Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் களமே விழிக்காயோ....??!
#1
இங்கு பகரப்படும் கருத்துகள் பல தமிழரின் தேசிய தலைமை மற்றும் தாயக மக்கள் எதிர்ப்புக் கருத்துகள் என்பதில் ஐயமே இல்லை...!

இப்படியான கருத்தாளர்களின் சுய கருத்தல்லாத தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் மறு பிரசுர இடமளிப்பதன் மூலம்
யாழ்களம் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதுடன் தமிழினத் துரோகத்திலும் ஈடுபடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது....!

இங்கு கருத்தாடுபவர்கள் சமகால மக்கள் சார் அரசியல்வாதிகளோ மக்களோடு விடுதலைப் போரில் நின்றவர்களோ நிற்பவர்களோ அல்ல...பலரும் பார்வையாளிகளாக இருந்து காலம் கடத்தியவர்கள் அல்லது துரோகத்தனம் செய்தவர்களாகத்தான் இருப்பர்....இவர்களின் நடுவு நிலைமையும் கருத்துக்களும் உண்மையாக துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து கொண்டு விடுதலை உணர்வையும் சுமக்கும் மக்களை மேலும் வேதனைப்படுத்துமே தவிர அவர்களுக்கு ஆறுதல் அளிக்காது...யாழ்களம் ஏன் இப்படியான சந்தர்ப்பவாத ஆசாமிகளுக்கு தொடர்ந்து கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இடமளிக்கிறது....!

கருத்துச் சுதந்திரம் என்பது மனிதனின் மனிதத்தின் ஆக்கத்தினை விருத்தியை வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர துன்பத்தையும் அழிவையும் தரும் ஒன்றுக்காக இருக்கக் கூடாது...அதற்கு அனுமதிக்கவும் கூடாது....! அப்படி அனுமதித்தால் அது தமிழருக்கு மட்டுமல்ல முழு அப்பாவி மனித இனத்துக்குச் செய்யும் துரோகமாகும்....!

இது தொடர்பில் தமிழ்நாதம் இணையத்தளம் எடுத்திருந்த தமிழர் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில்லை என்பது போன்றதான நிலையை மக்களின் நலன் கருதி யாழ்களம் பரிசீலிக்குமா....???!


<b>[shadow=red:69cf9cafca]இக்கருத்து சரியாக இருக்க வேண்டிய இடத்தை சென்றடைய இங்கு அழுத்துக...![/shadow:69cf9cafca]</b>


----------------------------------------------
இப்பகுதியில் சமகாலத்தில் நிகழும் கருத்தாடல் தொடர்பில் எழுந்த எம் ஐயப்பாடுகளைத் தாங்கி வரும் ஒரு வேண்டுகோள்...!

இதே கருத்து முன்னரும் ஒரு பகுதியில் போடப்பட்டது...அங்கு நிகழும் அகோர கருத்தாடலில் இக்கருத்தும் சிக்கிச் சீரழிவதால்... இதன்பால் பெறப்பட்டும் கருத்து எல்லோரையும் அடைய வேண்டும் எனும் நோக்கில் மீண்டும் இங்கு தரப்படுகிறது...!

:evil: Idea :?: Idea :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
சிந்தியுங்கள்
சித்தம் தெளிந்து
சீராகுங்கள்
சிரசில் கொண்டு
சீர்வழி நில்லுங்கள்
தமிழர் தேசிய தலைமை வழி செல்லுங்கள்...!
வெற்றி உங்கள் வசமாகும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
திரிலோகம் புகழும்
சுந்தர வீர தீர
ராசன் நானே
இமையோராய் இருந்தாலும்
முடி தாழ்ந்து பணிவாரே
இராவணாய நமவென்று

