Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனித் தமிழ் விசைப்பலகை - திருப்பம்
#1
வணக்கம் ,
தமிழீழத்திலிருந்து தமிழன் எழுப்பிய தமிழ் விசைப் பலகை சம்பந்தப் பட்ட பிரச்சனையை பார்த்த பின்னர் என்னுடைய கருத்தையும் கூறலாம் என்று நினைக்கிறேன்.

தமிழன், Bamini வகை விசைப் பலகை தான் தமிழைக் காப்பாற்றும் என்று நம்புகிறார் போலிருக்கிறது.
(தனிக்குறியீட்டுக்கு மாறுவதில் அவருக்கு பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன்.Bamini வகை விசைப் பலகையை பயன்படுத்தி தனிக்குறியீட்டு எழுத்துக்களை தட்டலாம் என்பதே அவரது ஆலோசனை.)

எனைப் பொறுத்தவரையில் பழைய இஸ்கிவகைக்கும் TSC இற்கும் இடையிலான வித்தியாசம்,

1

bamini இல் உயிர்மெய்யெழுத்துக்களை தட்டுவது இலகு ( பெரும்பாலும் ஒருவிசையை அழுத்துவதன் மூலம் உயிர்மெய்யெழுத்தை தட்டலாம்.)

TSC இல் மெய்யெழுத்துக்களை தட்டுவது இலகு.(உயிர்மெய்யெழுத்துக்களுக்கு இரண்டு விசைகள் அழுத்தவேண்டிவரும்)

2

bamini இல் எழுத்துருக்கள் சித்திரங்களாக இருப்பதால் எழுத்துருக்கழை உருவாக்குவதற்கு தனியான கணினி நிகழ்ச்சிகள் தேவையில்லை.

TSC இற்கு தேவை.

3

பாமினி வகையில் ஆங்கில எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டு அதற்கு சம்பந்தாசம்பந்தமில்லாத தமிழெழுத்துக்களை கற்பனை செய்தவண்ணம் தட்டுகிறோம்.

TSC இல் இலகுவாக ஆங்கில எழுத்துக்களின் ஒலிக்கு சமமான தமிழெழுத்துக்களை தட்டுகிறோம்.


தமிழ் வசனங்களில் உயிர்மெய் எழுத்துக்கள் தான் அதிகம் எனவே பாமினிதான் இலகு என்று யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் பாமினியில் கூட கொம்புகள், அரவுகளை தனித் தனியே தட்டவேண்டியிருக்கிறது.

நாளைய உலகம் முழுவதும் தனிக்குறியீட்டுக்கு மாறிவிட்டபிறகு தனியான கணினி நிகழ்ச்சி என்பது இன்றியமையாததாகிவிடும்.( USP10.dll)

மூன்றாவது விஷயம் தான் தமிழ் தாஸர்களை பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது.
உங்கள் "காலை புலர்ந்த" பிறகு, "சங்ககாலம் திரும்பிய " பிறகு நீங்கள் விசைப் பலகையில் தமிழ் எழுத்துக்களை பொறிக்கும் வரை இந்தத் தலைமுறை வருந்திச் சுமந்துதான் தமிழில் தட்டவேண்டுமா?
பாமினி வகை விசைப்பலகையை வைத்துக் கொண்டு நான் ஒரு சஞ்சிகை நடத்தப் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்.
வெள்ளைக்கார சின்னப் பிள்ளைகூட இலகுவாக தட்டச்சு செய்துவிடுகிறது. தமிழர்களுக்குத்தான் தட்டச்சுக்கென நீண்ட "பயிற்சிக்காலம்" தேவைப் படுகிறது.
இந்த நிலை தமிழை வேகம் குன்றச் செய்யாதா ?

உங்களைப் போன்ற ஒருசிலர் பாமினியில் தட்டுவதில் வித்துவம் உடையவர்களாக இருக்கலாம். நான் "எல்லோரையும்" மனதில் வைத்தே எழுதுகிறேன்.

விசைப் பலகையில் தமிழெழுத்துக்கள் பொறிக்கின்ற காலத்தில்,

R-ர்
Y-ய்
U-உ
O-ஒ
P-ப்
K-க்
M-ம்
N-ன்

என்று பொறித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுகிறது.க்+உ=கு என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த அடிப்படை இலக்கணம்.
அதுவரை காலத்துக்கும் தமிழின் வேகத்தை TSC வகை கூட்டும்.

தமிழன் போன்றவர்களின் கருத்துக்களெல்லாம் "நீண்ட காலப் புனிதங்களை " தகர்க்க மறுக்கும் வெறும் உளவியல் பிரச்சனை மாத்திரமே.

[ விவாதங்களைத் தாண்டி, அவரவர் தமக்கு இலகுவான விசைப் பலகையை பயன்படுத்திக் கொண்டு, converters ஐ பயன் படுத்தி மாற்றிக் கொள்வதுதான் இன்றைய நாளுக்கு தமிழர்களுக்கான ஒரே மாற்றுத் திட்டம்.]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)