11-19-2004, 01:18 PM
அழிந்துபோகும் ஒரு துரோகியின் கனவு
கேணல்
ஜ கனா. சிவகுமார் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2004, 10:36 ஈழம் ஸ
சிறீலங்கா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அக்கறையுள்ளோரால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட விடயமான கருணாவின் அரசியற் பிரவேசம் என்பது தோல்வியைத் தழுவி வருவதாக இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளிற்கான தலைமையதிகாரியாக இருந்த கேணல் ஹரிகரன் அவர்களினால் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் பிரபல்யமான ஆய்வுமையமொன்றிற்கான தனது ஆய்வறிக்கையில் மேற்படி கருத்தை வலியுறுத்தி பல ஆதாரச் சான்றுகளைத் தெரிவித்துள்ள கேணல் ஆர். ஹரிகரன் அவர்கள், கருணா புதுக்கட்சி தொடங்குவதற்கான சாண்றுகள் அரிதாகவே தெரிவதாகவும், கருணா ஈ.பி.டி.பியுடன் இணைந்தே செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திப்பதைக் காணக்கூடியதாகவும் தெரிவித்துள்ளதோடு,
ஈ.பி.டி.பி தற்போதே இராணுவத்துடன் சேர்ந்து வட-கிழக்கில் இயங்கும் ஒரு ஆயுதக்குழுவென்றும், இவ்வாறான ஆயுதக்குழுக்களிற்கு ஏற்படும் மரணங்கள் ~இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஒருவர் கொல்லப்பட்டார்| என அல்லது |இராணுவத்தின் முகவர் (ஏஐன்ட்) கொல்லப்பட்டார்| என்றுமே இலங்கையில் நோக்கப்படுவதாகவும் கருணாவினை ஆதரிப்போர் மரணங்களும் மேற்கண்டவாறே நோக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதோடு,
கிழக்கிலும் கல்முனை வரையான கரையோரங்களையும், உள்நிலங்களையும் விடுதலைப்புலிகளில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், தொப்பிக்கல மற்றும் அரலங்கன்வில்ல - மகா ஓயா பகுதிகளிலிருந்தே கருணாவிற்கு ஆதரவானோர் செயற்படுவதாகவும் இவ்வாறான நிலையில் கருணா புதுக்கட்சி தொடங்குவது பற்றியும் அரசியலிற்குள் பிரவேசிப்பது பற்றியும் வெளிவந்துள்ள செய்திகள் கருணா தோல்வியைத் தழுவி வருவதையே காட்டுவதாகவும் கூறியுள்ளதோடு,
கருணா அரசியலிற்குள் பிரவேசிக்கும் தகுதிகளையோ வசீகரத்தையோ கொண்டிருக்கவில்லையென்றும், ஒரு கெரில்லா போராளிக்கான தகுதியே கருணாவிற்கான பிரபல்யத்தைக் கொடுத்திருந்தது என்றும் தெரிவித்துள்ளதோடு, கருணா விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிவதற்காகக் கையாண்ட விடயங்கள் மக்கள் மத்தியில் விலைபோகும் விடயங்களல்ல என்பதையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
பிரதேசவாதத்தை ஏற்படுத்துவது மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றிய அவதூற்றுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று கருணா கையாண்ட இரண்டு விடயங்களும் மக்களிடம் செல்லுபடியாகாத, கருணாவிற்கு பாதகமான விடயங்களாக அமைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ள முன்னைநாள் புலனாய்வுத்துறைத் தலைவரான கேணல். ஆர். ஹரிகரன், விடுதலைப்புலிகளே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒருங்கிணைத்து அதனை உலகமயப்படுத்தினார்கள் என்பதே யதார்த்தமாக இருக்கிறது என்றும்,
பிரபாகரனி;ன் குரலாக அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்றோர் நாடுகளின் தலைவர்களையும் சர்வதேச இராஐதந்திரிகளையும் சந்தித்து உறவுகளை வலுப்படுத்தியுள்ளது போன்ற நிலையை இதற்கான உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளதோடு,
|இவ்வளவு நாளும் நடைபெற்றது விடுதலைப்போராட்டமேயல்ல| எனக் கருணா கூறுவதும், |பிரபாகரனிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவே போராடாப்போவதாக| கருணா கூறுவதும் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது எனவும் தெரிவித்துள்ளதோடு, கிழக்கு மக்களே கருணா தங்களின் போராளியாகப் பார்க்காது, பயத்துடனும் கிலியுடனும் தற்போது பார்ப்பதே இதற்கு உதாரணம் என்றும்,
அத்தோடு ஆயுதங்களை நம்பி இருப்பது மட்டுமே கருணாவுக்கு உள்ள தெரிவு என்றும் அவர் அதைவிடுத்து அரசியல்வாதியாக மாறி மக்களின் ஆதரவை பெறுவது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளதோடு பிரதேசவாதத்தை வைத்து கிழக்கில் தனது அரசியலாசையை கருணா வளர்க்க முயன்றால் அதனை ஆயுதபாணிகளாக இருந்து கொண்டே செய்யலாம் எனவும் இது கருணாவின் ஆசையை இரட்டடிப்புச் சிக்கலாக்கும் விடயம் என்றும் தெரிவித்துள்ளதோடு,
கருணா அரசியல் தலைமையை அடையமுடியாததற்கான காரணமாக தமிழர்களினது ஆதரவைப் பெறமுடியாமை மற்றும் சிறீலங்காவின் பெரும்பாண்மை அரசியற்கட்சிகளினதும் ஒத்துழைப்பை அல்லது நேரடி ஆதரவை பெறமுடியாத நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே ஈ.என்.டி.எல்.எப் என்ற தமிழ்மக்களிடம் ஆதரவில்லாத ஒரு அமைப்பின் மூலமாகப் பிரவேசிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளதோடு,
அத்தோடு கிழக்கை எடுத்துக் கொண்டால் முஸ்லீம்களின் ஆதரவைப் பெறுவது கடிணமான விடயம் என்றும் முஸ்லீம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் கூட, சமாதானப் பேச்சுக்களில் தங்களின் பங்கைப் பற்றிய அக்கறை கொண்டுள்ள இந்நேரத்தில் முஸ்லீம் கட்சிகள் எதுவும் கருணாவிற்கான ஆதரவைத் தெரிவித்து புலிகளைப் பகைக்கமாட்டா எனவும்,
நிதிவளத்தைத் தொடர்ச்சியாகப் பெறுதல் மற்றும் அரசியற்கட்சிக்கான படிமுறைகளை வடிவமைக்கும் வல்லமை கருணாவிடம் இல்லையென்றும் ஆயுதங்களைக் கைவிட முடியாத ஒருவராகவே கருணா இருக்க வேண்டிய நிலையை விடுதலைப்புலிகள் அவருக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்நிலையில் கருணா தோல்வியையே நோக்கிச் செல்வதாகவும், கருணாவின் பிரச்சினைக்கும் விடுதலைப்புலிகள் தங்களின் துரோகிகளிற்கு |இறுதிமுடிவு எடுக்கும்| நிலையே சாத்தியப்படலாம் என்று கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாதம் இணையத்திலருந்து வெட்டப்பட்டது. நன்றி தமிழ்நாதம்

[size=14]<b> !</b>
....................................................................

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->