10-01-2003, 07:59 PM
ஜ. கோபிநாத்
மகாத்மா
நீ கற்பித்த
சத்தியம்
பதவிப் பிரமாணங்களிலும்
சத்தியப் பிரமாணங்களிலும்
சாகடிக்கப்படும்போது...
நீ கடைப்பிடித்த
அகிம்சை
ஆயுதப்போராட்டங்களிலும்
அடக்குமுறைகளிலும்
அழிக்கப்படும்போது...
நீ பாடுபட்ட
தீண்டாமை ஒழிப்பு
தேநீர்க் கடைகளிலும்
தெய்வத் திருப்பணிகளிலும்
செல்லாக் காசாகும் போது...
நீ வலியுறுத்திய
சகோதரத்துவம்
சாதிச் சங்கங்களிலும்
சனாதனச் சங்கிலிகளிலும்
சிக்கலாகும் போது...
மகாத்மா!
உன்னை நினைக்கின்றேன்
கண்ணை நனைக்கின்றேன்.
நீ களையெடுக்கச்
சொன்னதெல்லாம்
மக்கள் மனங்களில்
தலையெடுத்துக்கொண்டு...
நீ கடைப்பிடிக்கச்
சொன்னதெல்லாம்
மக்கள் மனங்களில்
கறை பிடித்துக் கொண்டு...
மறந்துமிங்கே
மறுபிறவி எடுத்து விடாதே
மகாத்மா நீ !
கோட்சேக்களின் கூடாரமாய்
−ன்றைய பாரதம்.
நன்றி: ஆறாம் திணை.கொம்
எனது கருத்து: திலீபனைக் மரணிக்கவிட்டபோதே இந்தியாவைப்பற்றி நாம் தெரிந்துகொண்டுவிட்டோம்.
மகாத்மா
நீ கற்பித்த
சத்தியம்
பதவிப் பிரமாணங்களிலும்
சத்தியப் பிரமாணங்களிலும்
சாகடிக்கப்படும்போது...
நீ கடைப்பிடித்த
அகிம்சை
ஆயுதப்போராட்டங்களிலும்
அடக்குமுறைகளிலும்
அழிக்கப்படும்போது...
நீ பாடுபட்ட
தீண்டாமை ஒழிப்பு
தேநீர்க் கடைகளிலும்
தெய்வத் திருப்பணிகளிலும்
செல்லாக் காசாகும் போது...
நீ வலியுறுத்திய
சகோதரத்துவம்
சாதிச் சங்கங்களிலும்
சனாதனச் சங்கிலிகளிலும்
சிக்கலாகும் போது...
மகாத்மா!
உன்னை நினைக்கின்றேன்
கண்ணை நனைக்கின்றேன்.
நீ களையெடுக்கச்
சொன்னதெல்லாம்
மக்கள் மனங்களில்
தலையெடுத்துக்கொண்டு...
நீ கடைப்பிடிக்கச்
சொன்னதெல்லாம்
மக்கள் மனங்களில்
கறை பிடித்துக் கொண்டு...
மறந்துமிங்கே
மறுபிறவி எடுத்து விடாதே
மகாத்மா நீ !
கோட்சேக்களின் கூடாரமாய்
−ன்றைய பாரதம்.
நன்றி: ஆறாம் திணை.கொம்
எனது கருத்து: திலீபனைக் மரணிக்கவிட்டபோதே இந்தியாவைப்பற்றி நாம் தெரிந்துகொண்டுவிட்டோம்.

