Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அப்பா என்றொரு அற்புத ஜீவன்
#1
[b]படித்ததில் பிடித்தது

[b][size=18]அப்பா என்றொரு அற்புத ஜீவன்

தினமும் வீட்டிற்கு வரும் போதும்
குழந்தைகளிருக்கும் வீடுகளுக்கு
போக நேரும்போதும்
வெறுங்கையோடு
செல்லத் துணியாதவர்

நான் குழந்தைகளை
அழைத்துக் கொண்டு
பார்க்க வரும் போதெல்லாம்
அவர்கள் நகங்கள்
சரியாக வெட்டப்பட்டிருகிறதா என்பதை
முதலில் பரிசோதிப்பவர்

யாருக்கும் அவ்வளவு சுலபத்தில்
தந்து விட்டாத
தன் பேனாவையும்
'மொபட்' சாவியையும்
காத்திருந்து எனக்குத் தருபவர்

நான் வருவதாய்
தகவல் கிடைத்தவுடன்
பெயரர்களுக்கு தேன்வாழைப் பழமும்
எனக்கு
'காய்கறி போலத்தான்' என
ஊட்டிப்பழக்கிய
இறைச்சியும் வாங்கிவர
பையெடுத்துக் கிளம்புபவர்

அம்மா சமைக்கையில்
ருசி பார்த்திருந்து
சாப்பிடும்போது
பக்கத்தமர்ந்து
சாப்பிட வைத்து
பசியாறுபவர்

படித்த புத்தகங்களை
மேசையில் அடுக்கி வைத்திருந்து
தான் அடிக்கோடிட்டு வைத்திருப்பவைகளை
எனக்கு ஆர்வமாய் விளக்குபவர்

தோட்டத்திற்கு கூட்டிப் போய்
முளைவிட்டு பூவிட்டுக் காய்விட்ட
செடியையெல்லாம்
தன் வளர்ப்புக் குழந்தைகளாய்
அடையாளம் காட்டுபவர்

எப்போதாவது
அவர் பள்ளிக்கு
நான் செல்ல நேரும் போது
அருகில் நிறுத்தி
தலையில் கைவைத்து
தன் மகளென
தன் வகுப்பு மாணவர்க்கு
அறிமுகப்படுத்துபவர்

என் குழந்தைகளை
நான் கொஞ்சும் போது
இதே மாதிரித்தான்
தானும் என்னை கொஞ்சி வளர்த்ததாய்
நெகிழ்ச்சியோடு
சொல்லி ரசிப்பவர்

தான் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாய்
நான் நம்பிக்கொள்ளட்டுமென்று
ஒருநாள்.....
கண்மூடி தூக்கத்தில்
செத்துப் போனவர்.................

[b]- உதயா -


நன்றி - http://womankind.weblogs.us/
nadpudan
alai
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)