Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரதட்சணை
#1
வரதட்சணை கொடுமை: பெண் போலீசாரால் அலைகழிக்கப்பட்ட பெண் தற்கொலை

மதுரை:

வரதட்சøக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வழக்கைப் பதிவு செய்யாமல் மகளிர் காவல் நிலையப் போலீசாரும், இன்னொரு காவல் நிலைய போலீசாரும் அலைகழித்ததால் நொந்து போன அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கடமையைச் செய்யத் தவறிய சப்இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்னொரு பெண் சப்இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணை அவரது கணவர் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதை அவர் பொறுத்துக் கொண்டு இருந்தார். ஆனால், அடி உதை அதிகமானதால் வேறு வழியின்றி 'ஹெல்ப் லைன்' பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றார்.

(ஆபத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அவசர உதவி செய்ய உருவாக்கப்பட்ட போலீஸ் பிரிவு தான் ஹெல்ப் லைன். பெரும்பாலும் பெண் போலீசார் தான் இதில் உள்ளனர்.)

ஆனால், முருகேஸ்வரியிடம் லஞ்சம் எதிர்பார்த்த ஹெல்ப் லைன் பிரிவு பெண் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். இவரால் பணம் தர முடியாது என்பதால் வழக்கை வாங்காமல் மகளிர் காவல் நிலையத்துக்குப் போகுமாறு கூறினர்.

இதையடுத்து முருகேஸ்வரி மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கும் லஞ்சம் எதிர்பார்த்த பெண் போலீசார், இவர் பணம் தரும் நிலையில் இல்லை என்பதால் தரக் குறைவாக நடத்தினர். இங்கே எதுக்குடி வந்தே, ஹெல்ப் லைன் போலீஸ்கிட்ட போ என விரட்டியடித்தனர்.

மீண்டும் ஹெல்ப் லைன் போலீசுக்குப் போன முருகேஸ்வரியை பார்த்து எரிச்சலான பெண் போலீசார், நாங்க தான் மகளிர் காவல் நிலையம் போகச் சொன்னோம் இல்ல, ஏன் இங்கே வந்தே என்று கூறி மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதைத் தொடர்து மகளிர் காவல் நிலையத்துக்கு முருகேஸ்வரி மீண்டும் செல்ல, அங்கும் திட்டும் அவமரியாதையும் தான் கிடைத்தது.

இதனால் துவண்டு போய் தனது பெற்றோரிடம் சென்ற முருகேஸ்வரி தனக்கு கணவராலும், காவல் நிலையங்களிலும் ஏற்பட்ட கொடுமையைச் சொல்லி அழுதுள்ளார்.

அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனால், இந் நிலையில் முருகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர்.

இதனால் துடிதுடித்துப் போன பெற்றோர் சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மதுரை போலீஸ் கமிஷ்னரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

மேலும் இந்தத் தற்கொலை குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் விசாரணையும் நடந்தது. அதில் முருகேஸ்வரியை ஹெல்ப் லைன் பெண் போலீசாரும், மகளிர் காவல் நிலைய போலீசாரும் அலைகழித்ததும், அவமானப்படுத்தியதும் உண்மையே என்று தெரியவந்தது.

இதையடுத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸபெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹெல்ப் லைன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரு பெண் சப்இன்ஸ்பெக்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முருகேஸ்வரியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.thatstamil.com/news/2003/09/22/woman.html
Truth 'll prevail
Reply
#2
[size=14]பஞ்சாயத்தால் அவமானப்படுத்தப்பட்ட தலித் குடும்பம்: வன்னிய பெண்ணை மணம் செயததால் தண்டனை
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தம்பதியரை காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளது பஞ்சாயத்து.

சமீபத்தில் தான் திருச்சி அருகே ஒரு பெண்ணை 5 மண்டியிட வைத்து பஞ்சாயத்தார் கொடுமை செய்தனர். இதையடுத்து அவர்களை உயர் நீதிமன்றம் கண்டித்தது.

இந் நிலையில் அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. பூதமங்கலம் வேடியப்பந்தாங்கல் காலனியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மூத்த மகன் இராஜேந்திரன். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் வடுகப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவரின் மகள் காந்தியும் காதலித்தனர். இவர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்.

