Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சமாதானத்தைப் பாதுகாப்பது எப்படி?
நிலாந்தன்
கொழும்பில் சமாதானம் அதிகம் சோதனைக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழலில் சமாதானத்தை மெய்யாகவே பாதுகாப்பது யார் என்ற கேள்வி முன்னெப்பொழுதையும் விட வலிமையானதாக மாறிவருகிறது.
கடந்த சில வாரங்களாகக் களநில வரங்களைக் கூர்ந்து கவனித்துவரும் எவருக்கும் தெரியும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகியபின் யுத்த நிறுத்தம் ஒப்பீட்டளவில் அதிக சிரத்தையோடு கடைப்பிடிக்கப்படும் காலம் கடந்த சில வாரங்கள்தான் என்பது.
யுத்த நிறுத்தம் முறிக்கப்பட்டதற்கான பழியை ஏற்க ஒருவரும் தயாரில்லை என்பதால் முன்னெப்பொழுதையும்விட அதிக விழிப்போடு யுத்த நிறுத்தம் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.
யுத்த நிறுத்தம் உடைக்கப்பட்டதற்கான பழியை ஏற்க ஏன் ஒருவரும் தயாரில்லை என்ற கேள்விக்கான விடையே, சமாதானத்தை யார் மெய்யாகவே பாதுகாக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடையையும் தரக்கூடியதாயிருக்கும்.
மெய்யாகவே, இன்று இலங்கைத்தீ வின் சமாதானத்தைப் பாதுகாத்துக்கொண்டிருப்பது மேற்கு நாடுகளே.
இதில் அவர்களிடம் ஒரு முக்கோண அணுகுமுறை உண்டு.
இதில் ஒரு கோணம், சமாதானத்தின் நண்பனைப் போலத்தோன்றும் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பது.
இரண்டாவது கோணம், சமாதானத்தின் எதிரிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது.
மூன்றாவது கோணம், சமாதானத்தின் பங்காளிகளாயிருக்கும் புலிகளை அரவணைப்பது.
இந்த மூன்று கோணங்களுக்குமிடையிலான வலுச்சமநிலையைக் குலையவிடாது பேணுவதன் மூலம்தான் இலங்கைத்தீவின் சமாதானத்தைப் பாதுகாக்கமுடியும்
ஆனால் சனாதிபதி சந்திரிகா சில வாரங்களுக்குமுன்பு ரணிலின் அமைச்சரவையில் கைவைத்தபின் இந்த முக்கோண அணுகுமுறையின் சமநிலை தளம்பத்தொடங்கி விட்டது.
ரணிலுக்கும், சந்திரிகாவுக்கும் இடையிலான வலுச்சமநிலையைக் குலையவிடாது பேணுவதில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்ததின் விளைவே சந்திரிகா சமாதானத்தில் கைவைத்தது என்பது.
இங்கே அவர் சமாதானத்தில் கைவைத்தார் என்பதை விடவும் ரணில் செய்த சமாதானத்தில் கைவைத்தார் என்பதே பொருத்தமாயிருக்கும்.
இலங்கைத்தீவுக்குச் சமாதானத்தைத் தவிர வேறெந்தத் தெரிவையும் விட்டுவைக்க மேற்குநாடுகள் தயாரில்லை என்பது சந்திரிகாவுக்கும் நன்கு தெரியும். எனவே அவர் தன்னை சமாதானத்தின் எதிரியாக வெளிக்காட்டுவதன் மூலம் மேற்கு நாடுகளுடன் நேரடியாக மோதத்தயாரில்லை.
இது மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை சாதகமான ஓரம்சம். மற்றது புலிகள் சமாதானத்துக்கான தமது பொறுப்பை மதித்து நடப்பது.
இந்த இரண்டு அம்சங்களும்தான் சமாதானம் இன்னமும் உடைந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருப்பவை.
இந்த இரண்டு அம்சங்களையும் பேணவும், பாதுகாக்கவும் மேற்குநாடுகள் விரும்புகின்றன.
அண்மையில் கிறிஸ் பற்றனின் வன்னி விஜயம் கொண்டு வந்த செய்தியும் இதுதான்.
