Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அக்கறை இல்லாதவர்கள்...!
#1
[b]அக்கறை இல்லாதவர்கள்...!

காலையில் வெளியான
பத்திரிகையை...
அவசர அவசரமாக
மாலையில்
படித்துக்கொண்டிருக்கிறான்
என் அராபிய நண்பன்..!
நான்
இன்றைய உலகின்
அடக்குமுறை அரசாங்கம்பற்றி
சிந்திக்கிறேன்...!

இவன் தலைவிதியை
தீர்மானிக்க
அவன் யார்...?
இவன் கொடுமைசெய்தானோ
கொலை செய்தானோ
யார் அறிவார்..?
அவனுக்கு மட்டுமென்ன
இவன் நாட்டு மக்களில்
அவ்வளவு அக்கறை...?
என்ன அக்கறையோ....?
எண்ணை அக்கறையோ...?
யார் அறிவார்...?

இருப்பினும்...
இவன்
சொந்த வீட்டில் புகுந்து
சுவர்களில் துப்பாக்கி
துளைகள் துளைத்து
முற்றத்தில் கட்டிலிட்டு
ஆணவத்தோடு
படுத்திருக்கிறான் அவன்..!
அவனுக்கு
என்னதான் உரிமையிருக்கிறது
இவன் வீட்டில்...?

இதை...
எதிர்த்துப் பேச
அயலவராலும் முடியவில்லை....!
அடுத்தவராலும்
முடியவில்லை...!
அதனால்த்தான்...
இப்போது அங்கே...
மனித உயிர்கள்
மிக மிக மலிவு...!

அவனுக்கென்ன...?
ஆயுதத்தோடு வந்தான்...!
அடிபணிய வைத்தான்
அரியாசனத்தை அபகரித்தான்
அப்பாவி மக்கள்
அழுகுரல்மேல்...
ஆட்சி நடத்துகின்றான்..!

நாளுக்கு நாள்
மலிந்துகொண்டே போகும்
மனித உயிர்கள்
இதைப்பற்றி
அவனுக்கென்ன கவலை..?

என் நண்பன்
தொடர்ந்து பத்திரிகை
படித்துக்கொண்டிருக்கிறான்..!
நான்
இன்றைய உலகின்
அடக்குமுறை அரசாங்கம்பற்றி
சிந்திக்கிறேன்...!

இவன் பலவீனமானால்
அவன்...
அடிமையாக்க நினைக்கிறான்
அவன் அமைதியாய் இருந்தால்
இவன்...
அழித்துவிட நினைக்கின்றான்...!

அட மானிடா...
எங்கே போய்க்கொண்டிருக்கிறது
இன்றைய உலகம்...?
சொல்லிக்கொண்டே
பத்திரிகையை படித்துமுடித்து
அதை
நான்காக மடித்து
என் கையில் திணித்துவிட்டு...
மாலைநேர தொழுகைக்காக
சென்றுகொண்டிருக்கிறான்
என் நண்பன்..!
நான்
இன்றைய உலகின்
அடக்குமுறை அரசாங்கம்பற்றி
சிந்திக்துக்கொண்டே இருக்கிறேன்...!
என் நண்பன்...
இப்போது தொழுகையை
தொடங்கியிருப்பான்
ஓ.......
இன்சாய் அல்லா...!!!

த.சரீஷ்
17.12.2003 (பாரீஸ்)
sharish
Reply
#2
நானும் அவர்களுக்காக ஒரு இன்சா அல்லா... தான் சொல்லமுடியும்..... கடவுள் இருந்தால் இவர்கள் இப்படியும் அவர்கள் அப்படியும் இந்த உலகம் இப்படித்தான் இருக்குமோ... :? :?:

அக்கறை இல்லாதவர்கள்... :evil:
http://www.sooriyan.com/latestnews/117.asp
Reply
#3
அக்கறையுள்ள சரீஷ்...

அக்கறையில்லாதவர்கள் பற்றி அக்கறையோடு நீங்கள் வரைந்த கவிதையை அக்கறையோடு படித்தேன். அக்கறையில்லாதவர்களையும் அக்கறைப்படுத்தும் உங்கள் கவிதை நன்று. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அதிலும் குறிப்பாக இந்த வரிகள் நன்றாய் அமைந்துள்ளது:

Quote:என்ன அக்கறையோ....?
எண்ணை அக்கறையோ...?

தொடருங்கள் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள நல்ல கவிஞனாய்.


Reply
#4
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
http://www.tamilworldnews.com/Joke20031221.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)