பாடியபடியே இராவணன் வருகிறார் உங்கள் குரல் நிச்சயம் கேட்கும்
\" \"
Reply
#4
அருமை... அருமை... உங்கள் எண்ணக்கிடக்கையுடன் நானும் இணைகிறேன்
தர்மமே வெல்லும்.... இல்லை இல்லை உண்மையே வெல்லும்...இல்லை இல்லை உண்மையான உணர்சிகளே வெல்லும் உண்மையான தமிழ்உணர்சிகள் யதார்த்தங்கள் வெல்லட்டும் வெல்ல வைப்போம் அல்லது யாவரும் அழிவோம்(தமிழர்கள்).... Arrow
Reply
#5
இதிலே எனது எண்ணத்தையும் கூற ஆசைப்படுகிறேன். கருத்துக்கள் என வரும்போது இரு பக்கக் கருத்துக்களும் வரத்தான் வேண்டும். ஆனால் அதிலே சரி பிழைகளை உய்தறிவது வாசகனின் கடமை. சம்மா வாசிக்கும் கருத்துகள் எல்லாம் சரி என்ற ரீதியில் உள்வாங்கக் கூடிய நிலையில் ஒரு வாசகன் இருப்பானேயானால் அவனால் எவருக்குமே பிரயோசனமில்லை.
ஆக, கருத்துக்கள் யாழில் பதிவாவதை அனுமதிக்கத்தான் வேண்டும். இன்றில்லாவிட்டாலும் நாளை ஒரு நாள் இவற்றைப் பார்க்கும்போது அவை ஒரு படிப்பினையாகக்கூட அமையலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#6
thampu Wrote:[quote=மோகன்]வணக்கம்,
.................
தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்பர் மோகன்
யாழ் இணைய தளத்தில் களமாடிகளின் வரவு அண்மைக்காலங்களில் அதிகமாய் இருப்பது கண்டு பேர் உவகை கொள்ளும் உள்ளங்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கென ஒரு பார்வை ஒவ்வொரு விடயத்திலும் இருக்கலாம்...ஏன் ....இருக்கவும் கூடும்..... அது யதார்தமானதே.
இருப்பினும் களத்தில் கருத்து மோதல்கள் வரும் போது <b>''காய்தல் உவத்தல்'' </b>இன்றி யாழ் தளம் இயங்க வழிகோலிவீர்கள் எனில் காலம் கடந்தும் உங்கள் இணைய தளம் பேசப்படும்: [size=24]உங்கள் அணுகுமுறை மற்றைய தளங்களுக்கு தலைமைதாங்கும்
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply
#7
இருப்பக்க கருத்துக்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகவிரோத இனவிரோத கருத்துக்களும் வரலாற்று உண்மைகளைச் சிதைக்கும் அல்லது சீரழிக்கும் கருத்துக்களும் தகவல்களும் விதைக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா....???!

எல்லோரும் உய்த்தறியும் பக்குவத்தில் இருந்திருந்தால் ஏன் தமிழர்களிடத்து ஒரே இலக்குக்குகாக 25 இயக்கங்கள் முளைத்தன...???! அவை சாதித்தது என்ன....????! இன்று நடந்து கொண்டிருப்பது என்ன....???! இவை இன்னும் தொடர்ந்து....சந்ததி சந்ததியாய் தொடர்ந்து நின்று தமிழர்கள் ஏதிலியாய் வாழ வேண்டும் என்பதையா விரும்புகிறீர்கள்....???!

ஒரு இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நீதியும் நியாயமுமான நம்பிக்கை ஊட்டத்தக்கதுமான செய்திகளை தெளிவாக வழங்கி அவர்கள் தம் இதயத்தில் சுமக்கும் வலிகளுடனான கனவுகளுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டுமே தவிர அதைத் தகர்ந்து சுய லாபமோ அல்லது பழைய கறள்களைத் தீர்க்க முயன்று நிற்பதோ அல்லது சந்தர்ப்பவாத குறுகிய இலாபம் தேட நினைப்பதையோ எனியும் எங்கும் அனுமதிக்க முடியாது...அந்தளவுக்கு ஒவ்வொரு ஈழத்தமிழனும் இதயத்தால் காயப்பட்டு வலியுடன் தனது மண்ணில் நீடித்த நிம்மதியான வாழ்வுக்கான விடுதலைக் கனவைச் சுமந்து கொண்டிருக்கின்றான்...!

இது சில விதிவிலக்குகளுக்குப் பொருந்தாது....வேண்டும் என்றால் இருபக்கச் செய்திகளையும் வாசித்து ஈழத்தமிழரிடத்தில் துரதிஸ்டவசமாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் துரோகத்தனத்திற்கு ஒத்தடம் கொடுப்பவர்களும் அதனால் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் விதிவிலக்குகள் இதனால் பயன்பெற வேண்டும் என்றால் இதைத் தொடர்ந்து அனுமதிக்கலாம்...!