ராஜேந்திரனால் காந்தி கர்ப்பம் தரித்துள்ளார். எனவே இருவரும் மங்கலம் முருகன் கோவிலில் இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு வேலை தேடி பெங்களூர் சென்றனர்.

இந்தத் திருமணத்தால் ஆத்திரமுற்ற காந்தியின் உறவினர்களும் அப் பகுதி வன்னிய இன முக்கியஸ்தர்களும் சேர்ந்து ராஜேந்திரனின் தந்தை முனுசாமியை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். தந்தை தாக்கப்பட்டதை அறிந்த ராஜேந்திரன் தனது மனைவி காந்தியுடன் பெங்களூரில் இருந்து கடந்த மாதம் ஊருக்குத் திரும்பி வந்தார்.

அப்போது காந்தியின் உறவினர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், தேசிங்கு என்பவரின் மகன் சுப்பிரமணி, மேலும் பலர் ஒன்று சேர்ந்து அவரது தாலியை அறுத்தெறிந்துள்ளனர். மேலும் கணவன் மனைவியையும் பிரித்துவிட்டு இனி ஒன்று சேர்ந்தால் இருவரையும் கொல்வோம் என மிரட்டியுள்ளனர்.

பின்னர் ஊர்ப் பஞ்சாயத்து கூடி இவர்களது காதல் திருமணம் குறித்து விசாரித்தது. அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ராஜோந்திரன் வன்னிய இனப் பெண்ணான காந்தியை திருமணம் செய்து கொண்டது தவறு என்றும் இதற்காக ராஜேந்திரனின் பெற்றோர் ஊர்ப் பஞ்சாயத்துக்கு ரூ .20,000 அபராதம் செலுத்துவதுடன் பஞ்சாயத்தார் அனைவரின் கால்களிலும் வரிசையாக விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அடாவடி தீர்ப்பளித்தனர்.

இதைச் செய்யாவிட்டால் ஊரை விட்டு வெளியேற்றுவோம், கொல்வோம் என மிரட்டியதால் ராஜேந்திரனும் அவரது வயதான தந்தை முனுசாமி மற்றும் முதிய தாயார் ஆகியோர் பஞ்சாயத்துக் கும்பலின் கால்களில் வரிசையாக விழுந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஒவ்வொருவர் கால்களிலும் கண்ணீருடன் விழுந்து எழுந்தது ராஜேந்திரனின் குடும்பம்.

தன்னால் தனது பெற்றோர் காலில் விழ நேர்ந்த அவமானத்தை நினைத்து நொந்த ராஜேந்திரன் கதறியழுதபடி அனைவர் கால்களிலும் விழுந்தார்.

இது தவிர இந்தக் காதலுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி காந்தியின் விதவைத் தாயாரான மல்லிகாவை பஞ்சாயத்து கும்பல் தாக்கியுள்ளது. மேலும், ரூ.40,000 அபராதம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால், பணமில்லாததால் அதைக் கட்டாமல் போன மல்லிகா இப்போது ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து காந்தி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், ராஜேந்திரன் திருவண்ணாமலை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீஸாரிடமும் புகார் செய்துள்ளனர்.

தற்போது இந்த இருவரையும் திருவண்ணாமலை மாவட்ட கலப்பு திருமணம் செய்து கொண்டோர் சங்கத்தினர் தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

http://www.thatstamil.com/news/2003/09/22/...2/marriage.html
Truth 'll prevail
Reply
#3
தாத்தாவும் இப்ப வரவர ரொம்ப மோசம்.

தகவல்கள் அனைத்திற்கும் நன்றி தாத்ஸ்
[b] ?
Reply
#4
[size=18]வரதட்சணை கொடுமை: அதிமுக எம்.எல்.ஏவின் கணவர் கைது

புதுக்கோட்டை:

அதிமுக எம்.எல்.ஏ கருப்பாயியின் கணவர் கருப்பையா, வரதட்சணைக் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயி. இவரது கணவர் பெயர் கருப்பையா.

