Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதினம் - தமிழ்நெட் செய்திகள்
#1
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலைடுத்து பெருமளவான வாசகர்கள் இணையத் தளங்களை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருப்பதால் புதினம் மற்றும் தமிழ் நெட் இணையத் தளங்களைப் பார்ப்பதே மிகக்கடினமாக இருக்கிறது.

எனவே அவ்வுூடகங்களிற்குச் செல்லும் வாசகர்கள் அச் செய்திகளை உடனுக்குடன் இங்கே பதிவு செய்யுங்கள்.

நன்றி
<b>
?
- . - .</b>
Reply
#2
2ND LEAD
Sri Lankan Kfir jets bomb LTTE controlled area in Trincomalee

[TamilNet, April 25, 2006 13:00 GMT]
Sri Lankan Kfir jets have been bombing LTTE controlled Sampoor, Ilakkanthai and Kattaiparichchan villages in Muttur, Trincomalee district from 5:00 p.m Tuesday. Casualty details are not available at the moment. There are also reports about multibarrel artillery fire. Sri Lankan Dvora attack crafts and gunboats were surrounding the LTTE controlled coastal areas in Trincomalee, civilian sources said.

With the Colombo bomb attack Tuesday, the duration of curfew has been advanced to 4 p.m.till 6 a.m. next day, police said.

Eighteen-hour curfew has been clamped down on Trincomalee district with effect from Tuesday evening at 4.p.m. about two hours after the bomb attack on Sri Lanka Army Commander in Colombo, sources said.

Security officials in Trincomalee decided to advance the duration of the curfew from 4 p.m. in the three police divisions, Trincomalee Town, Uppuveli and Chinabay in Trincomalee district on receipt of the information of the bomb attack on SLA commander, police said.

Twelve-hour curfew from 6 p.m. to 6 a.m. imposed in Trincomalee following April 12 bomb explosion in Trincomalee town and the violence, which resulted in the death of about twenty civilians, and the destruction of about 32 business houses belonged to Tamils and Muslims was later limited for eight hours later from 8 p.m. till 4 a.m.
Reply
#3
விடுதலைப் புலிகள் மீது முப்படையினர் தாக்குதல்: உல்ப் ஹென்றிக்சன் தகவல்
[செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2006, 20:10 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா முப்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் முதலில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர்.

கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிற பதில் நடவடிக்கை இது என்று நம்புகிறோம் என்றார் உல்ப் ஹென்றிக்சன்.

திருகோணமலை கடற்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து படைத்தரப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பிற்பகல் நடத்திய தாக்குதல் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். அரசாங்கமும் செயற்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு வருவார்கள் என்று நம்புகிறோம் என்றார் பாலித கோகென்ன.
Reply
#4
யாழில் இரு கைக்குண்டுத் தாக்குதல்: இரு படையினர் படுகாயம்
[செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2006, 19:49 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். கோண்டாவில் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைத்தரப்பினர் இருவர் படுகாயமடைந்தனர்.


சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த ஆனைப்பந்திச் சந்திப்பகுதியிலும் படையினர் மீது கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் படைத்தரப்பில் ஒருவர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.

ஜெகதீஸ்வரி (வயது 20), கந்தையா விமலன் (வயது 21), அருட்செல்வம் சாஜிராஜ் (வயது 15) ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Reply
#5
6 ஆம் இணைப்பு) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி உட்பட 29 பேர் படுகாயம்- 8 பேர் பலி
[செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2006, 14:28 ஈழம்] [ச.விமலராஜா]
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மருத்துவமனையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் போல் வந்த தற்கொலைதாரிதான் இத்தாக்குதலை நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பில் கூறப்படுவதாவது:

இராணுவத் தளபதியினது வாகனம் தன்னை கடந்து செல்லும் வரையில் பெண் தற்கொலைதாரி வெளிப்புற வாயிலில் காத்திருந்தார்.

பிற்பகல் உணவுக்காக சரத் பொன்சேகா புறப்பட்டுச் சென்ற போது அவரது வாகனத்தை நெருங்கிய அப்பெண் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 29 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு தேசிய மருத்துவமனையில் படுகாயங்களுடன் சத்திர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த மேஜர் பியல் விக்கிரமதுங்கவும் கொல்லப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு படைத்தரப்பினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலையடுத்து யாழ். செல்லும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதிகளில் ஒருவரான நந்தா மல்லவராச்சியும் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட 14 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதிக்கு அவசர சத்திர சிகிச்சை செய்த பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட்டு காவல்துறையினர் மற்றும் பகுப்பாய்வினருடன் விசாரணை நடத்தினார் என்று இராணுவத்தரப்பினர் தெரிவித்தனர்.

சரத் பொன்சேகாவுக்கு சத்திர சிகிச்சை முடிவடைந்து அவர் உடல்நிலை தேறிவருவதாகவும் அவருக்கு வயிற்றிலும் மார்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அதிகாரிகள் மாலை 6 மணியளவில் தெரிவித்த தகவலின்படி சரத் பொன்சேகா அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி,

கோப்ரல் வருசவிதன, லான்ஸ் கோப்ரல் ஓ.கே.டி.பி.விராஜ் மற்றும் தேவ சுரேந்திர, நிலுக பிரியங்கானி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது' என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உறவை இத்தாக்குதல் பாதிக்கும். எதிர்காலப் பேச்சுக்களை சீர்குலைக்கும் என்றார்.

"இருதரப்பினரும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல அமைதி முயற்சிகளில் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்புத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:

கொழும்பில் பிற்பகலில் எதிர்பாராத பாரிய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையிலும் நாங்கள் அமைதி முயற்சிகளில் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

ஜெனீவாப் பேச்சுக்களில் பங்கேற்பதைத் தவிர்க்க தேவையற்ற காரணங்களை விடுதலைப் புலிகள் கூறிவந்தனர். அவர்கள் கூறிவந்ததன் நோக்கத்தை ஒவ்வொருவரும் இப்போது புரிந்து கொள்ள முடியும்.

பிரச்சனைக்கு யுத்தம் தீர்வு அல்ல. அமைதி முயற்சிகளின் மீது மகிந்த ராஜபக்ச நம்பிக்கை கொண்டுள்ளார். ஆகையால் சர்வதேச சமூகம்தான் இப்போது எமக்கு உதவ வேண்டும் என்றார்.

கொழும்பு குண்டுவெடிப்பையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்தினார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை உடனே செய்யுமாறு அரச தலைவர் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

நகரின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு இரகசியப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Reply
#6
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
Reply
#7
உடனடி செய்திகளை http://www.worldtamilpress.com//index.php என்ற இணையத்தின் ஊடாகவும் அறிய முடியும்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)