Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு
#1
'கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு
-அருஸ் (வேல்ஸ்)-

பொதுவாக இலங்கைத்தீவில் என்ன கோளாறு வந்தாலும் அதற்குக் காரணம் தமிழர்களே என கண்ணை மூடிக்கொண்டு கூறும் வழக்கம் சிங்களவர்களிடம் உண்டு. இது அவர்களுக்கு பரம்பரையினு}டாகக் கடத்தப்பட்ட வியாதி. அரசியல்வாதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை எவருமே இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த மாற்ற முடியாத புற்றுநோயின் ஒரு வெளிப்பாடே இந்தியாவிலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்படும் கோழிகள் மூலம் இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் நோய் தொற்றக்கூடிய அபாயம் இருப்பதாக வெளிவந்துள்ள கூற்று அமைந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றினை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்திணைக்களத்தின் பணிப்பாளர் அமரசேகராவே இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது பேட்டியில் 'இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயரும் அல்லது கடத்தப்படும் பறவைகள் முதலில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கே வந்து சேர்கின்றன. ஆனால் அப்பகுதிகளில் நாம் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது. இப்போதுள்ள நிலைமையின் படி பறைவைக்காய்ச்சல் நோய் இலங்கையிலும் தொற்றுவதற்கான சாத்தியங்களே கூடுதலாக இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழர்கள் தமது பிள்ளைகளின் ஆரம்பக்கல்வியின் போது 'பஞ்ச தந்திரக்கதைகள்" போன்றவற்றையே கற்பிப்பதுண்டு. மூளை விருத்தியைக்கருத்திற்கொண்டே இவ்வாறான கதைகளைச் சொல்வதுண்டு. ஆனால் 'மாதன மூத்தா" போன்ற கதைகளையே பெரும்பாலும் சிங்களக் குழந்;தைகளுக்கு சுவையுடன் சொல்லிக் கொடுப்பதுண்டு. இவற்றின் வெளிப்பாடே பணிப்பாளர் அமரசேகராவின் கருத்து என்றெண்ணி இதனை புறந்தள்ளி விடவேண்டியது தான்.

இந்தியா - தமிழர்கள் தொடர்பாக இப்போது தான் சிங்களவர்கள் 'அதி புத்திசாலித்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றார்களென்றில்லை. 1970 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணிக் கட்சியில் இருந்தபோது கடுமையான உணவுத்தட்டுப்பாடு நிலவியது. மாவட்டத்திற்கு மாவட்டம் குறிப்பிட்ட அளவுக்குமேல் அரிசி கொண்டுபோக அனுமதியில்லை. பாணுக்குக் கூட இரவிரவாக வரிசையில் நின்றே ஒன்றோ இரண்டோ இறாத்தல் பாண் பெறமுடியும். அப்போது கிளிநொச்சி;த் தொகுதி யாழ். மாவட்டத்தினுள் அடங்கியிருந்தது. (இப்போதும் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்குள் தான்) மாவட்டத்திற்கு மாவட்டம் அரிசி கொண்டுபோகத்தானே தடை - ஏன் ஒரே மாவட்டத்தினுள் இருக்கும் கிளிநொச்சியிலிருந்து மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு அரிசியைக் கொண்டு செல்ல தடை விதிக்கிறீர்கள் என்று அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. ஒரு சமயம் அப்போதைய விவசாய அமைச்சரான ஹெக்டர் ஹொப்பேகடுவ ஒரு து}தனமான பதிலைச் சொன்னார். 'வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு அரிசி கடத்தப்படுகிறது. அது தான் நாட்டில் நிலவும் அரிசித்தட்டுப்பாட்டுக்குக் காரணம்." இந்தப் 'புத்திசாலி" தான் பின்னர் 1982 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

இனவாதம் என்ற கண்ணாடியைச் சிங்களவர்கள் போட்டுக்கொண்டிருப்பதால் தான் அவர்களால் எந்தப்பிரச்சனையையும் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதற்கு ஹெக்டர் ஹொப்பேகடுவவின் கூற்றுக்கும் அமரசேகராவின் கூற்றுக்கும் இடையில் ஆயிரம் உதாரணங்களைக் கூறமுடியும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இந்தியாவிலிருந்து கோழிகளைக் கொண்டு வருவதைக் கண்டுபிடித்த அமரசேகராவின் கண்ணாடி அவரது கூற்றில் உள்ள இன்னொரு விடயத்தைப் பற்றி ஏன் அலட்டிக்கொள்ளவில்லை.

'அப்பகுதிகளில் (விடுதலைப் புலிகளின் பகுதிகளில்) நாம் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது." என்ற அவரது கூற்று எதைக்குறிக்கிறது. மிருகங்களிலும் தமிழ் மிருகம், சிங்கள மிருகம் என்றிருக்கிறதா? இப்பகுதியில் மிருக வைத்தியங்களை மேற்கொள்ள முடியுமாயிருக்கின்றது. என்றால் அதற்கான தவறுக்கு அவரும் அவர் சார்ந்த சிங்கள அரசும் தானே காரணம்? தமது பகுதியில் மிருக வைத்தியம் மேற்கொள்ள அரச வைத்தியர்களுக்குத் தடை என்று விடுதலைப் புலிகள் சொன்னதாக எந்தச் செய்தியுமே வெளிவரவில்லையே?

முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான யாழ். மாவட்டத்தின் கரவெட்டிப்பகுதியில் ஆளற்ற வேவு விமானமொன்று வீழ்ந்ததற்கு நோர்வே புலிகளுக்கு வழங்கிய வானொலிச் சாதனமே காரணம் என்று அந்தச் சாதனத்தாலேயே வீழ்த்தினர் என்று ஒரு புத்திசாலித்தனமான ஜே.வி.பி உறுப்பினர் கண்டுபிடித்தமை பற்றி ஜே.வி.பி இரண்டு தடவையும் புரட்சி (கிளர்ச்சி) செய்து இரண்டு தடவையும் தோற்றது. ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. என்று ஒரு தமிழ்ப்பத்திரிகை கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல முன்னொரு தடவை இலங்கையில் புகைப்பிடிப்போர் வீதம் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகம் என ஒரு அதிகாரி கண்டுபிடித்ததும் நினைவு கூரத்தக்கது.

தென்னிலங்கைப் பத்திரிகைகளும் தமது பங்குக்கு அடிக்கடி ஏதாவது புரளியைக் கிளப்பி பின்பு தாமே அதை நம்பி விடுவதுமுண்டு.

ஆக தாங்கள் செய்யத் தவறிய ஒரு விடயம் தொடர்பான குற்றத்தையும் சிங்களவர் தமிழர்மீதே (குறிப்பாக புலிகள் மீது) போடும் முயற்சி இது.

எந்த மருந்துத் தடை இருந்த போதும் தமது மக்களின் சுகாதாரம் தொடர்பான விடயங்கள், சூழல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் விடுதலைப் புலிகள் எவ்வளவு கரிசனையாகவுள்ளனர் என்பதை வெளியுலகம் அறிந்த ஒன்று.

சிங்களப் பகுதிகளில் எந்தத் திட்டமும் இல்லாமலே வனவளம் அழிக்கப்படுகின்றது. ஜெயசிக்குறு நடவடிக்கை இடம்பெற்ற காலத்தில் வன்னியிலும் பெருமளவிலான மரங்களை வெட்டி (குறிப்பாக தேக்கு) சிங்கள இராணுவ அதிகாரிகள் பதவிநிலைக்கேற்ப இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறியதும் இரகசியமான விடயமல்ல.

தமிழீழ வனவளப்பிரிவு, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் என்பன வனவளத்தைப் பேண மேற்கொள்ளும் முயற்சிகளில் எத்தனை வீதம் சிங்கள அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதைக் கணக்கிட்டால் சுற்றுச்சூழல் தொடர்பாக விடுதலைப் புலிகள் எவ்வளவு கரிசனையுடன் உள்ளனர் என்பது புரியும்.

மேலும் டெங்கு நோய் பற்றிய பீதி தென்னிலங்கையை உலுப்பிய போது அவ்வளவு மருந்துத் தடைகளுக்கும் மத்தியில் தமது பகுதிக்குள் அதை நெருங்க முடியவில்லை.. புலிகளால் அவ்வளவு தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விழிப்புட்டல், நோய்த்தடுப்பு தொடர்பில்; சிறிலங்கா அரசைவிட விடுதலைப் புலிகள்; எந்தளவிற்கு அக்கறையாக இருக்கின்றனர் என்பது திரு.அமரசேகராவுக்குத் தெரியாவிட்டாலும் அனேகருக்கு நன்கு தெரியும்.

புலிகளின் பகுதிக்குள் இந்தியாவில் இருந்து கோழி கடத்தி வரப்படுகின்றது என்ற கூற்று நகைப்புக்கிடமானது. இது திரு அமரசேகராவிற்குப் புலிகளைப் பற்றியும்; தெரியாது, இலாப நட்ட கணக்கும்; பார்க்கத் தெரியாது என்பதையே வெளிப்படுத்துகின்றது.

சிங்களவர் ஒருவர் தற்செயலாகத் சறுக்கி வீழ்ந்தாலும் அதற்கும் தமிழரே காரணம் எனக் கூறுமளவிற்கு சிறிலங்காவில் இனவாதம் கோலோச்சுகிறது.

தமிழ் நாதம்
Reply
#2
இப்படியே போன எங்கள் படங்கள் யாரும் பார்க்க மாட்டார்கள். Cry Cry Cry இலங்கை அரசு நல்ல நகச்சுவை அறிக்கைகள் எல்லாம் விடுது..


எண்டா அப்பியவை இதை யாரும் தட்டி கேக்க்க மாடினமோ? ஊர் பச்சாயத்து தலைவர்களிடம் சொலலாம் தானே? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#3
தமிழ்நாடு மாவட்டங்களில் பறவைக்காய்ச்சயல் அபாயம்
பிரிஐ செய்தி நிறுவனம் நொவெம்பர் 30 2005

சென்னை - தமிழ்நாடு அரசு பறவைக்காய்ச்சல் அபாயம் பற்றி அறிவுறுத்தியுள்ளது. நாகபட்டினத்திலுள்ள கலமியர் முனை பறவைகள் சரணாலயத்துக்கு இடம்பெயர்ந்து வரும் பறவைகள் வந்து சேர்ந்துள்ளதை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வன பாதுகாப்பு பிரிவு அறிக்கை ஒன்றில் இந்த பறவைகள் வழமையாக நொவெம்பர் மாதத்தில் இருந்து பெப்ருவரி மாதம் வரை நீர்பருகும் குளத்தில் பறவைக்காய்ச்சல் வைரஸ் H5N1 காணப்பட்டுள்ளதாக வனபாதுகாப்பு வார்டன் பறுவா கூறியதாக தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் வீட்டில் வளரும் உணவுக்கான பறவைகளுக்கு காற்று உமிழ்நீர் மற்றும் திரவங்களால் பரவக்கூடியதாகும்.
.....
......
http://timesofindia.indiatimes.com/article...432,curpg-1.cms
''
'' [.423]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)