Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
''பிரபாகரனைப் போல் இருக்கிறாய்..!''
#1
[align=center:3266a3e5d3]<b>''பிரபாகரனைப் போல் இருக்கிறாய்..!''
</b> <i>கலகல கலிங்கப்பட்டி </i>[/align:3266a3e5d3]

பத்தொன்பது மாதச் சிறைவாசத்துக்குப் பிறகு முதன்முறையாகத் தாய்மண் கலிங்கப்பட்டிக்கு வணக்கம் சொல்ல, கடந்த 28-ம் தேதி விஜயம் செய்தார் வைகோ.

வண்ண விளக்குகள், வைகோவின் கட்அவுட்கள், ஈஃபில் டவர், ம.தி.மு.க. கொடி பறக்கும் வெள்ளை மாளிகை என்று தூள் பரத்தியிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் பெரிய பெரிய கோலங்கள்.. பெரிய பண்டிகை மூடுக்கு மாறியிருந்தது ஊர்!

மதுரையிலிருந்து வைகோ வரும் தேசிய நெடுஞ்சாலை முழுக்கவே மக்கள் வெள்ளம். கலிங்கப்பட்டிக்கு முன்னதாகச் சத்திரப்பட்டியில் இருந்து மேடை இருக்கும் இடம் வரை சாரட் வண்டியில் அழைத்துச்சென்று அசத்தி விட்டார்கள்!

வைகோ மற்றும் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வருவதற்கு முன்பு, மேடையில் குட்டித்தலைவர்களின் புயல் பேச்சுக்கள் குபீரிட்டபடியே இருந்தன. திடீரெனத் தலையில் புலிக்குட்டிப் பொம்மையோடு மேடையில் ஓடிவந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தபடி இருந்தனர் சில தொண்டர்கள்!

இரவு எட்டரை மணியளவில் வைகோவினுடைய துணைவியார், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்று எல்லோரும் பத்திரிகையாளர் காலரி அருகே வந்து அமர்ந்தார்கள். அம்மா... எப்ப தாத்தா வருவார், சொல்லும்மா? என்று நச்சரித்துக் கொண்டிருந்தன வைகோ வீட்டுச் சுட்டிகள்!

8.40 மணியளவில் சாரட் வண்டியில் வந்திறங்கிய வைகோ, விறுவிறுவென மேடைக்கு அழைத்து வரப்பட.. மொத்தக் கூட்டமும் எழுந்து நின்றுவிட்டது! கலிங்கம் தந்த சிங்கமே... நாடாளுமன்ற நாயகனே... என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் சிவகாசி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மக்களைப் பார்த்துக் கையசைத்தவர், தன்னுடன் சிறைக்கு வந்த எட்டு பொடா தோழர்களையும் மேடையில் தமக்கு அருகில் உட்கார வைத்தார்.

தடா சுந்தரம் என்பவர் மைக் பிடித்தபோது, பிரபாகரன் மாதிரியே இருக்கிறாய் என்று வைகோவை ஒப்பிட்டுப் பேச.. கூட்டத்தில் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரம் பிடித்தது.

பதினோரு மணிக்கு தன் பேச்சை துவக்கினார் வைகோ. நான் இன்னிக்கு நிறைய பேசப்போறேன். ஏன்னா, கலிங்கப்பட்டியில் இதுதான் என் கடைசி மேடைப் பேச்சு... இனி ஒரு முறை இந்த ஊரில் நான் பேச முடியாது. என் ஊரில் அரசியல் கூட்டம் நடத்துவது எனக்குப் பிடிக்காத ஒன்று என்றவர் லேசுபாசாக அரசியலைத் தொட்டபடியே இரவு ஒரு மணிக்கு பேச்சை நிறைவு செய்தார்.

மொத்தத்தில், கலிங்கப்பட்டியில் அறிவிக்கப்படாத மாநாடு நடந்து முடிந்தது.!

வைகோ ஜெயிலிலிருந்து வெளியே வரும் போதுதான் கறுப்பு சட்டையை மாற்றுவேன்Õ என்று சபதம் எடுத்துக் கொண்டவர்கள் பலர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற தொண்டர் மேடையிலேயே வைகோவின் கையால் சட்டையைக் கழற்றி, வெள்ளை சட்டை அணிந்துகொண்டார்.

இதே மாதிரி சபதம் போட்டிருந்த ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரான சத்யா, சட்டையை மாற்ற முடியாது என்று வைகோவிடம் சொல்லிவிட்டாராம். உங்களை அநியாயமாக ஜெயிலுக்கு அனுப்பிய ஜெயலலிதா என்று பதவியை இழக்கிறாரோ... அன்றுதான் மாற்றுவேன் என்றாராம்.

thanks to jv - vikatan.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
சுவாரசியமாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது உங்கள் செய்தி ...நன்றிகள் வசி...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#4
kuruvikal Wrote:சுவாரசியமாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது உங்கள் செய்தி ...நன்றிகள் வசி...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)