:evil: Idea :?: :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
ஏற்கெனவே எழுதிற எழுத்திலை பாதியை கானேல்லை.. ஒருபக்கத்தை தாக்கி எழுதிற கருத்துக்கு மாத்திரம் முன்னுரிமை.. மற்றப்பக்கம் ஏதாவது பதில்கருத்துக்கூட எழுதமுடியாதபடி தணிக்கைமுறை.. இப்படியிருக்க நீங்கள் இப்படி ஏதொ சொல்லுறியள்.. அதுதான் ஏனெண்டு புரியேல்லை..?

10 தளம்வச்சு கத்தி ஒண்டையே பத்துத் தளத்திலையும்போட்டு இஞ்சை அங்கையெண்டு லிங்குகளும் குடுத்து பே. பே.. எண்டு கத்திறதெல்லாம் இனிமேல் வாய்க்காது கண்டியளோ..
பார்க்கிறவங்களுக்கு சிரமில்லாமல் ஒவ்வொரு தளம் அங்கை அங்கை அதைவிட தனியார்.. சுதந்திர ஊடகங்களும் இருக்கிதுகள்.. பார்க்கவேண்டியவன் பார்க்கிறான்.
இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா சுதந்திரக் காற்று பட ஆரம்பிச்சிருக்கிது.. பார்ப்பம் எங்கை போகுதெண்டு..
Truth 'll prevail
Reply
#9
sOliyAn Wrote:இதிலே எனது எண்ணத்தையும் கூற ஆசைப்படுகிறேன். கருத்துக்கள் என வரும்போது இரு பக்கக் கருத்துக்களும் வரத்தான் வேண்டும். ஆனால் அதிலே சரி பிழைகளை உய்தறிவது வாசகனின் கடமை. சம்மா வாசிக்கும் கருத்துகள் எல்லாம் சரி என்ற ரீதியில் உள்வாங்கக் கூடிய நிலையில் ஒரு வாசகன் இருப்பானேயானால் அவனால் எவருக்குமே பிரயோசனமில்லை.
ஆக, கருத்துக்கள் யாழில் பதிவாவதை அனுமதிக்கத்தான் வேண்டும். இன்றில்லாவிட்டாலும் நாளை ஒரு நாள் இவற்றைப் பார்க்கும்போது அவை ஒரு படிப்பினையாகக்கூட அமையலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

உண்மை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
thampu Wrote:[quote=thampu][quote=மோகன்]வணக்கம்,
.................
தளத்தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு எமது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்பர் மோகன்
யாழ் இணைய தளத்தில் களமாடிகளின் வரவு அண்மைக்காலங்களில் அதிகமாய் இருப்பது கண்டு பேர் உவகை கொள்ளும் உள்ளங்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கென ஒரு பார்வை ஒவ்வொரு விடயத்திலும் இருக்கலாம்...ஏன் ....இருக்கவும் கூடும்..... அது யதார்தமானதே.
இருப்பினும் களத்தில் கருத்து மோதல்கள் வரும் போது <b>''காய்தல் உவத்தல்'' </b>இன்றி யாழ் தளம் இயங்க வழிகோலிவீர்கள் எனில் காலம் கடந்தும் உங்கள் இணைய தளம் பேசப்படும்: [size=24]உங்கள் அணுகுமுறை மற்றைய தளங்களுக்கு தலைமைதாங்கும்

ஒமோம் அவரை பப்பாவிலை ஏத்துங்கோ தம்பி மோகன் நீ உப்புச் சப்பின்றி வாற கருத்தையெல்லம் களத்திலை ஏத்து நாளைக்குக் களம் போடுற ஆக்கள் எல்லம் உமக்குப் பின்னாலை வருவினம் எண்டு

தம்பி நீ முதல்லை ஆயுதம் தூக்கு ஈழத்தமிழினமே பின்னாலை வரும் எண்டு ஒவ்வொரு இயக்கமா கிண்டிவிட்டு மூத்த புரட்சியாளர் எல்லாம் ஓடிப்போய் வெளிநாட்டிலை நிண்டு உந்த மாத்துக் கருத்துகளைத் தானே முன் வைக்கினம்

மாத்துக் கருத்து என்னவெண்டா ஒரு அந்த நாளைய புரட்சியாளர் சொல்லுறார் உவ பாலசிங்கத்தின்ரை மனுசி எழுதின புத்தகத்திலை மனுசி சொன்னாவாம் தாடி வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறோம் எண்டு அலையிறவையைப் பற்றி தலைவர் எண்டைக்கும் மதித்ததில்லையாம்
அவவுக்கென்ன தெரியும் கஸ்றோவும் சோக்கிறடீசும் தாடி வைச்சுக் கொண்டு தான் இருந்தவை தாடி என்பது அறிவின் ஒளி என்று அப்பிடி இவர் சொல்லுறார்