கிறிஸ் பற்றனின் வன்னி விஜயம் கொழும்பில் கடும் எதிர்ப்பைப் பெற்றிருந்தது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் வன்னிக்கு வந்த வேறெந்த மேற்கத்தைய ராஜதந்திரிக்கும் இப்படியொரு எதிர்ப்புக் காட்டப்பட்டதில்லை. ஆனால் கிறிஸ் பற்றன் எதையும் பொருட்படுத்தவில்லை. வன்னிக்கு அவர் கொண்டுவந்த பிறந்தநாள் பரிசு சந்திரிகாவுக்கும் ஏனையோருக்கும் ஒரு செய்தியைத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. அதாவது சமாதானத்தின் நண்பர்களாயிருக்கும் புலிகளை மேற்கு நாடுகள் எதுவரை மதித்து நடக்கத்தயார் என்பது.
அவருடைய வன்னி விஜயம் செப்ரம்பர் மாதமே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஆனாலும் கடந்த சில வாரங்களாகக் கொழும்பில் தோன்றியுள்ள தலைமைத்துவ வெற்றிடத்தின் பின்னணியில் அவருடைய விஜயம் புதிய சில செய்திகளையும் கொண்டுவந்திருக்கும் என்று நம்ப இடமுண்டு.
அது கொழும்பில் சில இரசாயன மாற்றங்களைக்கொண்டு வந்திருப்பது போலவும் தோன்றுகிறது. சந்திரிகா இப்பொழுது சிறிது இறங்கி வருவதுபோலத் தோன்றுகிறார்.
ஆனாலும் அவரை நம்பமுடியாது. மேற்கு நாடுகளின் முக்கோண அணுகுமுறையின் சமநிலையைக் குலைக்கும் விதத்தில் ஒரு கோணத்தை உடைத்தவர் அவரே.
கடந்த சில வாரங்களாக அவர் மிகவும் குழம்பிப்போய்க் காணப்படுகிறார். முன்பின் முரணாகக் கதைத்துவருகிறார். அவரை நம்பி காரியத்தில் இறங்கமுடியாத அளவுக்கு அவருடைய நிதானம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
எனவே மேற்கு நாடுகள் தமது முக்கோண அணுகுமுறையில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது. குறிப்பாக, இந்த முக்கோணத்தில் இதுவரையும் தளம் பாதிருக்கும் ஒரு கோணம் புலிகளின் தரப்பே.
புலிகளைக் கையாள்வதில் மேற்கு நாடுகள் ஒருவித இரட்டை அணுகுமுறையைத்தான் இதுவரை கடைப்பிடித்து வருகின்றன.
இது இப்பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் கூறப்பட்டிருக்கின்றன.
அதாவது ஒரு புறம் சமாதானத்தின் பங்காளிகளாயிருக்கும் புலிகளை அரவணைப்பது, இன்னொருபுறம் புலிகளின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் விதத்தில் சில நாடுகளில் புலிகளின் மீதான தடையை விலக்காது வைத்திருப்பது.
இதில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பிரதான நாடுகள் புலிகளின் விசயத்தில் கண்டிப்பாக நடந்துகொள்வது போல ஒரு தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருக்க ஏனைய ஐரோப்பிய நாடுகள் புலிகளின் விசயத்தில் அதிகம் மென்மையாக நடந்து வருகின்றன.
கிறிஸ் பற்றனின் வன்னி வருகை இந்த அணுகுமுறையில் சில புதிய திருப்பங்களைக் காட்டுவது போலிருக்கிறது. அவருடைய வருகை இதுவரை வன்னிக்கு வந்த எல்லா மேற்கத்தைய ராஜதந்திரிகளினதும் விஜயங்களுடன் ஒப்பிடுகையில் அதிக முக்கியத்துவமுடையது.
கிறிஸ் பற்றன் முன்பு கொங்கொங்கின் ஆளுநராயிருந்தவர், அதாவது ஆசியாவில் பிரிட்டனின் கடைசிக் கொலனியின் கடைசி ஆளுநரவர். கொங்கொங் பிரிட்டனிடமிருந்து சீனாவுக்கு கைமாற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு காலகட்டத்தில் அவருடைய பாத்திரம் மிகவும் நேர்த்தியானதாகவும் நிதானமானதாகவும் து}ர நோக்குடையதாகவுமிருந்ததாகக் கூறப்படுகிறது. இப்பொழுது ஐரோப்பிய யுூனியனின் வெளிவிவகார ஆணையாளராக அவருடைய வருகை அதுவும் சமாதானம் தளம்பிக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் அவர் வன்னிக்கு வந்தமை என்பது மேற்கு நாடுகள் புலிகளை கூடுதலாக அரவணைக்கத் தயார் என்ற செய்தியையும் சொல்லாமல் சொல்லுகிறது.
