11-09-2003, 07:07 PM
கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கோன் ஐஸ் சோனியா அகர்வால். "காதல் கொண்டேன்" படத்தின் மூலம் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கும் இவர், இப்போது பயங்கர பிஸி. தெலுங்கு படத்தில் "மாட்லாட" ஹைதராபாத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தினோம். அவசரத்திலும் அவர் அவசியமானதை விட்டுவிடாமல் பேசினார்.
![[Image: album_pic.php?pic_id=59]](http://www.yarl.com/forum/album_pic.php?pic_id=59)
இனி அவர்...
பஞ்சாப் மாநிலத்திலுள்ள சண்டிகரைச் சேர்ந்தவள் நான். அளவான குடும்பம். அப்பா, அம்மா, நான், தம்பி மட்டும்தான். எனக்குச் சின்ன வயதிலிருந்தே தீராத ஆசை ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? பேண்ட், ஷர்ட் போட்டுக்கொள்வது. என் தம்பியின் பேண்ட், ஷர்ட்டை எடுத்துப் போட்டுக் கொள்வேன். இது அவனுக்குப் பிடிக்காது. கழற்றச் சொல்வான். சின்ன விஷயம்... ஆனால், பெரிய சண்டையாகிவிடும்.
அம்மா ஆஷா அகர்வால்தான் எனக்கு சப்போர்ட். நான் சினிமா நடிகையானது, கைநிறைய சம்பாதிப்பது எல்லாமே அவர் தந்த ஊக்கத்தினால்தான்.
மார்ச் 28_ம் தேதி எனக்குப் பிறந்தநாள் வரும். அன்றைய தினத்தை நினைத்தால் துக்கமாக இருக்கும். எனக்கு ஒரு வயது கூடிவிட்டதே என்று நினைப்பேன். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சின்ன சின்ன லட்சியங்களை வைத்துக்கொள்வேன். அடுத்த பிறந்தநாள் வருவதற்குள் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்று தீர்மானம் போட்டு, அதை எப்பாடுபட்டாவது செயல்படுத்திவிடுவேன். காரணம், எனக்கு வைராக்கியம் அதிகம்.
நான் ஒரு சினிமா நடிகை என்பதை நினைக்கும்போது, எனக்குப் பெருமையாக இருக்கும். நல்ல ஆரம்பம் கிடைத்துவிட்டால் நிறைய இளைஞர்களின் கனவுக் கன்னியாகிவிடலாம். நமக்காக ஏங்குவார்கள். நம்மிடம் பேசமாட்டாரா என்று தவிப்பார்கள். ஆட்டோகிராஃப் கேட்பார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் உரசி, "அந்த நடிகை மீது உரசினேன். இடித்தேன்" என்று சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்." இந்த கிரேஸ் சினிமாவிலுள்ள ஹீரோவிற்கும், ஹீரோயினுக்கும் மட்டுமே கிடைக்கும். பணம், கார், எதிர்பார்க்காத சம்பளம். வி.வி.ஐ.பிக்களின் நட்பு எல்லாம் நிமிஷமாய் தேடி வந்துவிடும். நான் சினிமாவிற்கு வந்து சில வருடங்களே ஆனாலும், அனுபவம் நிறைய கிடைத்துவிட்டது. அதில் கசப்பான அனுபவமும் உண்டு, இனிப்பான நினைவுகளும் உண்டு.
மாடலிங் மூலம் எனக்கு இந்தக் கதாநாயகி வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தமிழில் "காதல் கொண்டேன்" படத்தில் அறிமுகமாகி "சக்ஸஸ்" "கோவில்" என்று மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டேன். என்னுடைய முதல் ஹீரோ தனுஷ். அவர் ரொம்பவும் ரிசர்வ்டு. ஏதாவது கேட்டால் மட்டுமே பேசுவார். ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்று டைரக்டர் குரல் கேட்டுவிட்டால் ஷாட்டில் பிரமாதப்படுத்திவிடுவார்.