இதுதான் இவையளைப் பொறுத்தளவிலை மாத்துக் கருத்து சனம் மாவுக்கும் சீனிக்கும் அடிபடேக்கை மாக்ஸியம் கதைக்கிற ஆக்கள் சாறிக்கு வழியில்லாமல் சனம் திரிய வலது சாரியாம் இடது சாரியாம் உதிலை கொஞ்சம் கிழிச்சுத் தாங்கோ கோவணமாவது கட்டுவம்

உங்கை நிறையப் பேர் என்ன நினைச்சுக் கொண்டிருக்கினம் புலி செய்யுற தப்பையும் சுட்டிக் காட்டத்தான் வேணும் அதை சொந்தப் பேரிலை எழுதக் கூடிப் பயம் அவங்கள் போடுவாங்கள் எண்ட பயம் இருந்தால் எதுக்கு உந்த வீரப் பேச்செல்லாம்.

சும்மா சும்மா புலி அப்பிடிச் செய்திற்றுது இப்பிடிச்செய்திற்றுது எண்டு புறணி பாடுறதை விட்டிட்டு உங்களாலை என்ன செய்ய முடிஞ்சுதெண்டு சொல்லுங்கோ இந்தக் களத்திலை போடலாம் அவன் சொன்னான் புலி அப்பிடியாம் இவன் சொன்னான் இங்கை இப்பிடியாம் எண்டு ஓட்டை வாயன் ஊரைக் கெடுத்தான் எண்ட மாதிரி நாலு கதையையும் போட களம் எதுக்கு அதுக்குத் தான் உந்த தாடி வைச்ச யோகர் சுவாமியள் அருள் வாக்குச் சொல்லீனமே வெப்சைட் வழிய அங்கை சொல்லுங்கோ

ஆமி செய்ததை சொல்லுங்கோ ஈ.பி.டீ.பி செய்யுறதை சொல்லுங்கோ பழைய காலத்து ஈ.பியள்,கூட்டணிக் காரர் ப்ளொட்டுகள் செய்த அட்டகாசங்களைச் சொல்லுங்கோ புலி அனுரதபுரத்திலை சிங்கலவரை கொண்டது எண்டு சொல்லேக்கை உங்கடை உங்கடை ஆட்கள் எத்தினை பேரை கொண்டவை எண்டு சொல்லுங்கோ

புலி மாத்து இயக்க காரரை சுட்டதெண்டு சொல்லுற திருவாயாளை ஈ.பிக் காரர் எத்தினை புலியை சுட்டவை டெலோ எத்தினை புளொட்டை சுட்டுது புளொட் எத்தினை டெலோவைச் சுட்டுது எல்லாருமா எத்தினை தமிழ்ப் பெட்டையளை கற்பழிச்சவை உது எல்லாத்தையும் சொல்லுங்கோ நீங்கள் சொல்லுறது உண்மையிலை மாத்துக் கருத்து எண்டு சனம் சொல்லும்
Reply
#11
அதுமட்டுமில்ல வல்லை இன்று தாயகத்தில மக்களுக்கு இருக்கிற தீர்க்கதரிசனம் கூட உந்த மாற்றுக் கருத்தெண்டு தங்கட பழைய பிரச்சனையளுக்கு புதிசா வியாக்கியானம் கொடுத்து உயிர்ப்பிச்சு பிச்சை எடுக்க நிக்கிற ஒரு கூட்டத்துக்கு இல்ல...இன்னும் கொஞ்சம் அடியும் தெரியாம நுனியும் தெரியாம இருபக்கம் ஒரு பக்கம் எண்டு கொண்டு நேரம் கழிக்குதுகள் இதே களத்தில....அவையட்ட ஒண்டு கேக்கிறம் உங்களுக்கு இங்கு கருத்துச் சுதந்திரம் இல்லை எண்டு கருதினா உங்க எத்தனை தமிழ் தளங்கள் இருக்கு அங்க போய் உதுகள எழுதுங்கோவன்...ஏன் இங்க மட்டும்தான் உங்கட ஆசாமி வித்தைகளைக் காட்டி நிக்கிறியள்...???! :roll:

