Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரோஜா
#1
<b>ரோஜா</b>

<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>

<img src='http://www.yarl.com/forum/files/rose.gif' border='0' alt='user posted image'>

காதல் மலரே!

உன்னிடம்
அணைக்கின்ற அன்பும் இருக்கின்றது!
எதிர்கின்ற கோபமும் இருக்கின்றது!
உன் மென்மையை அனுபவிப்பவர் கண்டு
மயங்கி விடாதே!!!
உன் எதிர்ப்பைக் காட்டி விடு!
இல்லையென்றால் நீ அழிக்க படுவாய்!!!


Reply
#2
நறுக் கவிதை. ம் அருமை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#3
அழகான மலரே...
அந்தி சாய்ந்தும்
முகம் மிளிரும்
இயற்கையின் கொடையே....
மனிதரின் வார்த்தை
வதையில் சிக்கி
நீயும் சீரழிகிறாய்....!
உனக்கு உவமேயமாவதெல்லாம்
உனக்கு ஈடாமோ...?!
முழுப் பொய்...!
நீ நீதான்
அவை அதுதான்...!
தங்களுக்கு இல்லாததை
எடுப்பாய்க் காட்ட
உன்னைத் துணைக்கிழுத்து
சீரழிக்கிறார்....!
நாம்
உன்னை நேசிப்போம்
பொய்களை பிதட்டல்களையல்ல...!
வருத்தம் கொள்ளாதே...
ரோஜாவே...முற்றத்து மலரே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தாமரையின் கவிதை அருமை.. வருமுன் காத்தலை கடைப்பிடிக்கவேண்டியதுதான். குருவியின் பதிலும் அருமை.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)