Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
டேட்டிங் இது இப்போது இல்லாத இடமே இல்லை. இதைப்பத்தி உங்க கருத்து என்ன?
டேட்டிங் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா? அதன் எல்லைகள் என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
அது என்ன <b>டேட்டிங்...? ? ?</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[b]உந்த 'டேட்டிங்' எண்டால் என்னெண்டு தெரியுமா?"
"என்ன..?"
"அவையள் வருவினம்.. ஒரு பொடியனோடை 'சற்'பண்ணுவினம்.. பிறகு படம் அனுப்பிவினம்.. பிறகு ரெலிபோனிலை பேசுவினம்.. அதுக்குப் பிறகு 'கபே'ல கோப்பி குடிக்க கூப்பிட்டு கதைப்பினம்.. சிலர் சினிமாக்குக்கூட போவினம்.."
"இதுதான் 'டேட்டிங்'கா?"
"இது பொடியன் எப்பிடி எண்டு பழகிப் பாக்கினமாம்.. பிறகு பிடிக்கேலை எண்டா.. ஓரு 'பாய்'. மறுபடி 'சற்'.. மறுபடி ஒரு பொடியன்.. இதுதான் அண்ணா இவளவைன்ரை 'டேட்டிங்'"
"ஓ.. முந்தி அரசர்கள் மகளுக்கு நடத்துற சுயம்வரம்போலை..?"
"ஆகா.. இது அவையே அவைக்கு நடத்துற சுயம்வரம் அண்ணா.. இது வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சதாம்.. லொள்.."
"என்னவோ.. ஒருத்தனோட குணங்களை அறிஞ்சு அவனோட வாழுறது நல்லதுதானே லவ்லிபோய்? காலங்காலமா இணைந்து வாழப் போறவங்களுக்கு ஒருவரை ஒருவர் புரிஞ்சுகொண்டு இணையுறது நல்லதாகத் தென்படலாம்தானே?"
மனதில் தோன்றியதைக் கேட்டேன்.
இராஜன் முருகவேலுடைய ஐஸ்கிறீம் சிலையே நீதானா தொடர்கதையில் இருந்து
இது டேட்டிங் பத்தி என்னோட கருத்து அல்ல உங்களுக்கு புரியிறதுக்காக எழுதியிருக்கேன். என்னோட விளக்கத்தை கீழே எழுதுறேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கதை எழுதியவரின் பெயரை தப்பாமல் எழுதிவிட்டேன். இப்போது திருத்திவிட்டேன். மன்னிக்கவும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=sOliyAn]<b>அது அதாகமட்டும் இருக்கும்வரையில்</b>
அந்த அது எதாக இருக்குமட்டும்? உங்கள் பதில் என்ன சோழியன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இன்ரர்நெட்டில் ஆரம்பித்தது அல்ல Dating. ஆனால் தற்போது இன்ரர்நெட்டால் Dating அதிகமாகிவிட்டது.
Datingற்க்கு பிரபலமான தளம் ஒன்று:
http://www.singlesites.com/
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sOliyAn Wrote:டேட்டிங் டேட்டிங்காக இருக்கும்மட்டும். டேட்டிங் என்ற பதத்துள் 'தொட்டிங்' 'உரசிங்' 'பட்டிங்' என்று நுழைஞ்சால் பிறகு அது எங்கோ போய் இடிக்குமே?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அப்ப டேட்டிங்கிக்கு என்று ஒரு வரைவிலக்கணம் இருக்கோ....அப்படி என்றால் அது என்ன....???! எல்லாம் 'கொப்பி'...வெள்ளைக்காரனைப் பாத்து....ஏதோ நடக்கட்டும்...நமெக்கென்ன ஆராய்ச்சிக்கு வேலை வைக்கிறாங்கள்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
டேட்டிங்.... ஒருவரை புரிந்து கொள்ள உதவுகின்றது.