உலகத்தில ஒருத்தருமே சுதந்திரக் காத்தைச் சுவாசிக்க ஏலாமல் இருக்குறம் எண்டு கவலையோட இருக்க இங்க ஒரு சிலருக்கு தமிழர் தேசியம் பிளவுபட்டு சிதைந்து போறது சுதந்திரக் காற்றாப்படுகுதாம்.... :roll: இவர்கள் உண்மையில் தமிழர்களா...அல்லது...அகதி அந்தஸ்துக்கு மட்டும் தமிழர்களானவையோ.....துரோகிகள் அப்படித்தானே...ஏன் உங்க எத்தினை பேர் அகதி அந்தஸ்து எடுக்க அங்க தாயகத்தில இருந்த வீடுகளையும் நல்ல விலைக்கு வித்துப் போட்டு பெடிபெட்டைகளுக்கு கொழுத்த சீதனத்தில வெளிநாட்டு டாக்குத்தர் மாப்பிள்ளைகளையள் தேட அகதி அந்தஸ்து தேடினவை எண்டதை கணக்கெடுப்பில எடுத்தா நிறையப் பேர் லைனில நிப்பினம்...இவை போராட்டத்துக்கோ தமிழரின் தேசிய இனப்பிரச்சனையாலையோ ஒரு சதமேனும் இழந்திருக்கவும் மாட்டினம்...ஒரு துளி இரத்தமும் சிந்தி இருக்கவும் மாட்டினம்....இவைதான் இப்ப மாற்றுக் கருத்தில கருத்துச் சுதந்திரத்தில மும்மரமா நிக்கினம்....அதுவும் அநியாயங்களுக்கு நியாயம் தேட....உங்க அதே புலியையும் போராட்டத்தையும் சொல்லி அகதி அந்தஸ்து வாங்கினவை இப்ப அதே புலிக்கும் போராட்டத்துக்கும் என்ன செய்யினம்...பல பேர் கொள்ளி செருகி நிக்கினம்....இன்னும் சில பேர் மற்றவனைக் காட்டிக் கொடுத்து தாங்கள் எடுத்த அகதி அந்தஸ்தை மற்றவனுக்கு கொடுக்கக் கூடாதெண்டு சாட்சியும் சொல்லினமாம்...அதில பிழைப்பும் நடக்குதாம்..இவைதான் இப்ப மாற்றுக்கருத்திலையும் மும்மரமா நிக்கினம்.......உள்ள உளவுப் படைகளும் இவைக்கு பணமும் வழங்கி நிக்குதாம்...ஏனெண்டா இவைக்கு மற்றவனும் தன்னை மாதிரி வந்திடுவான் எண்ட பயம்..இவைதான் இப்ப சுதந்திரத்தைப் கருத்துச்சுதந்திரத்தைப் பற்றியும் அதிகம் கதைக்கினம்....அப்படி என்றால் என்ன எண்டு ஒழுங்காத் தெரியுமோ தெரியாது...காரணம் தங்கட அநியாயங்களை மூடி மறைக்க பொய்களை அவிழ்த்துவிட...! Idea

சுயநலவாதிகள் தங்கட நடத்தையாலையே தங்களைக் காட்டிக் கொடுத்திடுவினம்...அதுக்கு மேல ஏன் போர்வைகள் அவர்களுக்கு...சரி இவை சொல்லுறதைக் கேக்க சனம் விரும்புதெண்டா என்ன சும்மா ஒரு 35 டொலரைககட்டி ஒரு களத்தை நடத்தி தங்கட சுதந்திரத்தைக் காட்டலாமே...ஏன் மற்றவையின்ரைக்க வந்து குழப்பிக்கிக் கொண்டு நிக்க வேணும்....??????! இது என்னத்தைக் காட்டுது இவை மாற்றுக் கருத்தெண்டு உள்ளதைக் கெடுத்து எதிரிக்கு வால்பிடிச்சு எலும்புத் துண்டு பொறுக்க நிக்கினம் எண்டதை....! இவர்கள் உண்மையில் தமிழர் தேசியத்தின் எதிரிகள்...துரோகிகள்....! :!:

:twisted: :evil: Idea :oops:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
எதையோ மிஸ்பண்ணீட்டன்போலை.. கனக்கச் சொல்லுறியள்.. உதெல்லாம் இந்தக் களத்திலை வந்ததோ.. எப்ப வந்தது.. எங்கை இருக்கிது சொல்லுங்கோ.. போய்ப் பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)