Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒவ்வொருவருக்குள்ளும் பெண் ஒரு பகுதி!
#1
மராத்தி எழுத்தாளர் விஜயா ராஜ்த்யாñõ: ஆண், பெண் என்ற பேதம் தேவையற்றது என்பது என் உறுதியான கருத்து. ஆனால், பெண்களுடைய மனம், உடம்பு இரண்டுக்குமே சில தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. பெண்களின் உடம்பு வித்தியாசமானது, மனம் வித்தியாசமானது. அவர்களின் கலாசாரமே மாறுபட்டது.

என்னுடைய "விதேஹி', "கமல்' சிறுகதைகளில் ஆண் பெண் உறவை, செக்ஸ் உணர்வை, வேறு கோணங்களிலிருந்து சித்தரித்திருப்பதாக கூறுவதா? "விதேஹி' என்றால் உடம்பு குறித்தான பிரக்ஞையற்ற நிலை என்று பொருள்.


பிரசவ சமயத்தில் மனைவியுடன் கணவன் இருந்து, பிள்ளை பெறும் நிகழ்வைப் பார்த்து, தானும் அவ்வேதனையை, சிலிர்ப்பை அனுபவிக்கிறான். ஒரு படைப்பின் ரகசியம் அவனுக்குப் புரிகிறது. மனைவியினுள் தானும் அடக்கம், அவளும் தானும் ஓர் அங்கம் என்பது புரிந்து நெகிழ்வதைத் தான் "விதேஹி' நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. இக்கதை பெரும் வரவேற்பைப் பெற்றது.

"கமல்' கதையும் கணவன் மனைவி உறவை இன்னொரு கோணத்திலிருந்து சித்தரிப்பது தான். உடலுறவை விரும்பாத மனைவி, அது தேவைப்படும் கணவன் இருவரும் ஒரு சினிமாவுக்குப் போகின்றனர்.

படத்தில் வரும் காதல் காட்சியினால் உணர்ச்சி வசப்படுபவர்கள் வீட்டுக்கு வந்து உடலுறவு கொள்கின்றனர். நிஜமான காதலில் அன்றி, செயற்கையாக உறவு கொண்ட உணர்வில் மனைவி வருந்துவது தான் கதை. பல பெண்கள் கதாநாயகியுடன் தங்களை அடையாள படுத்திக் கொண்டது இக்கதையின் வெற்றி.

தன்னம்பிக்கையோடு தன் சுய அடையாளத்தைப் பெண்கள் தேடும் காலம் இது. ஒவ்வொருவருக்குள்ளும் பெண் ஒரு பகுதியாக இருப்பது உண்மை எனும்போது, நான் ஏன் அவள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் சிந்திக்கக்கூடாது? இருப்பினும், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மட்டுமே நான் எழுதுகிறேன் என்பது தவறான கருத்து.

என்னை ஒரு பெண்ணியவாதி என்று முத்திரை குத்துவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஆண்களை எதிரிகளாகக் கருதுவதில்லை. ஒரு பெண்ணின் முழுமையான வளர்ச்சியில், விடுதலையில், ஆண்களின் பங்களிப்பு என்ன என்று உணர்ந்தவள் நான். ஆணும் பெண்ணும் பரஸ்பர மரியாதையுடன் வாழ்வதுதான் எல்லாவிதத்திலும் நல்லது.

நன்றி: தினமலர்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)