இந்த டேட்டிங்.... வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டு போனால்.... என்ன என்று சொல்வது.... அது தீமையில் முடியக்கூடிய சாத்தியக்கூறுகள் தான் உள்ளது.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சோழியான் அண்ணா சொன்னது போல எல்லாம் ஒரு வரையறைக்க இருந்தால் சுபம்....நெருப்பையும் பஞ்சையும் பக்கத்தில பக்கத்தில வச்சிட்டு எப்படி வரையறை போடுறது....கஸ்டம் தான்...இருந்தாலும் போடலாம்....முனைந்தால் சாதிக்க முடியாதது என்ன இருக்கு....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Dating கலாசாரம்
<img src='http://www.udate.com/images/udatebigpicture.jpg' border='0' alt='user posted image'>
"டேட்டிங்"கலாசாரம் மெல்ல மெல்ல கவனத்துடன் கையாளப்படுவது கேள்விக் குறியாகிவிட்டது.உடல் ரீதியான உறவுக்காகதானே டேட்டிங்?பெண்களே உஷார்..எப்போதும் விழித்திருங்க!எல்லா ஆண்களையுமே சந்தேகிப்பதையும் கைவிடுங்கள்.அறிவுரை சொல்லும்போது இதமா,பதமா சொல்லுங்கள்."டேட்டிங்"இச்சொல் இன்று மேற்கத்திய நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் ஏன் இலங்கையிலும் சகஜமாகிவிட்டது.முன்பின் தெரியாத ஒருவருடன் செல்வது டேட்டிங் கிடையாது.நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண்பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித்து செல்வது டேட்டிங்.இப்படி செல்லும்போது கண்ணியப் பேச்சுடன் கட்டுப்பாட்டுக்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.டேட்டிங் என்பது முட்கள் நிறைந்தது.முட்கள் குத்தாமல் பார்த்துக்கொள்வது அவரவர்களுடைய பொறுப்பு,கடமை.
டேட்டிங் என்ற பெயரில் அறியாமையில் உள்ள பெண் தோழிகளை சில ஆண் நண்பர்கள் நாசப்படுத்திவிடுகின்றனர்.அறியாமையில் கற்பை இழந்து நிற்கும் அப்பாவிப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் புழுங்குகிறாள்.ஆனால் ஆறுதல்தான் கிடைக்காது.இதையே பலவீனமாக வைத்து அந்த ஆண் நண்பர் அப்பாவிப் பெண்ணை தொடர்ந்து அனுபவிக்க முயற்சிப்பார்.தற்போதைய காலகட்டத்தில் ஆணுடன் பெண்ணோ,பெண்ணுடன் ஆணோ உறவு வைத்திருந்தால் தான் சரியான மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர்.அல்லது அவர்களுக்கு ஏதோ மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்கின்றனர்.
இந்த உந்துதல் கட்டாயம் இவர்களை நண்பர்களாகத் தூண்டுகிறது.நண்பர்களுக்கு நான் அந்தப் பெண்ணை மடக்கிக் காட்டுகிறேன் பார் என்று காதல்கொண்டேன் பட சவாலைப்போல சவாலும் விடுவார்கள்.இதை மான,கௌரவப் பிரச்சினையாகவே ஆண்கள் எடுத்துக்கொள்கின்றனர்.இதுமாதிரி செய்பவர்கள் பெரும்பாலும் 16வயது முதல் 25வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பர்.பலரும் தங்களது செக்ஸை வெளிப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.டேட்டிங்கில் ஆண் பெண் தனியே சந்தித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் இவர்களை செக்ஸ் வைத்துக்கொள்ளத் தூண்டுகிறது.பெரும்பாலான ஆண்கள் டேட்டிங் என்ற பெயரில் பல பெண்களின் கற்பை சூறையாடி விடுவார்கள்.இது அவர்களது ஆண்மைக்கு அழகு என்று நினைக்கிறார்கள்.
