகளும் மைத்துனன்களும்
அண்ணன் மாரும் அக்கா மாரும்
அயல் வீட்டாரும்
அடுத்த ஊராறும்
அன்பின் உறவுகளும்
உடன் பிறவாச்
சகோதர சகோதரிகளும்
உற்றார் உறவினர்களும்....

தஞ்சம் தஞ்சம் - எனக்கல்ல எனக்கல்ல
பசி பசி - எனக்கல்ல எனக்கல்ல
கடவுளே கடவுளே - எனக்கல்ல எனக்கல்ல
உயிரே உயிரே - எனக்காகவல்ல..

என் புத்திரனுக்காய் புத்திரிக்காய்
பேரனுக்காய் பேத்திக்காய்
கொள்ளுப்பேரனுக்காய்........
கொஞ்சம் என்னை வாழவிடு என்று
ஒவ்வொரு அம்மையும் அப்பனும்
பாட்டனும் பாட்டியும்
சோதரங்களும்.........கதறி அழுதனவே !
கதறி அழுதனவே.....!

அப்போது உழைப்பாய்த் தரவில்லை ?

அந்தக் காட்சிகளைக்
கண்ட பின்பும்
நாளைய தேசமது
நமக்காய்ப் பிறக்குமென்று - நம்பி

சென்று விடு மகனே சென்றுவிடு
ஊரை விட்டுச் சென்று விடு
உன் தாயை விட்டுச் சென்றுவிடு
உன் மண்ணைவிட்டுச் சென்றுவிடு

நாளையொரு நாள்
நாம் வென்றிடும் காலம் வரும்.. !
சென்றுவிடு என்று.........

என்னைத் தட்டித் தடவி
தாமாகத் துன்பங்களை
நாளைய சமுதாயத்திற்காய்
தாங்கி நின்ற..

வீட்டுக்கொரு மைந்தனை
விடுதலைக்காய் தந்திட்ட
அத்தனை உறவுகளையும்...

மீண்டும்........

எண்ணிப்பார்த்தபோது - என்
இதயத்தைக் கேட்கிறேன்..
உருப்படியாய் இதுவரை
என்ன சேய்தேன் என்று..

புரியவில்லை...
விடை சொல்ல
இதயத்திற்கும் தெரியவில்லை !

ஏதோ ஒன்றை
இருந்தும் இல்லாததாய்
உணரமறுத்து உறங்கிக்கிடக்கிறது
மானுட இதயம் !

அது மட்டும் தெரிகிறது - புரிகிறது.
Reply
#4
அழகாக இன்றய சிலரின் புல வாழ்க்கை முறையையும் அதற் கூடாக தொலைக்காட்சிகளின் வருகை சின்னத்திரைகளின் சலிப்பையும் கவிதைக் கூடாக கொண்டு வந்து நல்லதொரு பதிவாக்கி தந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)