தமது முக்கோண அணுகுமுறையின் தோல்வியே அண்மை வாரங்களில் கொழும்பில் தோன்றியுள்ள தலைமைத்துவ வெற்றிடம் என்பது மேற்கு நாடுகளுக்கும் தெரியும்.
இதில் சந்திரிகாவைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களையும் அவர்கள் விளங்கிவைத்திருக்கக்கூடும்.
எனவே முக்கோண அணுகுமுறையில் உண்டாகிய தடங்கல்கள் அதன் அடுத்த கட்டமாக அந்த முக்கோணத்தின் ஒரு கோணமாயுள்ள புலிகளைக் கையாள்வதற்குரிய இரட்டை அணுகுமுறையிலும் மாற்றங்களைக் கோரி நிற்கிறது.
அதாவது புலிகள் தொடர்பான மேற்கு நாடுகளின் இரட்டை அணுகுமுறையில் இனியினி மாற்றங்கள் தோன்றக்கூடிய வாய்ப்புக்களை கிறிஸ் பற்றனின் வன்னி விஜயம் முன்னறிவித்திருக்கிறது.
இப்பொழுது இலங்கைத்தீவில் சமாதானத்தைப் பாதுகாப்பதென்றால், முதலாவதாகச் சந்திரிகாவைச் சமாளிக்கவேண்டும். இதை இன்னொருவிதமாகச் சொன்னால் ரணிலைப் பாதுகாக்கவேண்டும். அடுத்ததாகப் புலிகளின் பொறுமையைப் பாதுகாக்க வேண்டும்.
சந்திரிகாவை நம்பிக் காய்களை நகர்த்த முடியாத அளவுக்கு அவருடைய கட்சி நலன்களும் அவருடைய தனிப்பட்ட நலன்களும் முக்கியமாக அவருடைய தனி மனித ஆளுமையும் இடறலாயிருக்கின்றன. இது தவிர பிராந்திய மட்டத்தில் அவர் உருவாக்கமுயலும் 'பாதுகாப்பு வலையும்" ஓரளவுக்கு இடறல்தான்.
இந்நிலையில் இப்போதைக்கு உடனடியாகச் சமாதானத்தைப் பாதுகாப்பதென்றால், புலிகளைத்தான் வெற்றிகரமாகக் கையாள வேண்டியிருக்கிறது. கடந்த 21 மாதகால சமாதான முயற்சிகளின்போது புலிகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு சீரான நிதானமான வளர்ச்சி அவதானிக்கப்பட்டு வருகிறது.
இம்முறை சமாதானம் செய்வதில் புலிகளுக்குள்ள மிகவும் வாய்ப்பான அம்சம் அவர்களுடைய சர்வதேச அந்தஸ்து ஒப்பீட்டளவில் உயர்ந்துவருவதே.
எனவே புலிகளை சர்வதேச அரங்கில் உயர்த்துவதன் மூலம்தான் இலங்கைத் தீவின் சமாதானத்தை இப்போதைக்கு உடனடியாகப் பாதுகாக்க முடியும்.
அதாவது புலிகளின் பொறுமையைப் பாதுகாத்தால் தான் யுத்த நிறுத்தத்தை ஸ்திரமான விதங்களில் பாதுகாக்கலாம். அதற்குப் புலிகளை சர்வதேச சமூகத்துக்கு மேலும் பொறுப்புக் கூறவல்ல ஒரு அமைப்பாக மாற்ற வேண்டும். இதற்கு புலிகளை இன்னுமின்னும் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.
அதாவது புலிகள் பற்றி இதுவரையிலுமிருந்து வந்த இரட்டை அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும்.
அப்படியேதும் செய்தால்தான் முக்கோண அணுகுமுறையில் குறைந்தபட்சம் தற்காலிகச் சமநிலையையாவது பேணமுடியும்.
மேற்கு நாடுகள் அப்படிச்செய்யக்கூடும் என்று ஊகிக்கத்தக்கவிதத்தில் சில சமிக்ஞைகள் ஏற்கனவே தெரியத்தொடங்கி விட்டன. இத்தகைய சமிக்ஞைகளில் மிகப் பிரகாசமான ஒன்றே கிறிஸ் பற்றனின் வன்னி வருகை.
இப்படிப் பார்த்தால் சந்திரிகா கடந்த சில வாரங்களாகச் செய்துவருபவை புலிகளை சர்வதேச அரங்கில் பலப்படுத்திவருகின்றன என்றே சொல்லவேண்டும்.