ஆண் நண்பருடன் டேட்டிங் செல்ல தயாராகும் பெண்களில் சிலர் எதற்கும் துணிந்துதான் செல்கின்றனர்.அந்த ஆண் நண்பரை நாம் இழந்துவிடுவோமோ என்ற பயம்-ஆதங்கம் அவர்களை எந்தக் கட்டுப்பாட்டையும் மீறிச் செல்லத்தூண்டுகிறது.செக்ஸ் உறவுக்கு ஆண் நண்பரால் தூண்டப்படும்போது அப்பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் இசைவு தெரிவிக்கிறார்.பெரும்பாலான ஆண் நண்பர்கள் பெண் நண்பிகளுக்கு கூல் டிரிங்ஸ் வாங்க,டிபன் வாங்க,பெட்ரோல் போட காசு செலவழித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள விழைகின்றனர்.சில ஆண் நண்பர்கள் நீ என்னிடம் அன்பாக இருப்பது உண்மையானால் இதற்கும் இசைவு தெரிவிக்கவேண்டும் என்று பிளாக்மெயில் செய்கின்றனர்.இங்கேதான் அந்தப்பெண்,தன்னுடைய பாதுகாப்பு,எதிர்காலம் நற்பெயர் குறித்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.முடிவு உணர்ச்சிகரமானதாக இருக்ககூடாது.
சமீப காலமாக ரி.வி,நாவல்கள்,திiர்ப்படங்கள் ஆகியவை டேட்டிங்கில் நடக்கும் சமாச்சாரங்களை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.காதல் வயப்படுவதற்கு ஊக்குவிக்கின்றன.முதன் முதலாக ஆண் நண்பருடன் டேட்டிங் செல்லும் பெண் வசீகரிக்கப்பட்டுச் செல்கிறார்.அல்லது உணர்ச்சிவசப்பட்டுச் செல்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.ஆண் நண்பரின் ஆசைகளை ஆரம்பத்தில் தட்ட முடியாமல் பலியான பிறகு தனிமையில் இருக்கும்போது தவறை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.
சில வசதிபடைத்த ஆண் நண்பர்கள் தங்களிடம் கார்,செல்போன் போன்றவை இருப்பதால் கூப்பிட்டவுடன் பெண் நண்பி வந்துவிடுவாள் என்று நினைக்கின்றனர்.இவர்களின் பகட்டிற்கும் சில பெண்கள் பலியாகி விடுகின்றனர்.இந்த விஷயத்தில் ஆணை மட்டும் பழிசுமத்தக்கூடாது.பெண்ணும் இதற்குச் சம்மதித்துத்தானே செல்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தனிமையில் இருக்கும்போது எல்லைமீறிச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
நண்பருடன் செல்ல நண்பி தயார் என்று கூறிவிட்டாலே,அந்த நண்பி எதற்கும் சம்மதிப்பாள் என்று அந்த ஆண் நண்பர் நினைத்துக்கொண்டு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள தவறுவதில்லை.தொடர்ந்து தவறு நடந்துவிட்டாலும் அந்த நண்பியைத் திருமணம் செய்துகொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.சில ஆண் நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருந்துவிட்டுச் செல்கின்றனர்.டேட்டிங் செல்வது என்றாலே அந்த ஆணின் மனதில் 90சதவீதம் செக்ஸ் பற்றிய சிந்தனை தான் இருக்கும்.உடல்ரீதியான உரிமைகளை எடுத்துக்கொள்ளவே பெண் நண்பிகளை ஆண் நண்பர்கள் வெளியே அழைத்துச் செல்கின்றனர்.டேட்டிங் என்பது அவர்களுக்கு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக நினைக்கின்றனர்.
