03-24-2004, 09:32 AM
'சர்வதேச சர்வ-நம்பிக்கை"
<i>திரு. ச.வி. கிருபாகரன் (பொதுச் செயலாளர் தமிழர் மனித உரிமைகள் மையம் பிரான்ஸ்) 19-03-04 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமை ஆணைக்குழுவில்,
ஆற்றிய உரை.</i>
'அமெரிக்க ஐனாதிபதியாக இருந்த திரு. டபிள்யுூ. வில்சன் அவர்கள் முதன் முதலாக 1918ம் ஆண்டு ~சுயநிர்ணய உரிமை| என்ற சொற்பதத்தை அமெரிக்க காங்கிரசில் ஆற்றிய உரைகளில் பாவித்தார்.
திரு. வில்சன் கூறியதாவது, ~சுயநிர்ணய உரிமை| என்பது வெறும் பேச்சல்ல, இது ஓர் நடைமுறைக்கான அடிப்படைத் தத்துவம். இதை முன்னெடுத்துச் செல்லாது அலட்சியம் செய்யும் நாடுகள் ஆபத்தையே நோக்குவார்கள்.
சுயநிர்ணய உரிமை என்ற விடயம் சட்ட ரீதியாக மனித உரிமைகளுடன் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருந்தாலும் இன்றய காலகட்டத்தில் இது ஓர் அரசியல் பிரச்சினையாகவே நோக்கப்படுகிறது.
உலகில் சுயநிர்ணய உரிமைக்கு தகுதி வாய்ந்த மக்கள், தமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை நடத்தும் பொழுது அவையாவும் ஆயுத பலத்தால் கொடுரமான முறையில் நசுக்கப்படுகிறது.
சுயநிர்ணய உரிமையின் கடுமையான நியாயவாதியாக இருந்த அமெரிக்க ஐனாதிபதி அவ்வேளையில் கூறியதாவது, உலகில் ஐனநாயகம் காப்பாற்றப் படவேண்டும். ஆகையால் சமாதானம் என்பது அரசியல் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே காணப்படுகிறது.
சுயநிர்ணய உரிமை மிகவும் தெளிவாக ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்கள், சாசனங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை நாம் இவ் ஆணைக்குழுவில் நீண்டகாலமாக கேட்டுவருகிறோம். இவை யாவும் தமிழ்மக்கள் தமது நியாயமான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்ததிற்கு எதிராக சிறிலங்கா அரசின் கொடுரமான போக்கே காரணம்.
சர்வதேச சட்டங்களின் பிரகாரம் சுயநிர்ணய உரிமை என்பது மக்களுக்கு உரியது. தனிப்பட்ட குழுவிற்கோ அல்லது நபருக்கோ உரியதல்ல.
இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் ஓர் நீண்ட சரித்திரத்தை, கலாச்சாரத்தை, தமக்கான ஒரு மொழியை, அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட ஓர் தாயக புூமியைக் கொண்டவர்கள். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து (1948) அரசியல் சாசனத்திலிருந்த பாதுகாப்புக்களையும் இழந்து, |தமிழர்| என்ற அடையாளத்தையும் இழக்கத் தொடங்கியுள்ளனர்.
சிறிலங்காவின் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம், சிங்கள-தமிழ் அரசியல் தலைவர்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட இரு ஒப்பந்தங்கள் (1957, 1965) கைச்சாத்திட்ட சிங்கள பிரதமர்களாலேயே கிழித்தெறியப்பட்டன. 1972ம் ஆண்டு கல்வி தரப்படுத்தல், அத்துடன் நடைபெற்ற பல இனக்கலவரங்கள் யாவும் அவ்வேளையில் தமிழ் மக்கள் சாத்வீகமான முறையிலேயே எதிர்த்து போராடினார்கள். ஓர் புத்திஐPவியின் அறிக்கையின்படி, தமிழர்களின் தாயக புூமியில் 50 வீதமான பிரதேசங்கள் சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுடைய முப்பது வருடகால சாத்வீகப் போராட்டங்கள் சிறிலங்காவின் அரச படைகளினால் வன்முறை மூலம் நசுக்கப்பட்டது. தமிழர்களுடைய சாத்வீகப் போராட்டங்கள் எந்தவிதத்திலும் பயனற்றுப்போன வேளையில், தமிழ் மக்கள் தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கும், ஆயுதப் போராட்டத்திற்குமான உணர்வுகளை தமிழ் மக்களுக்கு கொடுத்தன.
கடந்த இருபது வருடகாலமாக சிறு சிறு இடைநிறுத்தங்களுடன் இரத்தக்களரிகளுடன் யுத்தம் நடைபெற்றது.
கைது, சித்திரவதை, பாலியல் வல்லுறவு, கொலை, இடப்பெயர்வுகள், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் போன்றவை தமிழ்மக்களின் சோக வாழ்வாகியது.
கிருபாகரன் மேலும் கூறியதாவது, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மூன்றில் இரண்டு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெறுகிறது.
நோர்வே அரசின் முன்னெடுப்புக்களினால், 2002ம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இவற்றில் இணக்கம் கண்டவற்றை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தத் தவறிய காரணத்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் தற்காலிகமாக பேச்சுவார்த்தைகளிலிருந்து இடைநிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் முதலாம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தனர். இத்தீர்வுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் வேறு பல நாடுகளும் வரவேற்றிருந்தனர்.
ஆனால் நவம்பர் நாலாம் திகதி சிறிலங்காவின் ஐனாதிபதி, மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசம் எடுத்துக் கொண்டதிலிருந்து அரசியல் சர்ச்சரவுகள் அரசுக்கும் ஐனாதிபதிக்கும் இடையில் ஏற்பட ஆரம்பித்தது. இறுதியில் பாராளுமன்றமும் கலைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டம், ஆட்சியில் உள்ளவர்களினால் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
சிறிலங்காவில் இது ஓர் கவலைக்குரிய விடயம். ஒவ்வொரு வேளையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டக்கூடிய சூழ்நிலை ஏற்படும்பொழுது, ஆட்சி செலுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் முரண்பட்டு குழப்பிவிடுவார்கள்.
இதனை சர்வதேச சமூகம் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு. கோபி அனான், இவ் ஆணைக்குழுவின் 55 ஆவது கூட்டத்தொடரில் (1999) பேசும்பொழுது கூறியதாவது, 'இவ் ஐ.நா. சபை அரசாங்கங்களின் அங்கத்துவத்தை கொண்டபொழுதும், மக்களைப் பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. நான் இப்பதவியில் இருக்கும் வரை மக்களுக்கே எமது செயற்பாடுகளில் முக்கியத்துவம் கொடுப்பேன். நாட்டின் ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை எந்த அரசாங்கங்களும் மீற முடியாது. ஒருவர் பெரும்பான்மையாக இருந்தால் என்ன, சிறுபான்மையாக இருந்தால் என்ன அவருடைய அடிப்படை சுதந்திரமும் மனித உரிமைகளும் என்றும் பாதுகாக்கப்படும்."
தலைவர் அவர்களே, எத்தனையோ இனப்பிரச்சனைகள் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னேற்பாடுகளினால் தீர்க்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழு இவ் விடயங்களில் பெரும் பங்கும் வகித்துள்ளது.
இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை மீண்டும் அடைவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னெடுப்புக்கள் அவசியம் எனக் கூறவிரும்புகிறேன்.
நன்றி
தமிழ்நாதம்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->