Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு
#1
குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு எல்லாளன் படை எச்சரிக்கை
யாழ் குடாநாட்டில் படையினருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை எல்லாளன் படை வெளியிட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் படையினரின் கைக்கூலிகளாகவும் அடிவருடிகளாகவும் இருந்து தொடர்ந்து செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களே எல்லாளன் படை என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
படையினருடன் உறவைப் பேணுவோர், உளவு சொல்வோர், படையினர் வழங்கும் ஆபாச இறுவெட்டுகளை இளைஞர்களுக்கு விநியோகிப்போர். இராணுவத்தின் அப்பக் கடைகளில் காலம் கழிப்போர், பெண்களை படையினருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போர் மற்றும் படையினரின் துணையுடன் களவு, வீடுகள் உடைப்பு, கால்நடைகள், மண்கடத்தலில் ஈடுபடுவோர், கசிப்பு காய்ச்சுவோர் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகள் இனங்காணப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களிலேயே தம்மால் தண்டனை வழங்கப்படுமென்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


லங்காசிறீ
Reply
#2
இது யாழ்களத்திலும் நாம் பார்க்க வோண்டிய ஒன்று
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)