கருப்பையாவுக்கு 1983ம் ஆண்டே திருமணமாகி விட்டது. அவரது முதல் மனைவி பெயர் கலையரசி. இதன் பின்னர் தான் கருப்பாயி உடன் வசிக்க ஆரம்பித்தார் கருப்பைய்யா. இந் நிலையில் கருப்பாயி அதிமுகவில் சீட் பெற்று எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார்.

கணவர் தொடர்பாக கருப்பாயிக்கும் கலையரசிக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடப்பதும் வழக்கம்.

இந்த நிலையில் கருப்பையா தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்து ரகளை செய்ததாகவும், தனது காரை எடுத்துச் சென்று மோதி விட்டதாகவும் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் எம்.எல்.ஏ. கருப்பாயி.

இதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸார், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகணம் பகுதிக்குச் சென்று கருப்பையாவைக் கைது செய்து சென்னை கொண்டு சென்றனர்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
தாத்தா....இப்படிக் செய்தி தந்தால்...பிறகு...பொ.?.க்கி எடுத்தது என்பர்...கவனம் ஏற்கனவே பல பட்டப்பெயர் உங்களுக்கு...இன்னுமா...?!

தாங்களாப் போய் உள்ள நாட்டு தாவிற ஓடுற கதைகள் கொண்டு வந்து போடுவினம்...அது என்னவோ....தெரியாது.....அதில ஆபாசம் இல்லைப்போல....! சீ...அதையாரும் ஒரு பொம்பிளை பெயரில வந்துவிட்டா அல்லது பொம்பிளையளுக்கு வக்காளத்து என்று காட்டிக் கோன்டு வந்துவிட்டா...அதில ஆபாசமே தெரியாது போல....!
நல்ல கொள்கைகளும் படைப்புக்களும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
kuruvikal Wrote:தாத்தா....இப்படிக் செய்தி தந்தால்...பிறகு...பொ.?.க்கி எடுத்தது என்பர்...கவனம் ஏற்கனவே பல பட்டப்பெயர் உங்களுக்கு...இன்னுமா...?!

(நமது) சமுதாயத்துக்குள்ளை கொண்டுவந்து போட்டு போக்கிரி வேலைசெய்யிறதைவிட.. பொறுக்கிக்கொண்டுவந்து செய்தி - தகவல் களத்துக்குள்ளை போடுறது ஒண்டும் பாரதூரமான குற்றமல்ல.. தேவையெண்டால் முண்டிப்பார்க்கட்டும்.. முன் யன்னலாலை வந்தாலென்ன பின்யன்னலாலை வந்தாலென்ன.. முட்டிக்கு முட்டி தட்டி முகத்திலை குசினிக்குள்ளையிருந்தெடுத்த கரியும்பூசி அனுப்புவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#8
Quote:முட்டிக்கு முட்டி தட்டி முகத்திலை குசினிக்குள்ளையிருந்தெடுத்த கரியும்பூசி அனுப்புவன்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தாத்ஸ் கரி இப்ப எங்க கிடக்கு?...இப்ப எரிவாயு மின்சாரம்தான்...
மின்சார அதிர்ச்சி கொடுத்து அனுப்புவன் என்று சொல்லுங்கோ :wink:
Reply
#9
Kanani Wrote:

ஒருக்கா ஃபுள் பிளேமிலைவிட்டு பொங்கி வழியவிட்டால் கரி தன்ரபாட்டிலை வருகுது.. இதுகூட உங்களுக்குச்சொல்லித்தரவேண்டிக்கிடக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#10
உங்கடை மூளையை அதிலை வைச்சாலும் கரி வரும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#11
sOliyAn Wrote:உங்கடை மூளையை அதிலை வைச்சாலும் கரி வரும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன்ராப்பா சோழியன்.. அப்ப பலருக்கும் உள்ளதுபோலை காபோஹைற்ரேற் எண்டு செல்லுறியே..? பரவாயில்லை.. எரிபொருளாவெண்டாலும் பாவிக்கலாம். சிலரது சுட்ட மண்மாதிரியல்லே வரும்.. அதை வச்சு என்னசெய்யிறது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] ?
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)