"சக்ஸஸ்" படத்தில் ஜூனியர் சிவாஜி துஷ்யந்த் ஹீரோ. இவர் ரொம்பவும் ஜாலி டைப். மிகப்பெரிய நடிகர் சிவாஜியின் பேரன் என்ற பந்தா துளியும் இல்லாமல் யூனிட்டிலுள்ள எல்லோரிடமும் சகஜமாக பழகும் நல்ல டைப். "கோவில்" படத்தில் ஜோடியாக நடிக்கும் சிம்பு, வெரி நைஸ். கலகலப்பிற்குப் பஞ்சமில்லை. ஏதாவது வித்தியாசமாகச் செய்து, தன் ரசிகர்களை அசத்த வேண்டும் என்கிற வெறி அவரிடம் ரொம்ப இருக்கிறது. என்னிடம் ஏதாவது கிண்டலாக பேசிக்கொண்டேயிருப்பார். அதெல்லாம் சொல்ல முடியாது. (சிரிக்கிறார்)
என்னைப் பார்க்க வரும் மீடியாக்காரர்கள் "உங்கள் திருமணம் எப்போது? அரேன்ஜ்டு மேரேஜா, இல்லை லவ் மேரேஜா?" என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் "ஏன் இப்போதே திருமணம் செய்து கொள்ளச் சொல்லி என்னை விரட்டிவிடலாம்னு பார்க்கிறீர்களா? நடித்து இன்னும் நிறைய பேரைக் கஷ்டப்படுத்த வேண்டாமா?" என்பேன். எனக்குத் திருமணம் எப்போது என்று தெரியாது. இப்போது அதற்கு அவசரமில்லை. அவசியமும் இல்லை.
எனக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம். எனக்கு இன்னும் குருபலன் வரவில்லை. கல்யாண கனவுகளுக்கு தற்சமயம் அவசரமில்லை. ஆனால், வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் நிறையவே உண்டு. இந்த எதிர்பார்ப்பு எனக்கு மட்டுமல்ல... எல்லா பெண்களுக்கும் இருக்கும். நிறைய காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். நிஜக் காதலர்களையும் சந்தித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை காதலுக்கு அடிப்படையே பரஸ்பர நம்பிக்கை,பாசம், அன்பு, புரிந்துகொள்ளல், விட்டுக் கொடுத்தல் ஆகியவைதான்.
சரி, என் விஷயத்திற்கு வருகிறேன்.
எனக்கு வரும் கணவர் வெளியே செல்லும்போது கோட், சூட், டை அணிய வேண்டும். ட்ரிம்மாக இருக்க வேண்டும். ஆனால், வீட்டிற்கு வந்தவுடன் தலைகீழாக மாறிவிட வேண்டும். கேஷ§வல் டிரஸ் அணிந்து வெற்று உடம்புடன் என்னிடம் பேச வேண்டும். அவரது மார்பில் என் விரல் நகங்களால் கோலமிட்டபடி அவர் பேசுவதை நான் கேட்க வேண்டும்.
ஆபீஸில் நடந்த நிகழ்ச்சிகள், கேட்ட ஜோக்குகள் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். "போகும்போது ஒரு பொண்ணைப் பார்த்தேன். வாவ்... என்ன அழகு" என்று வெளிப்படையாகப் பேசுபவரைத்தான் எனக்குப் பிடிக்கும்.
அவர் பிசினஸ்மேனாக இருந்தால் நல்லது. நான்கைந்து கார்கள் சொந்தமாக இருந்தாலும், டூவீலர் கண்டிப்பாக அவரிடம் இருக்க வேண்டும். அவர் வண்டி ஓட்ட.. நான் பின்னால் அமர்ந்தபடி அவரை இறு..க்...கி... அணைத்து பேசிக்கொண்டே ஜாலியாக ஊர் சுற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்Ê!
அவர் குண்டாகவும் இருக்கக்கூடாது.. ஒல்லியாகவும் இருக்கக்கூடாது. மீடியமாக, கொஞ்சம் சதைப்பிடிப்புடன் உயரமாக இருக் வேண்டும். ஷாருக்கான் போல ஹேர் ஸ்டைல், ஷாருக் போலவே சிரிக்கும் கண்கள்... அடர்த்தியான மீசை.. கழுத்தில் மெல்லிசாய் ஒரேயரு செயின்.. ஆனால் விரல்களில் மோதிரம் கண்டிப்பாகக் கூடாது...
சுருக்கமாகச் சொன்னால், விக்ரமின் உடல்,ரஜினியின் கண்கள், கமலின் மீசை, ஷாருக்கின் முகம்.. இவையெல்லாம் சேர்ந்த கலவையாக எனக்கு வரும் கணவர் இருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளெல்லாம் உங்களிடம் இருந்தால், என்னைப் பற்றி தாராளமாகக் கனவு காணலாம். கண்களில் பரவசம் பொங்கச் சொல்லி முடித்தார் சோனியா அகர்வால்.
நன்றி : குமுதம்

................