ஒரு பெண் மேற்கத்திய பாணியில் உடை அணிந்து பார்ட்டிக்கு அல்லது டான்ஸ் கிளப்பு சென்றால்,அந்தப் பெண் எதற்கும் துணிந்தவர் என்று ஆண் நண்பர்கள் நினைத்துக்கொள்கின்றனர்.இப்படி நினைப்பது தவறானது ஏனெனில் இவையெல்லாம் இன்றைய காலகட்டங்களில் சகஜமான ஒன்றாகிவிட்டது.சில பெண்கள் தெரியாத்தனமாக சூழ்ச்சிகர ஆண் நண்பர்களிடம் மாட்டிக்கொள்வார்கள்.இதற்கு உதாரணம்தான் அம்ரிதா என்ற 16 வயதுப் பணக்காரப் பெண். பல மாதங்கள் பழகிய நண்பரை தனிமையில் சந்திக்க அம்ரிதா சென்றார்.அப்போது அம்ரிதா தனது ஆண் நண்பர் மட்டுமின்றி,அவரது நண்பர்கள் மூவரால் கற்பழிக்கப்பட்டாள்.நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆண் நண்பர் அம்ரிதாவை பாட்டிக்கு அழைத்துச்சென்று போதை கொடுத்து,கற்பழித்து பல கோணங்களில் ஆபாசப் போட்டோக்களை எடுத்தார்.தொடர்ந்து இந்த போட்டோக்களை வைத்து அம்ரிதாவை பிளாக் மெயில் செய்து உறவு கொண்டார்.
இவருக்கு இப்படி என்றால்,மாயாவுக்கு திருமண வாக்குறுதி கோலத்தில் வந்தது பூகம்பம்.இவருடன் செக்ஸ உறவு வைத்துக்கொள்வதற்காக திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்தார்.ஆசை நிறைவேறியதும் பெண் நண்பியை தூக்கி எறிந்தார்.வேறொருவரை திருமணம் செய்ய இதுபோன்ற பெண்கள் முடிவு செய்தாலும் மிரட்டியே சில ஆண் நண்பர்கள் உறவு வைத்துக்கொள்ள துணிகின்றனர்.தற்போது இன்டர் நெட் யுகம் என்பதால் இதன் மூலமும் ஆண் நண்பர்கள் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றுகின்றனர்.நேரில் பார்க்க முடியாது என்பதால் தங்களது சுய ரூபங்களை மறைத்துவிடுகின்றனர்.இருவரும் இன்டர்நெட்டில் நீண்ட நாட்கள் பழகிவிட்டு ஒரு நாள் சந்திக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த ஏமாற்றம் வயது வித்தியாசம்,அழகு,கல்வி தகுதி குறைவு,அந்தஸ்து குறைவு போன்றவற்றால் ஏற்படலாம்.
சிலர் முன்பே திட்டமிட்டு குளிர்பானம் அல்லது பழரசங்களில் போதை மாத்திரைகளைப்போட்டு கொடுத்துவிடுக்ன்றனர்.இந்த போதை மாத்திரைகள் வாசம் மற்றும் கலர் இல்லாதது.இதைக் குடித்தால் 10முதல் 12மணி நேரம் வரை போதையில்தான் இருப்பார்கள்.இவற்றை தவிர்க்க டேட்டிங் செல்லவேண்டாம் என்று ஒரு வரியில் கூறிவிட்டால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது.பொறுப்பான நடவடிக்கை மூலமே பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.அதே சமயம் அனைத்து நண்பர்களும் இதுபோன்று இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து பெண்களுக்கு தவறான வழிகாட்டலைக் கொடுக்கக்கூடாது.அப்படிக் கொடுத்தால் பாலியல் பாகுபாடு,வெறுப்புகள் ஏற்படும்.அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவம் கிடைத்துவிடவில்லை.டேட்டிங் என்ற கலாசாரமே ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம்விட்டுப்பேசி,ஆரோக்கியமான முறையில் நட்புச் செலுத்துவதற்காகவே ஏற்பட்டது.இந்த உறவில் குழப்பம் ஏற்படும்போதோ ஆண்மீது பெண் கவர்ச்சியோ,பெண் மீது ஆண் கவர்ச்சியோ,ஏற்படும்போது தான் வழி மீறல்,விதி மீறல் எல்லாம் ஏற்படுகின்றன.
நன்றி - வெப்தமிழன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
சேலை மீது முள் விழுந்தால் என்ன
முள்ளின் மீது சேலை விழுந்தால் என்ன
பாதிப்பு என்னவோ..... சேலைக்குத்தான்.