அவர் புலிகளை மட்டும் அல்ல, ரணில் விக்கிரமசிங்கவையும்தான் பலப்படுத்தி வருகிறார்.
அண்மைக்காலங்களில் தனது எதிரிகளைப் பலப்படுத்தும் விதத்தில் முடிவுகளை எடுத்த ஒரு தலைவியென்று அவரைத்தான் சொல்லவேண்டியிருக்கும்.
நன்றி: வெள்ளிநாதம் 05-12-03

நாட்டுப்பற்று என்றால் என்ன? நாட்டுப்பற்றாளர்கள் என்றால் என்ன?
செங்குட்டுவன்
சிங்கள இனவாதிகள் இவற்றிற்கு எவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்கள் தெரியுமா?
நாட்டுப்பற்று என்றால், புலிகளை எதிர்த்தல், தமிழர்கள் அனைவரையும் புலிகளாகப் பார்த்தல் - நாட்டுப்பற்றாளர்கள் என்றால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஆக்கிரமித்து, தமிழர்களின் தனித்துவ தேசியத்தன்மையை சிதைத்து நிற்பவர்கள் - என்பதே அவர்கள் கொடுக்கும் விளக்கமாகும்.
சிறிலங்காவில் நாட்டுப்பற்றினைப்பற்றி வாய்கிழியப்பேசும் - நாட்டுப்பற்றாளர்கள் எனத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்கொள்வோர் யார் தெரியுமா?
ஜே.வி.பியினர், சிஹல உறுமயவினர், சிங்கள புூமிபுத்திர கட்சியினர், பிக்கு பெரமுனவைச் சேர்ந்தவர்கள், மகாசங்கத்தினர்.... இப்படிப்பட்ட வகையினரே ஆவர். இவர்கள் அனைவரும் சிங்கள தேசியவாதிகள் மட்டுமல்லாது தமிழ் மக்களின் தேசியத் தனித்துவத்தை நிராகரிப்பவர்களும் ஆவர்.
அண்மையில் சந்திரிகா ஏற்படுத்திய அரசியல் அதிரடி குழப்ப நடவடிக்கைகளின் பின்னர் இந்த நாட்டுப்பற்றாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளார்கள்.
இன்றைய நிலையில் ஒரு தேசிய அரசு அமையவேண்டியதன் அவசியம் குறித்து தென்பகுதி அரசியல் தலைமைகளுக்கு ஒரு தவிர்க்கமுடியாத புற அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்படி ஒன்று அமைய வேண்டிய சூழலோ, அமைக்கவேண்டிய நிர்ப்பந்தமோ தற்போதைய சனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏற்படின், அதைக்குழப்ப தமது அரசியல் மூலோபாயங்களை இந்த நாட்டுப்பற்றாளர்கள் வகித்து வருகிறார்கள் என்பது தெளிவாகி வருகிறது.
அண்மையில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய சிகல உறுமயத் தலைவர் திலக்கருணாரட்ண ~நாட்டுப்பற்றுள்ளவர்களைச் சேர்க்காத தேசிய அரசு என்ற ஒன்று ஒருபோதுமே வெற்றியடையாது| - என்றுள்ளார்.
தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே தென்படாத நிலையில் அதற்குள் எப்படியாவது தங்களையும் நுழைத்து விட முனையும் தன்மையே அவரது இந்த கூற்றினுள் தெரிகிறது.
தங்களைத் தாங்களே தேச பக்தர்கள் எனக்கூறிக்கொள்ளும் இவர்கள், தங்களின் தேசத்திற்கு தற்போது மிகவும் அவசியமான சமாதான முயற்சிகளை முற்றாக நிராகரிப்பவர்கள். அது மட்டுமல்லாது யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்றும் வலியுறுத்துபவர்கள். யுத்தம் ஒரு நாட்டை சகல வழிகளிலும் சிதைக்கும் என அறிந்திருந்தும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக அதை வலியுறுத்துபவர்கள், தம்மை தேசபக்தர்கள் எனக் கூறுவது தான் முரண்நகையான விடயமாகும்.
தேசபக்தர்களும், அவர்களின் தேசபற்றும் சிறிலங்காவில் பேரினவாத சிந்தனைக் கோட்பாடுகளின் அடித்தளத்தைக் கொண்ட அரசியல் தத்துவத்தில் இயங்குவது தான் சிறிலங்காவின் அழிவுக்கு காரணமாகவுள்ளது.
நன்றி: வெள்ளிநாதம் 05-12-03